Word |
English & Tamil Meaning |
---|---|
சமதூரஅட்சரேகை | cama-tūra-aṭcarēkai n. <>sama+dūra+. Parallel of latitude; பூமியின் சமரேகைக்கு வடக்கும் தெற்கும் உள்ள சமதூர அளவுகளைக் காட்டும் இரேகைகள். (M. Navi. 57.) |
சம நிலை | cama-nilai n. <>id.+. (Nāṭya.) A pose, one of aivakai-p-pātam, q. v.; ஐவகைப் பாதங்களு ளொன்று. (சிலப். பக். 81.) |
சமநிலைச்சக்கரவாளம் | camanilai-c-cakkaravāḷam n. <>சமநிலை+. Rational horizon; கணிதத்தால் நிருணயித்துக்கொண்ட தொடுவானம். |
சமநிறை | cama-niṟai n. <>சமம்+. Equilibrium; சமன் தூக்கிய நிலை. Pond. |
சமயநடை | camaya-naṭai n. <>சமயம்+. Religious practice; சமயாசாரம். சமயநடை சாராமல் (தாயு. மௌன. 4). |
சமரதம் | cama-ratam n. <>sama-ratha. A class of chariots, one of four iratam; நால்வகை இரதங்களுள் ஒன்று. (பத்ம. தென்றல்விடு. 67, உரை.) |
சமரரேகை | camara-rēkai n. <>samara+. (Palmistry) A line in palm of hand; கை இரேகைவகை. (திருவாரூ. குற. Ms.) |
சமனை | camaṉai n. prob. samana. (šaiva.) A yoga, one of cōṭaca-kalā-pirācāta-yōkam, q. v.; சோடசகலாபிராசாதயோகத்தினுள் ஒன்று. வெளிசமனையொளி நூறாயிரம் (தத்துவப். 141.) |
சமாகோராத்திரம் | camākōrāttiram n. <>sama+ahōrātra. Equinox; சமராத்திரம். Pond. |
சமாச்சிரயம் | camāccirayam n. <>sam-āšraya. Dependence of a weak person upon his protector; ஆற்றலில்லாத ஒருவன் தன்னைக் காப்பாற்றுபவனைச் சார்ந்தொழுகுகை. (சுக்கிரநீதி, 336.) |
சமாதானநீதிவான் | camātāṉa-nītivāṉ n. <>சமாதானம்+. Justice of the peace; ஒரு வகை நீதியதிகாரி. (J.) |
சமாதானம் | camātāṉam n. <>sam-ā-dāna. Concentration of mind; மனவொருமைப்பாடு. (நாநார்த்த. 909.) |
சமாதானி | camātāṉi n. <>சமாதானம். Even-tempered person; அமைதியுடையவ-ன்-ள். (யாழ். அக.) |
சமாதிக்கல் | camātikkal n. Small intestines; மணிக்குடல். (மூ. அ.) |
சமாலம்பம் | camālampam n. <>samālambha. Smearing; coating; பூசுகை. (சங். அக.) |
சமாலி | camāli n. Bouquet; பூச்செண்டு. (யாழ். அக.) |
சமியன் | camiyaṉ n. prob. samyama. (Jaina.) Arhat; அருகன். (W.) |
சமீரம் | camīram n. <>samīra. cf. சமரம். Battle, fight; போர். (W.) |
சமுக்காளக்கோட்டுப்புலி | camukkāḷa-k-kōṭṭu-p-puli n. <>சமுக்காளம்+கோடு+. A kind of tiger; புலிவகை. (யாழ். அக.) |
சமுகங்கொடு - த்தல் | camukaṅ-koṭu- v. intr. <>சமுகம்+. To attend, used respectfully; பிரசன்னமாயிருத்தல். அத்தருணம் தாங்களும் சமுகங்கொடுத்துச் சிறப்பித்துச் சொல்லுமாறு வேண்டுகின்றோம். |
சமுத்திரச்செடி | camuttira-c-ceṭi n. prob. சமுத்திரம்+. Elephant creeper; சமுத்திரப்பாலை. Pond. |
சமுத்திரப்புளியன் | camuttira-p-puḷiyaṉ n. prob. id.+புளி. Scimitar pod; இரிக்கி. Loc. |
சமுன்னதி | camuṉṉati n. <>sam-unnati. Self-conceit, arrogance; அகந்தை. (W.) |
சமூகனி | camūkaṉi n. <>sam-ūhanī. Broom; துடைப்பம். (யாழ். அக.) |
சமைப்பு | camaippu n. <>சமை-. Gift to a charity; தருமக்கொடை. (S. I. I. vii, 55.) |
சமையணன் | camaiyaṇaṉ n. A village deity; ஒரு கிராமதேவதை. தள்ளற வூர்காக்குஞ் சமையணனே (பஞ்ச. திருமுக. 656.) |
சமையமண்டபம் | camaya-maṇṭapam n. <>samaya+. Audience chamber of a king; அரசன் காட்சியளிக்கு மண்டபம். சமையமண்டப நிறைந்திருந்த திரிசங்குமைந்தனை (அரிச். பு. வேட்டஞ்செய். 16). |
சயமங்கலம் | caya-maṅkalam n. <>jaya+. A horse of variegated colour with eyes like cats' eye; வைடூரியம்போன்ற கண்ணும் பல நிறத்தினையுமுடைய குதிரை. (சுக்கிரநீதி, 317.) |
சயலட்சுமி | caya-laṭcumi n. <>id.+. The Goddess of Victory; சயமகள். |
சயனாதனம் | cayaṉātaṉam n. <>šayana+. (šaiva.) A yogic posture; யோகாசன வகை. (தத்துவப். 109, உரை.) |
சயிலுப்பு | cayiluppu n. perh. šaila+. Glass-gall; வளையலுப்பு. (மூ. அ.) |
சர்க்காரஹஸ்மரி | carkkarā-hasmari n. <>šarkarā+. Gravel; அஸ்மரிரோகம். (இங். கை.) |
சர்க்கரைக்கேளி | carkkarai-k-kēḷi n. <>சர்க்கரை+. A kind of plantain; வாழைவகை. Loc. |