Word |
English & Tamil Meaning |
---|---|
உப்புவாடி | uppu-vāṭi n. <>id.+vāṭi. Platform on which salt is heaped up; உப்புக்கொட்டும் மேடை. (M. M.) |
உப்புவாணிகன் | uppu-vāṇikaṉ n. <>id.+. Member of a caste of salt-vendors; உப்பு விற்குஞ்சாதியான். (சூடா.) |
உப்புவாயு | uppu-vāyu n. <>id.+. Nitrogen; இலவணவாயு. Mod. |
உப்புறை - த்தல் | uppuṟai- v. intr. <>id.+ உறை2-. 1. To be well flavoured with salt; உப்புச்சுவைகாணுதல். 2. To be over-flavoured with salt; |
உப்பூறணி | uppūṟaṇi n. <>id.+ ஊறு-. Being impregnated with salt, as saline soil; உப்புச்செறிவு. |
உப்பெடுத்தல் | uppeṭuttal n. <>id.+. Ceremony among Nāṭṭukkōṭṭai Cheṭṭis in which the bridegroom's party carries to the bride's house a basket containing salt and nine kinds of grain together with a palmyra scroll for writing the marriage contract on; நாட்டுக்கோட்டைச்செட்டிகளில் மாப்பிள்ளைவீட்டார் பெண்வீட்டிற்கு உப்பும் நவதானியமும் விவாகஉடன்படிக்கையெழுத ஓலையும் எடுத்துச்செல்லும் சடங்கு. |
உப்பேறி | uppēṟi n. <>id.+ஏறு-. [M. uppēri.] Curry of chopped fruit or vegetables well seasoned with salt, pepper and other condiments and then fried in ghee or oil; ஒருவகைக்கறி. |
உப்பை | uppai n. Name of one of the reputed sisters of Tiruvaḷḷuvar, the author of Kuraḷ; திருவள்ளுவர் சகோதரிகளுள் ஒருத்தி. வயலூற்றுக் காட்டிலுப்பை (தனிப்பா.) |
உப | upa part. <>upa. A Skt. adverbial or adnominal prefix implying proximity or subsidiariness; உபசந்தி உபக்கிரகம் என்பவற்றிற் போலச் சமீபம் அப்பிரதானம் என்பவைகளைக் காட்டும் ஒரு வடமொழி யுபசருக்கம். |
உபக்கிரகம் | upa-k-kirakam n. <>id.+. Satellite; கிரகத்தைச் சுற்றியோடுஞ் சிறுகிரகம். (C.G.) |
உபக்கிரமணம் | upa-k-kiramaṇam n. <>upa-kramaṇa. Commencement, beginning; தொடக்கம். |
உபக்கிரமணிகை | upa-k-kiramaṇikai n. <>upa-kramaṇikā. 1. Preface; முகவுரை. 2. Introduction; |
உபக்கிரமம் | upa-k-kiramam n. <>upa-krama. Beginning, commencement; தொடக்கம். விஞ்சுமுபக்கிரம முபசங்கார நடையாய் (பிரபோத. 22, 17). |
உபக்கிரமி - த்தல் | upa-k-kirami- 11 v. tr. <>id. To begin; தொடங்குதல். பாட்டுக்களையடைவே விவரிப்பதாக உபக்கிரமிக்கிறார் (ஈடு, 1, 1, 1, ஜீ.) |
உபக்கிராமம் | upa-k-kirāmam n. <>upa+. Hamlet, dependent village; உட்கிடைக்கிராமம். (C. G.) |
உபகதை | upa-katai n. <>id.+kathā. 1. Subordinate narrative, short story, episode; கிளைக்கதை. 2. Fable; |
உபகரணம் | upa-karaṇam n. <>upa-karaṇa. 1. Instrument, implement, means, apparatus; paraphernalia, as vessels at a sacrifice; துணைப்பொருள்கள். உகந்தபொருளோ டுபகரண மொருங்குசேர்த்தி (சேதுபு. அநும. 22). 2. Instrumental cause; |
உபகரி - த்தல் | upakari- 11 v. intr. <>upa-kr. To render aid, do a kindness, confer a benefit, bestow favour; உதவுதல். திவ்யாத்ம ஸ்வரூப வைலக்ஷண்யத்தைக் காட்டி யுபகரித்தான் (ஈடு, 1, 1, 1). |
உபகற்பம் | upa-kaṟpam n. <>upa-kalpa. (šaiva.) Sacred ashes taken from natural forest fire or from artificially made brick or kiln fire and prepared according to rule, one of three vipūti, q.v.; காட்டுத்தீ முதலியவற்றால் வெந்த சாம்பலைக்கொண்டு முறைப்படியமைத்த விபூதி. (சைவச. பொது. 183). |
உபகாரகன் | upakārakaṉ n. <>upakāraka. Assistant, friend, benefactor; உதவி செய்வோன். நிர்ஹேதுகமாகத்தானே யுபகாரகனானான் (ஈடு, 1, 1, 1). |
உபகாரச்சம்பளம் | upakāra-c-campaḷam n. <>upa-kāra+. Pension; பூர்வசேவார்த்தமாகக் கொடுக்கப்படும் வேதனம். Mod. |
உபகாரம் 1 | upakāram n. <>upa-kāra. 1. Help, assistance, opp. to அபகாரம்; உதவி. நல்லா ரொருவர்க்குச் செய்த வுபகாரம் (வாக்குண். 2). 2. Present, gift; |
உபகாரம் 2 | upakāram n. <>upa-hāra. Offering, oblation; காணிக்கை. நயந்தினிய வுபகார நல்கினார்கள் (திருவாலவா. 2, 4). |
உபகாரன் | upakāraṉ n. <>upa-kāra. Benefactor. See உபகாரி. Mod. . |
உபகாரஸ்மிருதி | upakāra-smiruti n. <>id.+. Remembrance of a kind act, gratitude for a benefit received; செய்ந்நன்றியறிகை. உபகாரஸ்மிருதியினாலே ஆழ்வானைக் கொண்டாடுகிறார்கள் (திவ். திருப்பல். 7). |