Word |
English & Tamil Meaning |
---|---|
சுகந்தை | cukantai n. Advance payment of cash, paddy, etc., to the cultivator; உழுவர்க்கு முன்கூட்டிக் கொடுத்த பணம் நெல் முதலியன. Tj. |
சுகப்பிரியை | cuka-p-piriyai n. <>šuka-priyā. Rose apple; சம்புநாவல். (யாழ். அக.) |
சுகிதம் | cukitam n. <>sukrta. Result of past good deeds; புண்ணியம். தேவாதிதேவர்கள் சகிதமாகிய சுகிதமா மலையே (சர்வசமய. பக். 36). |
சுகு | cuku n. prob. sruc. A kind of vessel; பாத்திரவகை. (யாழ். அக.) |
சுகுடம் | cukuṭam n. <>சகுடம். Indian Kales; சேம்பு. (யாழ். அக.) |
சுகுமாரம் | cukumāram n. <>sukumāra. (யாழ். அக.) 1. A kind of grain; தானியவகை. 2. A kind of sugar-cane; |
சுகோற்சவன் | cukōṟcavaṉ n. <>sukhōtsava. Husband. கணவன். (யாழ். அக.) |
சுசரித்திரம் | cucarittiram n. (Mus.) A primary rāga; மேளகர்த்தாக்களுள் ஒன்று. (சங். சந்.) |
சுசி | cuci n. <>cuci. Breast; udder; முலை. (யாழ். அக.) |
சுசுகம் | cucukam n. <>cūcuka. Nipple of the breast; முலைக்கண். (யாழ். அக.) |
சுசுலம் | cuculam n. Worthlessness; விழல். Pond. |
சுடர் | cuṭar n. 1. Year; ஆண்டு. (விதான மகாதிசை. 1, உரை.) 2. Tender leaf, shoot; |
சுடலைக்குருவி | cuṭalai-k-kuruvi n. <>சுடலை+. Screech-owl; சாக்குருவி. (W.) |
சுடலைமுத்து | cuṭalai-muttu n. <>id.+. A village deity; ஒரு கிராமதேவதை. மனச்சோபத்தைத் தீர்க்குஞ் சுடலைமுத்து (பஞ்ச. திருமுக. 657). |
சுடலையோன் | cuṭalaiyōṉ n. <>id. Vitriol; துரிசு. (யாழ். அக.) |
சுடாரி | cuṭāri n. cf. சடாரி. Coat-of-mail; கவசம். (W.) |
சுடுங்கரிநாள் | cuṭu-ṅ-karināḷ n. <>சுடு-+. The particular nakṣatras from which an inauspicious planet has just left; பாபக்கிரகம் நின்று நீங்கிய நட்சத்திரம். கொகோள் விடுநாள் . . . சுடுங்கரிநாள் (விதான. குணாகுண. 94). |
சுண்டுமணி | cuṇṭu-maṇi n. <>சுண்டு-+. Ruby of the finest quality; சிறந்த மணி. (கட்ட பொம். பக். 56.) |
சுண்டுசாதம் | cuṇṭu-cātam n. <>id.+. A kind of intoxicating food; போதைதரும் உணவுவகை. Madr. |
சுண்டுவிரற்கண்ணி | cuṇṭu-viraṟ-kaṇṇi n. <>சுண்டுவிரல்+. A kind of ring, worn by women on the little toe; மகளிரின் காற்சிறுவிரல் மோதிரம். |
சுண்டை | cuṇṭai n. <>šuṇdā. Hippopotamus; நீர்யானை. Pond. |
சுண்டைக்கீரை | cuṇṭai-k-kīrai n. <>சுண்டை+. A kind of greens, Neptuma oleracea; கீரைவகை. Loc. |
சுண்ணாம்புக்காய் | cuṇṇāmpu-k-kāy n. <>சுண்ணாம்பு+prob. கோய். Small casket for lime, for use in chewing betel; சுண்ணாம்புக் கரண்டகம். சுண்ணாம்புக்காய் முளளிடுக்கி முதலிய இன்றியமையாத பொருள்களிலே (எங்களூர், 30). |
சுண்ணி - த்தல் | cuṇṇi- 11 v. tr. cf. சண்ணி- To daub; பூசுதல். (யாழ். அக.) |
சுணக்கம் | cuṇakkam n. <>சுணங்கு-. Tightness, as of market; முடை. பண்டுபோலில்லை பணச்சுணக்கம் (பஞ்ச. திருமுக. 445). |
சுணக்கு - தல் | cuṇakku- 5 v. tr. Caus. of சுணங்கு-. To delay; தாமதப்படுத்துதல். வேலையைச் சுணக்காதே. Tinn. |
சுத்தசந்தயம் | cutta-cantayam n. <>šuddha+. (Rhet.) A figure of speech; செய்யுளணி வகை. (பாப்பா. 100.) |
சுத்தசுரம் | cutta-curam n. <>id.+. (Mus.) Primary notes of the gamut; அடிப்படையான சுரங்கள் (பூர். சங். உண். எ.) |
சுத்ததன்னியாசி | cutta-taṉṉiyāci n. <>id.+. (Mus) A specific melody-type; இராகவகை. (பரத. ராக. 103.) |
சுத்தவசந்தம் | cutta-vacantam n. <>id.+. (Mus.) A specific melody-type; இராகவகை. (பரத. ராக. 102.) |
சுத்தவாட்டி | cutta-v-āṭṭi n. <>id+ஆட்டி. Pure, spotless woman; தூயவள். (யாழ். அக.) |
சுத்தாத்வா | cuttātvā n. <>id.+adhvan. (šaiva.) The macrocosm resulting from the vintu, as a channel of pure grace; விந்துவிலுண்டான பிரபஞ்சம். (சி. சி.1, 57, சிவாக்.) |
சுத்தாந்தம் | cuttāntam n. <>šuddhānta. Royal zenana, queen's apartments; இராணியின் அரண்மனை. (யாழ். அக.) |