Word |
English & Tamil Meaning |
---|---|
சகளதத்துவம் | cakaḷa-tattuvam n. <>sakala+. (šaiva.) The function of God in which the principle of energy predominates over that of wisdom; கிரியைமிகுந்து ஞானங் குறைந்த ஈச்சுரதத்துவம். (சி. சி. 1, 65, ஞானப்.) |
சகளபஞ்சகம் | cakaḷa-pacakam n. <>id.+. The five categories, viz., drink, fish,flesh,pose and coition, required in Sakaḷa worship of makāviratar; மகாவிரதருடைய சகளவுபாசனைக்குரிய மது மச்சிய மாங்கிச முத்திரை இணைவிழைச்சு என்பன. (தக்கயாகப். 51,உரை.) |
சகாசீரகம் | cakācīrakam n. Caraway; சீமைச்சீரகம். (இந்துபா. 96.) |
சகு | caku n. <>Malay. sagu. Sago; சவ்வரிசி. (மூ.அ.) |
சகுலகண்டம் | cakula-kaṇṭam n.<>šakula+. A kind of fish; பொன்வண்ணமீன். Pond. |
சங்கடை | caṅkaṭai n. prob. saṅghaṭṭa. The last of the three stages of man's life; ஆயுட்காலத்தின் மூன்று பகுதிகளுள் கடைப்பகுதி. (W.) |
சங்கதூதி | caṅka-tūti n. <>saṅga-dūtī. Procuress; கூட்டிக்கொடுப்பவள். (யாழ்.அக.) |
சங்கதை | caṅkatai n. <>saṅgati. News; சங்கதி. Loc. |
சங்கபதம் | caṅka-patam n. <>šaṅkha+. A treatise on Hindu law; தருமநூல்களு ளொன்று. (W.) |
சங்கமலிங்கம் | caṅkama-liṅkam n. <>jaṅgama+. Person belonging to the Jaṅgama sect; சங்கமவகுப்பினன். (W.) |
சங்கரப்பாடியர் | caṅkarappāṭiyar n. See சக்கரப்பாடியர். (S. I. I. V, 144.) . |
சங்கரர் | caṅkarar n. <>samhāra. Warriors; போர்வீரர். (யாழ்.அக.) |
சங்கருடம் | caṅkaruṭam n. <>saṅkarṣa. Opposition; எதிரிடை. (யாழ்.அக.) |
சங்கலனம் | caṅkalaṉam n. <>saṅkalana. Collecting; தொகுக்கை. நீர்வேலிச் சங்கரபண்டிதரவர்களாற் சங்கலனஞ் செய்யப்பட்டு . . . பதிப்பிக்கப்பட்டது (தாதுமாலை, முகப்புப்பக்கம்). |
சங்கலோஷ்டம் | caṅkalōṣṭam n. prob. saṅga. (W.) 1. Sexual connection; புணர்ச்சி. 2. Illicit intercourse; |
சங்கற்பசிராத்தம் | caṅkaṟpa-cirāttam n. <>சங்கற்பம்+. The šrādda performed without sacrificial oblations; அக்கினிகாரியமின்றிச் செய்யுஞ்சிராத்தம். Brāh. |
சங்காதம் | caṅkātam n. <>saṅghāta. A thing that always goes along with another thing; concomitant; கூடவருவது. வங்காரமு. . . மடந்தையரும் சங்காதமோ (கந்தரலங். 59). |
சங்காராதனம் | caṅkārātaṉam n. <>samhāra+. (šaiva.) A yogic posture; யோகாசனவகை. (தத்துவப்.108,உரை.) |
சங்கிதாமந்திரம் | caṅkitā-mantiram n. <>samhitā-mantra (šaiva.) A group of mantras; மந்திரவகை. (தத்துவப். 70,உரை.) |
சங்கிராமம் | caṅkirāmam n. <>saṅkrāma. Hill path; மலைமேல் வழி. (யாழ்.அக.) |
சங்கிலிகரணம் | caṅkili-karaṇam n. <>saṅkalīkaraṇa. Unnatural coition; இயற்கைக்கு மாறான புணர்ச்சி. (யாழ்.அக.) |
சங்கீதி | caṅkīti n. <>saṅgīti. Conversation; சம்பாஷணை. (யாழ்.அக.) |
சங்குநகம் | caṅku-nakam n. Nākuṇam, an aromatic substance; நாகுணம் என்னும் வாசனைப் பண்டம். (நாநார்த்த. 435, உரை.) |
சங்குப்பட்டினி | caṅku-p-paṭṭiṉi n. <>சங்கு+. A kind of fast; ஒரு வகை நோன்பு. Loc. |
சங்குலிகயுத்தம் | caṅkulika-yuttam n. <>saṅkulika+. Hand-to-hand fight; தொந்தயுத்தம். (வேதாரணி. பக்.124, குறிப்.) |
சங்குவிரியன் | caṅku-viriyaṉ n. <>சங்கு+. A variety of snake; பாம்புவகை. Loc. |
சங்கைப்பாடு | caṅkai-p-pāṭu n. <>சங்கை+படு-. Doubt, uncertainty; ஐயப்பாடு. எங்கள் குடியிருப்புச் சங்கைப்பா டென்னத்தகாது (தெய்வச். விறலிவிடு. 233). |
சங்கையீனம் | caṅkai-y-īṉam n. <>id+. Indecency, as in talk or conversation; அசப்பியம். அவன் சங்கையீனமாகப் பேசுகிறான். (W.) |
சச்சிதானந்தவெளி | caccitāṉantaveḷi n. Rock-salt; கல்லுப்பு. (மூ.அ.) |
சச்சை 1 | caccai n. 1. cf. செர்ச்சை. (அக. நி.) Liquid of thick consistency, as sandal paste; செறிகுழம்பு. 2. Jacket, coat; |
சச்சை 2 | caccai n. cf. சர்ச்சரவு. Quarrel; சண்டை. சச்சைவருமுன்னே நடவென்றாள் (தெய்வச். விறலிவிடு. 471.) |