Word |
English & Tamil Meaning |
---|---|
சாலிகைத்தறி | cālikai-t-taṟi n. <>šālika+. An ancient tax; பழைய நாணயவகை. (S. I. I. i, 91.) |
சாலிகோத்திரம் | cālikōttiram n. <>šālihōtra. Horse; குதிரை. (யாழ். அக.) |
சாலியன் | cāliyaṉ n. <>šālika. Cloth; ஆடை. (நேமிநா. 21, உரை.) |
சாலியன்கூறை | cāliyaṉ-kūṟai n. <>சாலியன்+. A kind of saree; சேலைவகை. Loc. |
சாலுரிங்கின் | cāluriṅkiṉ n. Running rigging; பறுவான்கள் பாய்கள் முதலியவற்றைச் சேர்ந்த கயிறு அல்லது சங்கிலி. (M. Navi. 85.) |
சாலேகம் | cālēkam n. cf. சாலகம். Drain in a house; சலதாரை. சாலேக மென்பது குலாவு நடைமனை. (தாயு. சச்சிதா. 2.). |
சாலேயம் | cālēyam n. perh. šālika. Woollen cloth; கம்பளித்துணி. (யாழ். அக.) |
சாவகன்குறிஞ்சி | cāvakaṉ-kuṟici n. <>சாவகன்+. (Mus.) A mode in kuṟici-t-tiṟam; குறிஞ்சித்திறந்து ளொன்று. (யாழ். அக.) |
சாவனம் | cāvaṉam n. <>sāvana. Time from sunrise to sunset; சூரியோதய முதல் அஸ்தமனம் வரையுள்ள காலம். (சுக்கிரநீதி, 107.) |
சாவி - த்தல் | cāvi- 11 v. tr. Caus. of சா-. To cause to die; சாவப் பண்ணுதல். (தொல். எழுத். 76, இளம்பூ) |
சாவுகொட்டு | cāvu-koṭṭu n. <>சாவு+. A mode of beating the drum to indicate the death of a person; சாவு குறிக்கும் பறைமுழுக்கு. Colloq. |
சாவுமணி | cāvu-maṇi n. <>சா-. Death-knell; கிறிஸ்தவர்க்குள் ஒருவர் இறந்தபொழுது கோயிலில் அடிக்கும் மணி. Chr. |
சாளகபைரவி | cāḷaka-pairavi n. (Mus.) A specific melody-type; இராகவகை. (பரத. ராக. 102.) |
சாளம் | cāḷam n. perh. jāla. cf. சாளரம். Window பலகணி. மலயத் தனிக்கால் வரசாளந்தைவந் துலவ (சொக்கநா. உலா, 42). |
சாளையப்பட்டு | cāḷaiya-p-paṭṭu n. <>சாளை+. Soldier's lines; படைவீரர்கள் தங்குங் குடிசைகளுள்ள இடம். சாளையப்பட்டு சளப்பட்டு (மான்விடு. 112). |
சானம் | cāṉam n. cf. சாணை. (யாழ். அக.) 1. Millstone; அம்மி. 2. Touchstone; |
சானுக்கிரகம் | cāṉukkirakam n. perh. samskrta. cf. சனுக்கிரகம். Sanskrit; வடமொழி. (யாழ். அக.) |
சானுவாதனம் | cāṉu-v-ātaṉam n. <>jānu+āsana. (šaiva.) A yogic posture; யோகாசனவகை. (தத்துவப். 107.) |
சாஸ்திரபேதி | cāstirapēti n .cf. சாத்திரவேதி. A kind of ore; உலோகங் கலந்த மணல் வகை. (கை. மூ.) |
சிக்கங்கோல் | cikkaṅ-kōl n. <>சிக்கம்+. Forked comb for dressing the hair; சிடுக்கு வாரி. சீப்பு சிக்கங்கோலுந் தேன்மொழிக்கு வாங்க லுற்றாள் (கோவ. க. 88). |
சிக்கடம் | cikkaṭam n. prob. சிக்கு-. Snare; பட்சியைப்படுக்கும் வலை. பறவை சிக்கடத்திற் பட்ட வெனத் தேய்ந்தனவே (பஞ்ச. திருமக. 167). |
சிக்கம் | cikkam n. perh. šikhā. Crown, top of the head; உச்சி. (அக. நி.) |
சிக்கல் | cikkal n. A kind of black load-stone; காக்கைக் கல். (யாழ். அக.) |
சிக்கறுப்பு | cikkaṟuppu n. <>சிக்கு+அறு-. Conclusion, decision; முடிவு. Pond. |
சிக்காரம் | cikkāram n. prob. sīt-kāra. Lamentation, weeping; அழுகை. (யாழ். அக.) |
சிக்குச்சிறகு | cikku-c-ciṟaku n. <>சிக்கு+. cf. சிக்குச்சிலுகு. Tangle; சிக்கல். மேலேயிருக்கிற சிக்குச்சிறகெல்லாம் அறுத்துவிட்டு (தமிழறி. 38). |
சிகதாமூத்திரம் | cikatā-mūttiram n. <>sikatā+. Gravel, a disease of the kidneys; மூத்திரத்தில் கல்விழும் நோய். (இங். வை.) |
சிகப்பகில் | cikappakil n. <>சிவப்பு+அகில். Shingle tree; மலைக்கொன்றை. (L.) |
சிகரம் | cikaram n. prob. šri-kara. cf. சீகரம். Yak; கவரிமா (அக. நி.) |
சிகஸ்து | cikastu n. <>persn. šikast. Disrepair; பழுதுற்றநிலை. (P. T. L.) |
சிகாமுத்திரை | cikā-muttirai n. <>šikhā+. (šaiva.) A hand-pose in worship; முத்திரைவகை. (சைவாநுட். வி. பக். 15.) |
சிகாரியட்டவணை | cikāri-y-aṭṭavaṇai n. <>செய்+காரியம்+. Index olf items of work to be done in a temple; செய்காரிய அட்டவணை. Loc. |