Word |
English & Tamil Meaning |
---|---|
சுவீயை | cuviyai n. <>svīyā. See சுவகீயை. (சுக்கிரநீதி, 212.) . |
சுவைப்பாடு | cuvai-p-pāṭu n. <>சுவை+. Taste; ருசி. இனிமையால் நினைக்கிறதுசுவைப்பாட்டை (திவ். பெரியதி. 1, 2, 10, வ்யா. பக். 91). |
சுழங்கு - தல் | cuḷaṅku- 5. v. intr. prob. சுழல்-. To whirl; to be tossed about; உழுலுதல். நெஞ்சகஞ் சுழங்குற (காஞ்சிப்பு. பன்னிரு. 276). (W.) |
சுழல்நாற்காலி | cuḻal-nāṟkāli n. <>id.+. Revolving chair; சுற்றுங் குரிச்சிவகை. (மதி. க. ii, 190.) 3. |
சுழற்றி | cuḻaṟṟi n. <>சுழற்று-. Fan; விசிறி. அங்கைச் சுழற்றிகொண் டெழுப்பில் (ஞானபூசா. 25). |
சுழிப்பு | cuḷippu n. <>சுழி-. Agitation; சஞ்சலம். மின்னினுடைய சுழிப்பையு முடைத்தாய் (திவ். பெரியாழ். 3, 5, 4, வ்யா. பக். 639). |
சுழிமழை | cuḷi-maḻai n. <>id.+. Raining in patches; திக்குத்திக்காய்ப் பெய்யுமழை. (யாழ். அக.) |
சுழிமுல்லாவெட்டு | cuḻimullāveṭṭu n. An ancient coin; பழைய நாணயவகை. (பணவிடு. 133.) |
சுழியாறுபடு - தல் | cuḷi-y-āṟu-paṭu- v. intr. <>சுழி+ஆறு+. To be in floods, with whirlpools; கழித்துச் செல்லும் பூர்ணப் பிரவாகமாதல். அழகாலும் சீலத்தாலும் காஞ்சீபுரமித்தனையும் நிரம்பிச் சுழியாறுபடும்படி திருவூரகத்திலே நின்றருளினவனோ (திவ். திருநெடுந். 8, வ்யா. பக். 66). |
சுழியோடி | cuḻi-y-ōṭi n. <>சுழியோடு-. Diver for pearls; முக்குளிப்பவன். (J.) |
சுள்ளக்கன் | cuḷḷakkaṉ n. <>சுள். (W.) 1. Angry person; கோபக்காரன். 2. Spirited horse or bull; |
சுள்ளெனல் | cuḷḷeṉal n. Expr. of sternness, severity or pungency; கடுமையா யிருத்தற் குறிக்குஞ் சொல். வெயில் சுள்ளென்றது (நேமிநா. 66, உரை). |
சுளகம் | cuḷakam n. of. šlōka. Terse saying; நன்மொழி. சுத்தருரைத்த சுளகமறிந்தவத் தூயவரே (தேசிகப். 1, 29). |
சுளாவு - தல் | cuḷāvu- 5 v. tr. <>சுலாவு-. To whirl; சுழலச்செய்தல். (யாழ். அக.) |
சுளுக்குப்பாரை | cuḷuku-p-pārai n. Shovel; மண்வாருங் கருவிவகை. Loc. |
சுளுவு | cuḷuvu n. <>sulabha. Alleviation; mitigation; மட்டுப்படுகை. (யாழ். அக.) |
சுற்றலங்காரம் | cuṟṟalaṅkāram n. <>சுற்று+. External decorations; வெளிபக்கத்திற் செய்யுஞ் சிங்காரிப்பு. Pond. |
சுற்று - தல் | cuṟṟu- 5 v. tr. To think, consider; to meditate; சிந்தித்தல். (திவ். திருச்சந்த. 52, வ்யா. பக். 151.) |
சுற்றுக்கல்லூரி | cuṟṟu-k-kallūri n. <>சுற்று-+. A Portion of a building; கட்டடத்திலோர் பகுதி. (S. I. I. ii, 107.) |
சுற்றுப்பிரயாணம் | cuṟṟu-p-pirayāṇam n. <>id.+. Tour; பலவூர்கட்டுஞ் சென்றுவருகை. Mod. |
சுற்றுவசனம் | cuṟṟu-vacaṉam n. <>id.+. Circumlocution; நேரேயன்றி சுற்றலாகப் பேசுகை. Pond. |
சுன் | cuṉ n. (யாழ். அக.) 1. cf šūnya. Emptiness; வெறுமை. 2. Whiteness; 3. Semen; |
சுன்னாமுக்கி | cuṉṉa-mukki n. Indian senna; நில ஆவிரை. (இங். வை.) |
சுஜாவந்தி | cujāvanti n. (Mus.) A specific melody-type; இராகவகை. (பரத. ராக. 104.) |
சுஸ்தி | custi n. <>Persn. susti. Non-existence; இன்மை. தஸ்திக்கு ஏற்பாடு சுஸ்தியாய்ப் போச்சு (தாசீல்தார்நா. பக். 28). |
சூக்குமதாரி | cūkkuma-tāri n. <>சூக்குமம்+. Deceitful person; வஞ்சகன். (யாழ். அக.) |
சூகை | cūkai n. perh. šuṣka. That which is withered or shrunken; வற்றியுலர்ந்தது. சூகை முலை. |
சூசககுரு | cūcaka-kuru n. <>sūcaka+. Preceptor who instructs his pupil in the virtues of camam, tamam, etc.; சமம் தமம் முதலியவற்றை உபதேசிக்குங் குரு. (விவேகசிந். பக். 28.) |
சூசிகன் | cūcikaṉ n. <>sūcika. Tailor; தையற்காரன். (யாழ். அக.) |
சூசிகாபரணம் | cūcikāparaṇam n. A kind of medicine; மருந்துவகை. (தஞ். சர. iii, 68.) |
சூசிகாபைசாசி | cūcikā-paicāci n. A variety of the Prākrt language; பாகதமொழி வகை. (சி. சி. பாயி. மறைஞா. பக். 6.) |