Word |
English & Tamil Meaning |
---|---|
சர்க்கரைப்பருப்பு | carkkarai-p-paruppu n. <>id.+. A confectionary; பணிகார வகை. Pond. |
சர்க்கரைபேரி | carkkarai-pēri n. <>id.+. A kind of pear; பேரிவகை. Loc. |
சர்க்கரைவட்டு | carkkarai-vaṭṭu n. <>id.+. Ball of sugar; வெல்லக்கட்டி. (S. I. I. vii, 311.) |
சர்க்காரூழியம் | carkkār-ūḻiyam n. <>சர்க்கார்+. Work done for Government without remuneration; ஊதியமின்றி அரசாங்கத்துக்குச் செய்யும் வேலை. (R. T.) |
சர்ப்பாரூடம் | carppāūṭam n. <>sarpa+. (Astrol.) A mode of prediction; ஆருடவகை. (தஞ். சர. iii, 34.) |
சர்ப்பிராகி | carppirāki n. <>Persn sarbarāhi. Providing supplies; சர்ப்பிராசி. |
சர்ப்பிராயி | carppirāyi n. See சர்ப்பிராகி. . |
சர்மாசனம் | carmācaṉam n. <>சர்மம்+. (šaiva.) A yogic posture; யோகாசனவகை. Loc. |
சர்வஉத்திரவு | carva-uttiravu n. <>sarva+. Carte blanche, signed paper given to a person to write his own terms on it; இஷ்டப்படி உத்தரவு முதலியன எழுதிக்கொள்ளும்படியாக ஒருவனுக்குக் கையெழுத்திட்டுக்கொடுத்த காகிதம். Pond. |
சர்வகலாசாலை | carva-kalā-cālai n. <>id.+.kalā+. University; பல்கலைக் கழகம். Mod. |
சர்வகலையகராதி | carva-kalai-y-akarāti n. <>id.+கலை+. Encyclopaedia; எல்லாக் கலைகளையும் விவரிக்கும் அகராதி. Pond. |
சர்வசத்திமத்துவம் | carva-cattimat-tuvam n. <>id.+šakti-mat+. Omnipotence; சர்வவல்லமையுடைமை. (விவேகசிந். பக். 4.) |
சர்வரசம் | carva-racam n. <>id.+. Common salt; கறியுப்பு. (R.) |
சர்வவித்தியாகரநூல் | carva-vittiyākaranūl n. <>id.+vidyākara+. See சர்வகலையகராதி. Pond. . |
சர்வன் | carvaṉ n. <>šarva. One of ēkātaca-ruttirar, q.v.; ஏகாதசருத்திரரு ளொருவர். (தக்கயாகப். 443, உரை.) |
சர்வாங்கசவரம் | carvāṅka-cavaram n. <>sarva+aṅga+. Shaving the whole body; உடல்முழுதும் மயிர்கழிக்கை. Loc. |
சர்வாங்கவாயு | carvāṅka-vāyu n. <>id.+.id.+. A disease; நோய்வகை. (கடம்பு. பு. இல¦லா. 132.) |
சர்வாத்துமகத்துவம் | carvāttumakattuvam n.<>id.+ātman+tva. All-pervasiveness; immanence; எல்லாவற்றிலும் ஊடுருவியிருக்கை. (விவேகசிந்.4.) |
சர்வாதிகாரி | carvātikāri n. <>sarvādhikārin. Dictator; அரசியல் முதலிய காரியங்களைத் தனித்து நிர்வகிப்போன். Mod. |
சர்வாதித்தியம் | carvātittiyam n. <>sarva+. Public feast; பெருவிருந்து. |
சரகுண்ணி | carakuṇṇi n. <>சரகு+. A species of small cattle-tick; சிறுவுண்ணி வகை. (ஈடு, 1, 5, 5, ஜீ.) |
சரசாங்கி | caracāṅki n. <>sarasāṅgī. (Mus.) A primary rāga; மேளகர்த்தாக்களு ளொன்று. (சங். சந். 47.) |
சரணகோசம் | caraṇa-kōcam n. <>caraṇa+. Stockings; மேற்சோடு. Pond. |
சரத்து | carattu n. prob. சிரத்தை. 1. Diligence; சிரத்தை. சரத்துளதீரன். (பிரதாப. விலா. 2.). 2. cf. ஷரத்து. Wager; |
சரப்பலகை | cara-p-palakai n. <>சரம்+. Tie-beam; தூண்களுக்கு மத்தியிற் செல்லும் பலகை. Tj. |
சரமண்டலம் | cara-maṇṭalam n. cf. சுரமண்டலம். Curamaṇṭalam, a musical instrument; சுரமண்டலம். தம்புரு வீணை சரமண்டலம் (மான்விடு. 240). |
சரமதேகதாரி | carama-tēka-tāri n. <>சரமம்+தேகம்+. (Jaina.) One who has taken a mortal body for the last time before final deliverance; முத்திக்கு முன்னுள்ள கடைசி சரீரத்தை யுடையவன். |
சரமாலை | cara-mālai n. <>சரம்+. Festoon; தோரணமாலை. (யாழ். அக.) |
சரமுல்லை | cara-mullai n. <>id.+. Tooth; பல். (யாழ். அக.) |
சரவை | caravai n. Coarseness; roughness; பரும்படி. Pond. |
சரவைக்கணிப்பு | caravai-k-kaṇippu n. <>சரவை+. Rough estimate; உத்தேச மதிப்பு. Pond. |
சரஸ்வதி | carasavati n. <>sarasvatī. (Mus.) A specific melody-type; இராகவகை. (பரத. ராக. 104.) |
சரஸ்வதிபண்டாரம் | carasvati-paṇṭāram n. <>sarasvatī+. Library; புத்தகசாலை. சரஸ்வதிபண்டாரத்தார் (M. E. R. 277 of 1913). |