Word |
English & Tamil Meaning |
---|---|
சின்னப்பிசானம் | ciṉṉa-p-picāṉam n. <>சின்ன+. A kind of paddy; நெல்வகை. (விவசா. 1.) |
சின்னம் 1 | ciṉṉam n. <>சின்-மை. Odd; சில்வானம். முந்நூற்றுச் சின்னம் நாள் (S. I. I. iv, 140). |
சின்னம் 2 | ciṉṉam n. <>Pāli. jinno <>Skt. jīrṇa. Being worn out of decayed; சீர்ணம். சின்னச்சீரை துன்னற் கோவணம் (பதினொ. திருவிடை. மும். 7). |
சின்னராவுத்தன்வெட்டு | ciṉṉa-rāvuttaṉ-veṭṭu n. <>சின்ன+ராவுத்தன்+. An ancient coin; பழைய நாணயவகை. (பணவிடு. 144.) |
சினம் | ciṉam n. <>சின-. Heat; வெம்மை. சென்றுசென் றிறைஞ்சிய சினந்தீர் மண்டிலம் (பெருங். உஞ்சைக். 33, 40). |
சினிக்தசப்தம் | ciṉikta-captam n. <>snigdha+. Moist sound, crepitation, as in the lungs when congested; சுவாசப்பையில் சளியினால் உண்டாகுஞ் சத்தம். (இங். வை. 233.) |
சினிமா | ciṉimā n. <>E. Cinema; நிகழ்ச்சிகளைப் புகைப்படங்கள் மூலமாகக் காட்டுங் கருவி. Mod. |
சிஷ்டபரிபாலனம் | ciṣṭa-paripālaṉam n. <>šiṣṭa+paripālana. Protection of the good; நல்லோரைக் காப்பாற்றுகை. |
சிஸ்துவசூல் | cistu-vacūl n. <>Arab. qist+. Collection of instalments, or fixed rents; குத்தகையைத் தவணைகளில் வசூலிக்கை. (P. T. L.) |
சீக்கிரம்போ | cīkkiram-pō n. <>சீக்கிரம்+. Jutka; ஜட்காவண்டி. Loc. |
சீக்கிரன் | cīkkiraṉ n. <>šīghra. One of the three classes of servants; மூவகைப்பணியாளருள் ஒருவகையான். (சுக்கிரநீதி, 108.) |
சீக்கிரோச்சம் | cīkkirōcam n. <>id.+ ucca. The farthest point from the centre of the earth in the orbit of the planets; கிரகவீதியில் பூமத்தியத்திலிருந்து அதிக தூரமாயுள்ள இடம். (W.) |
சீகரம் | cīkaram n. <>šrīkara. Temple with 230 towers and 28 storeys; 230 சிகரங்களையும் 28 மேனிலைக்கட்டுக்களையு முடைய கோயில். (சுக்கிர நீதி, 230.) |
சீங்காய் | cīṅkāy n. cf. சீக்காய். Eight-pinnate soap-pod; இண்டு. (L.) |
சீசாமரம் | cīcā-maram n. <>சிசே+. Sissoo wood; சிசேமரம். Loc. |
சீட்டா | cīṭṭā n. <>Hind. sīṭhā. A drug for smoking; புகை குடிக்கவுதவுஞ் சரக்கு வகை. (மதி. க. ii, 52.) |
சீட்டுப்புள்ளி | cīṭṭu-p-puḷḷi n. <>சீட்டு+. subscriber to a chit-fund; சீட்டுநிதியிற் பணங்கட்டுவோன். Loc. |
சீடு - தல் | cīṭu- 5 v. tr. To cover; மூடுதல். பொடிசீடின தணல்போலேயிருக்கை (திவ். திருச்சந்த. 9, வ்யா. பக். 29). |
சீத்தபுழுதி | cītta-puḻuti n. <>சீ-+. Land ploughed but not sown; உழுது விதை விதைக்காத நிலம். (M. Sm. D. i, 279.) |
சீத்துவம் | cīttuvam n. prob. Jīva+tva. Anything that is necessary for life; உயிர்வாழ்வதற்கு இன்றியமையாதது. சீத்துவமிதார்க்குந் தெரியாதோ (பஞ்ச. திருமுக. 1406). |
சீதக்காதி | cītakkāti n. Syed Kadir, a Muhammadan nobleman of Kīḻakkarai near Ramnad and a great patron of learning, 17th century; 17-ஆம் நூற்றாண்டில் கீழக்கரையில் வசித்த வரும் புலவர்களைப் பெரிதும் போற்றிவந்தவருமாகிய ஒரு முகம்மதியச் செல்வர். (Rd. M. 228.) |
சீதகம் | cītakam n.<>sīsaka. (யாழ். அக.) 1. Lead; ஈயம். 2. Tarā, an alloy; |
சீதகாத்திரகம் | cīta-kāttirakam n. <>šīta+. An incurable form of paralysis; சு¦தாங்கசன்னி. (W.) |
சீதகிருச்சரம் | cīta-kiruccaram n. <>id.+. A fast for three days, drinking only water; மூன்றுநாள் நீர்மட்டும் பருகிப்பட்டினியிருக்கும் ஓர் விரதம். (யாழ். அக.) |
சீதபீரு | cīta-pīru n. prob. id.+. Jasmine creeper; மல்லிகைக்கொடி. (மூ. அ.) |
சீதம் | cītam n. Anise; சோம்பு. (யாழ். அக.) |
சீதளாசப்தமி | cītaḷā-captami n. <>šītalā+. Seventh titi in the dark fortnight of šrāvaṇa month; சிராவண மாதத்து அபரபட்சத்துச் சத்தமி. (Ind. chron.) |
சீதளோபசாரம் | cītaḷōpacāram n.<>id.+. Hearty welcome; மனங்குளிர்ச்சி செய்யும் உபசாரம். (சிவக். பிரபந். பக். 376.) |
சீதாங்கனை | cītāṅkaṉai n. <>Sītāṅganā. Sītā. சீதை. (W.) |
சீதாபோகம் | cītāpōkam n. A kind of paddy; ஒருவகை நெல். தாசரதி சீதாபோகந் தனையே சிந்தித்தான் (நெல்விடுதூது. 197). |