Word |
English & Tamil Meaning |
---|---|
செஞ்சுருட்டை | ce-curuṭṭai n. <>id.+. A species of ragi; வரகுவகை. (விவசா. 3) |
செஞ்சொட்டி | ce-coṭṭi n. <>id.+. A plant; பூடுவகை. செஞ்சொட்டி யடியொட்டி (குரு கூர்ப். 45). |
செட்டுக்காரர் | ceṭṭu-k-kārar n. <>செட்டு+. Dēvāṅgas of Coimbatore; கோயம்புத்தூரில் வாழும் தேவாங்க சாதியார். (E. T. ii, 155.) |
செடம் | ceṭam n. <>šaṭha. Evil humour of the body destroying the innate intelligence of the soul at birth; பிறக்கும்போது ஆன்மாவின் நல்லறிவைக் கெடுக்கும் வாயு. செடநீறெழ வெரிக்குங் க்ருபாகர (நூற்றெட்டுத். திருப்புகழ். 15). |
செண் | ceṇ n. <>செண்ணு Tresses done into a knot; மகளிர் கொண்டை. செண்ணியற் சிறுபுறம் (அகநா. 59). |
செண்பகக்குளிகை | ceṇpaka-k-kuḷikai n. An ancient coin; பழைய நாணயவகை. (pudu. Insc. 261.) |
செணம் | ceṇam n. <>kṣaṇa. Moment; க்ஷணம். (யாழ். அக.) |
செத்தல் | cettal n. <>சா-. Chaff, withered or blighted grain; பதர். (S. I. I. V, 84.) |
செத்தலை | cettalai n. perh. செய்+தலை. Cultivation accounts; உழவுக் கணக்கு. செத்தலையிலே புள்ளித்தரவு எழுதவும். |
செத்து | cettu n. prob. செ-. Doubt; சந்தேகம். (யாழ். அக.) |
செத்துவம் | cettuvam n. <>satva. Evil spirit; பிசாசம் செத்துவங்க டாக்கி (நீலகேசி, 112). |
செந்தலி - த்தல் | centali- 11 v. intr. To be fresh and attractive; செவ்வியுறுதல். நம்முகம் பண்டுபோலே செந்தலித்திருக்க நாம் காண்பதெப்போதோ? (திவ். திருநெடுந்.12, வ்யா. பக். 107). |
செந்தாரை | cen-tārai n. <>செம்-மை+. Pale redness; வெண்மைகலந்த சிவப்பு Loc. |
செந்தாழம்பழம் | cen-tāḻam-paḻam n. <>id.+. Pine-apple fruit; அன்னாசிப்பழம். (மூ. அ.) |
செந்தாழை | cen-tāḻai n. <>id.+. A kind of paddy; நெல்வகை. (குருகூர்ப். 58.) |
செந்திருக்கை | cen-tirukkai n. <>id.+ A kind of tirukkai fish; திருக்கைமீன்வகை. (D.) |
செந்திலகம் | cen-tilakam n. <>id.+. A kind of plant; செடிவகை. (புட்ப. 29.) |
செந்தீம் | centīm n. <>Fr. centime. Centime, one hundredth part of a franc; பிரெஞ்சுக் காசின் நூற்றிலொரு பங்கு. Pond. |
செந்துநாசனம் | centu-nācaṉam n. <>செந்து+. Asafoetida; பெருங்காயம். (யாழ். அக.) |
செந்துரிப்போ - தல் | centuri-p-pō- v. intr. perh. சிந்தூரி-+. To stop the holes in an earthen vessel with lac; மண் பாண்டத்தின் ஒட்டையை அரக்காலடைத்தல். Tinn, |
செந்துருக்கம் | centurukkam n. <>சந்திரகம். Ola leaf wound round an ola letter; எழுதிய ஒலையின்மேற் சுற்றும் ஒலைச்சுருள். (யாழ். அக.) |
செந்துறைச்செந்துறை | centuṟai-c-centuṟai n. <>செம்-மை+. A kind of musical composition; இசைப்பாட்டுவகை. (யாப். வி. 537.) |
செந்துறைமார்க்கம் | centuṟai-mārkkam n. <>id.+. Musical composition which could be sung in any of the four major paṇ and of the 21 tiṟaṉ; நாற்பெரும் பண்ணிலும் இருபத்தொரு திறனிலும் பாடக்கூடிய இசைப்பாடல். (யாப். வி. 537.) |
செந்தூக்கு | cen-tūkku n. <>id.+. Weight which can be easily lifted by a person; கையால் இலேசாய்த் தூக்குங் கனமுள்ளது. (யாழ். அக.) |
செந்தூட்படுத்து - தல் | centūṭ-paṭuttu- v. intr. <>செந்தூள்+. To reduce to dust; நாசஞ்செய்தல். வழக்கையெல்லாம் செந்தூட்படுத்தி (பேரின் பக்கீர்த். பக். 103). |
செந்தூரி - த்தல் | centūri- 11 v. intr. <>செந்தூரம். To calcine; சிந்தூரமாக்குதல். (யாழ். அக.) |
செந்நெய்தல் | cen-neytal n. <>செம்-மை+. A kind of water-lily; அல்லிக்கொடிவகை. (புட்ப. 4.) |
செந்நென்முத்து | cenneṉ-muttu n. <>செந்நெல்+. Pearl believed to be formed in cennel paddy; செந்நெலில் உண்டாவதாகக் கருதப்படும் முத்து. (யாழ். அக.) |
செப்பவாய் | ceppavāy n. Waist; இடை. (யாழ். அக.) |
செப்பாடல் | ceppāṭal n. An ancient coin; பழைய நாணயவகை. (பணவி. 139.) |
செப்பாடு | cep-pāṭu n. prob. செப்பம்+. Straightness, justness; நேர்மை. செப்பாடுடைய திருமாலவன் (திவ். பெரியாழ். 3, 5, 6). |