Word |
English & Tamil Meaning |
---|---|
சீவவதை | cīva-vatai n. <>jīva+. Torture; இமிசிக்கை. |
சீவவிருட்சம் | cīva-vīruṭcam n. <>id.+. The tree of life in the garden of Eden; ஈடன் தோட்டத்திலுள்ள ஒரு மரம். (W.) |
சீவன் | cīvaṉ n. <>jīva. Lapiz lazuli; வைடூரியம். (யாழ். அக.) |
சீவனமுனை | cīvaṉa-muṉai n. <>சீவனம்+. Means of livelihood; சீவனோபாயம். (W.) |
சீவனாகினி | cīvaṉākiṉī n. cf. சீனாகினி. (W.) 1. Betel leaf; வெற்றிலை. 2. Water; |
சீவாந்தம் | cīvāntam n. <>jīvānta. Death; மரணம். (W.) |
சீவி - த்தல் | cīvi- 11 v. intr. prob. jīva. To die, used euphemistically; மரித்தல். (யாழ். அக.) |
சீவிதக்காரன் | cīvita-k-kāraṉ n. <>சீவிதம்+. Grantee of a service inam; பணிசெய்வதற்காக மானியம் பெற்றவன். சேவகஞ்செய் சீவிதக்காரருக்கும் (சரவண. பணவிடு. 86). |
சீவிதஞ்ஞை | cīvataai n. prob. jīvita+ja. Heart; இரத்தாசயம்.(யாழ். அக.) |
சீவினி | cīviṉi n. <>jīvanī. cf. சீவனி. (W.) 1. An elixir to restore life; சஞ்சீவி. 2. One of the notes of the lute; |
சீவுளி | cīvuḷi n. <>சீவு-+. Scraper; பலகை சுரண்டி என்ற கருவி. Loc. |
சீவோபாதி | cīvōpāti n. <>jīva+upādhi. The four stages of human life, viz., pāliyam, kaumāram, yauvaṉam, vārttakam; பாலியம் கௌமாரம் யௌவனம் வார்த்தகமென்ற நான்கு பருவம். (நாநார்த்த. 904.) |
சீறு - தல் | cīṟu- 5 v. intr. To hoot like an owl; கத்துதல். ஆந்தை சீறல் அறியும் பலன் (கவுளிசா. 16). |
சீறுவாணம் | cīṟu-vāṇam n. <>சீறு-+. Rocket; வெடிக்காமற் சீறிச் செல்லும் வாணம். |
சீனக்கண்ணாடி | cīṉa-k-kaṇṇāṭi n. <>சீனம்+. Spectacles; மூக்குக் கண்ணாடி. (யாழ். அக.) |
சீனச்சரப்பளி | cīṉa-c-carappaḷi n. <>id.+. An ornament; அணிவகை. (தெய்வச். விறலிவிடு. 599.) |
சீனத்துவித்தை | cīṉattu-vittai n. <>id.+. Rare piece of work; அருமைப்பாடான வேலை. Loc. |
சீனப்பூண்டு | cīṉa-p-pūṇṭu n. <>id.+. Ginseng; மருந்துப்பூண்டுவகை. Pond. |
சீனம் | cīṉam n. <>cīna. A kind of antelope; மான்வகை. (யாழ். அக.) |
சீனமுட்செவ்வந்தி | cīṉa-muṭcevvanti n. <>சீனம்+. China rose; முட்செவ்வந்தி வகை. (யாழ். அக.) |
சீனன் | cīṉaṉ n. prob. cīna. The Buddhist; பௌத்தன். (சங்கற்பநி. 12, 25, உரை.) |
சீனாகினி | cīṉākiṉi n. cf. சீவனாகினி. Betel leaf; வெற்றிலை. (மூ. அ.) |
சீனாத்தொப்பி | cīṉā-t-toppi n. <>சீனா+. Chinese hat; தொப்பி வகை. Pond. |
சீனிக்கட்டை | cīṉi-k-kaṭṭai n. prob. சீனி+. Saddle-tree; சேணஞ் செய்தற்குரிய மரவச்சு. Pond. |
சீனிக்கல் | cīṉi-k-kal n. <>id.+. White stone; வெள்ளைக்கல். Tinn. |
சீனிப்பாய் | cīṉi-p-pāy n. <>id.+. A kind of mat; பாய்வகை. மெத்தைத் தலையணையும் சீனிப்பாயும் போட்டுக்கொடுத்து (தமிழறி. 57). |
சுக்கச்சிலை | cukka-c-cilai n. prob. சுக்கான்+. Kunkur; வங்கக்கல். (யாழ். அக.) |
சுக்காய் | cukkāy n. <>சொக்காய். Jacket; சட்டைவகை. Pond. |
சுக்கிரனாளி | cukkiraṉ-āḷi n. <>சுக்கிரன்+ஆள்-. Pearl; முத்து. (யாழ். அக.) |
சுக்குருவி | cukkuruvi n. An expr. used in calling small birds; குருவியைக் கூப்பிடுஞ்சொல். லோகத்தில் பிள்ளைகளை அழுகை மருட்டுகைக்காக அக்காக்காய் சுக்குருவி சந்திரா வா என்றாற்போலே சொல்லுகிற லோகோக்தி வ்யாஜத்தாலே (திவ். பெரி யாழ். 2, 5, ப்ர. பக். 332). |
சுக்கூர்செய் - தல் | cukkūr-cey- v. tr. <>Arab. shukr+. To render thanks; வந்தனஞ் செலுத்துதல். (சீதக். நொ.) |
சுகண்டி | cukaṇṭi n. cf. சுகந்தி. A kind of gem; இரத்தினவகை. (யாழ். அக.) |
சுகதம் | cukatam n. <>sva-gata. One's own; சொந்தம். (யாழ். அக.) |
சுகதன் | cukataṉ n. <>sugata. Buddhist; பௌத்தன். கபிலர் கணசரணர் சுகதர் சமண ரரர் வழிகளழியு மருள்மொழியினார் (தேசிகப். 6, 19). |