Word |
English & Tamil Meaning |
---|---|
சிந்தாசமத்தி | cintā-camatti n. <>cintasamasyai. Trial of poetic skill by which the competitors are required to divine the thoughts of a person and give the same in verse form; பிறர் கருத்தினை நுட்பமதியால் உணர்ந்துபாடுங் கவித்திறமை. (தமிழ்நா. பக். 5.) |
சிந்தாமணி | cintāmaṇi n. (Mus.) A specific melody-type; இராகவகை. (பரத. ராக. 103.) |
சிந்திபிந்தி | cinti-pinti n. prob. chinna+ bhinna. Shred, shattered bit; சின்னாபின்னம். கட்டுக்குலைந்து சிந்திபிந்தியாய்ப் போயிற்றிறே (திவ். பெரியாழ். 2, 1 5 வ்யா. பக். 224). |
சிந்துராமக்கிரியை | cinturāmakkiriyai n. (Mus.) A specific melody-type; இராகவகை. (பரத. ராக. 104.) |
சிந்துலவணம் | cintu-lavaṇam n. <>சிந்து+. Sea salt; கடலுப்பு. (W.) |
சிந்துவாரம் | cintu-vāram n. <>sindhu+. Sea; கடல். (அக. நி.) |
சிப்பந்தி | cippanti n. <>Persn. sibandi. Armed police; ஆயுதந் தரித்த காவற்படை. (G. Md. D. i. 197.) |
சிப்பிலாட்டி | cippilāṭṭi n. Trouble; தொந்தரை. (யாழ். அக.) |
சிபிடம் | cipiṭam n. <>cipiṭa. A kind of gem; இரத்தினவகை. (சுக்கிரநீதி, 186.) |
சிபுகம் | cipukam n. <>cibuka. Cheek; கன்னம். பொலிவுறு நின்சிபுகம் போற்றின் (சௌந்தரிய. 66). |
சிம்சுமாரப்ரஜாபதி | cimcumāra-p-prajāpati n. <>šimšumāra+. The region of the Pole Star beyond the nakṣatra-pada; நக்ஷத்திரபதத்துக்கு மேலெல்லையான துருவமண்டலம். நக்ஷத்ரபதத்து மேலெல்லை சிம்சுமார ப்ரஜாபதியிறே (திவ்.தி. நெடுந். 5, வ்யா. பக். 45). |
சிம்பர் | cimpar n. Ramrod; துப்பாக்கியிலிடுந் தக்கை. (யாழ். அக.) |
சிம்புளாதனம் | cimpuḷ-ātaṉam n. <>சிம்புள்+. (šaiva.) A yogic posture; யோகாசன வகை. (தத்துவப். 109, உரை.) |
சிம்மஹாரம் | cimmahāram n. (Mus.) A specific melody-type; இராகவகை. (பரத. ராக. 104.) |
சிம்மாடு | cimmāṭu n. cf. சும்மாடு. Load-pad for the head; சும்மாடு. (மதி. கள. ii, 73) |
சிம்மேந்திரமத்யமம் | cimmēntiramatyamam n. (Mus.) A primary rāga; மேளகர்த்தாக்களு ளொன்று. (சங். சந்.) |
சிமம் | cimam n. Entirety; all; எல்லாம். (யாழ். அக.) |
சிமிட்டி | cimiṭṭi n. cf. சிமட்டி. Colocynth; பேய்க்கொம்மட்டி. (யாழ். அக.) |
சியாமகன்னம் | ciyāma-kaṉṉam n. <>šyāmakarṇa. Horse of a single colour with the ears alone blue; காதுமட்டும் நீலநிறமும் மற்றைப் பாகமெல்லாம் ஒரேநிறமுமுடைய குதிரை. (சுக்கிர நீதி, 317.) |
சியாமளாங்கி | ciyāmaḷāṅki n. <>šyāmalāṅgi. A primary rāga; மேளகர்த்தாக்களு ளொன்று. (சங். சந். 47.) |
சியேட்டை | ciyēṭṭai n. <>jyēṣṭhā. A šiva-šakti; ஒரு சிவசத்தி. (சைவபூ. சந். 219.) |
சிரக்கரகருமம் | cira-k-kara-karumam n. <>சிரம்+கரம்+. (Nāṭya.) Poses of head and hand; சிரத்தொழிலும் கை அவிநயமும். உவமையில் சிரக்கர கருமம். (திருவளை. கான்மா. 8). |
சிரசம் | ciracam n. <>šira+ja. Hair; தலைமயிர். (யாழ். அக.) |
சிரட்டைக்கருப்பட்டி | ciraṭṭai-k-karuppaṭṭi n. <>சிரட்டை+. A kind of jaggery, dist. fr., vaṭṭu-k-karuppaṭṭi; கருப்பட்டிவகை. Nā. |
சிரத்தாமந்தர் | cirattāmantar n. <>šradhā+mat. Honorary superintendents who take interest in the management of a temple charities; கோயிலறங்களை அபிமானத்தால் மேற்பார்ப்போர். (M. E. R. 163 of 1922.) |
சிரப்பாகு | cira-p-pāku n. <>சிரம்+. Turban; தலைப்பாகை. சேலைகண்டைச் சோமன் சிரப்பாகு (பஞ்ச. திருமுக. 2236). |
சிரமப்பணிக்கன் | cirama-p-paṇikkaṉ n. <>சிரமம்+. Fencing-master; சிலம்பக்காரன். Pond. |
சிரமாலை | cira-māḷai n. <>சிரம்+. Garland of rudrākṣa beads, worn on the head; தலையில் தரிக்கும் உருத்திராக்கமாலை. (யாழ். அக.) |
சிரஸ்தானம் | cira-stāṉam n. <>širas+. Chief place; தலைமையிடம். (J.) |
சிராப்பு | cirāppu n. <>Arab. Sarāfā. Shroff; நாணய நோட்டக்காரன். Loc. |