Word |
English & Tamil Meaning |
---|---|
செப்புநிறம் | ceppu-niṟam n. <>செம்பு+. Dark-red colour; கருஞ்சிவப்பு. (யாழ். அக.) |
செப்புப்பத்திரம் | ceppu-p-pattiram n. <>id.+. Copper-plate grant; செப்புப்பட்டயம். விடுபேறாகச் செப்புப் பத்திரஞ்செய் தட்டிக் கொடுத்தேன் (T. A. S. ii, 68). |
செப்புமலை | ceppu-malai n. <>id.+. Ochre-coloured cloth; காஷாயவுடை. (யாழ். அக.) |
செபக்கூடம் | cepa-k-kūṭam n. <>செபம்+. Chapel; கிறிஸ்தவர் செபஞ்செய்யு மிடம். Chr. |
செபத்திட்டப்புஸ்தகம் | cepa-t-tiṭṭa-p-pustakam n. <>id.+திட்டம்+. Directory for worship at the church; கிறிஸ்தவர்கள் செபங்கள் செய்யவேண்டிய காலம் முதலியவற்றைக் குறிக்குஞ்சுவடி. Pond. |
செம்பஞ்சுநிறமணி | cem-pacu-niṟamaṇi n. <>செம்-மை+பஞ்சு+. A kind of precious stone; சௌகந்திகப்பதுமராகம். (யாழ். அக.) |
செம்பட்டலரி | cem-paṭṭalari n. <>செம்-மை+. A kind of oleander; அலரிவகை. (புட்ப. 29.) |
செம்பட்டை | cem-paṭṭai n.<>id.+. A kind of musical instrument; ஒருவகை வாத்தியம். குடமொடு பாணி யிடக்கை செம்பட்டை (வள்ளி. கதை. Ms.). |
செம்படம் | cem-paṭam n. <>id.+. See செப்புமலை. (நீலகேசி, 244, உரை.) . |
செம்படர் | cem-paṭar n. <>id.+படம். Buddhists, as wearing red-coloured cloth; பௌத்தர்கள். இது செம்படர்க் ளிறைவ னுறையுமிடம் (நீலகேசி, 464). |
செம்பன் | cempaṉ n. <>செம்பு. Brown coloured cow or bull; சிவலை. (யாழ். அக.) |
செம்பாந்தள் | cem-pāntaḷ n. <>id.+. Moon's descending node; கேது. (சாதகசிந். 7.) |
செம்பால்முடாங்கி | cempālmuṭāṅki n. A shrub; பூடுவகை. (யாழ். அக.) |
செம்பிறை | cem-piṟai n. <>செம்-மை+. 1. Kind of metallic ore; கானற்கல். (யாழ். அக.) 2. See செம்பொடி, 1. (யாழ். அக.) |
செம்பினிறம் | cempiṉiṟam n. <>செம்பு+நிறம். A kind of precious stone; மாந்தளிர்க்கல். (யாழ். அக.) |
செம்பு | cempu n. A blemish in coin; நாணயக்குற்றவகை. (சரவண. பணவடு. 66.) |
செம்பை | cempai n. A disease affecting paddy crop; நெற்பயிரின் நோய்வகை. (நீலகேசி, 366, உரை.) |
செம்பொடி | cem-pōṭi n. <>செம்-மை+. 1. Blue stone; நீலக்கல். (யாழ். அக.) 2. Red oxide of mercury; |
செம்போத்து | cempōttu n. Champak tree; செண்பகம். (யாழ். அக.) |
செம்போத்துக்காரி | cempōttu-k-kāri n. <>செம்போத்து+. Bull partly grey and partly black in colour; சில இடங்கள் வெளுத்தும் சில இடங்கள் கறுத்து முள்ள எருது. Loc. |
செம்மண் | cem-maṇ n. <>செம்-மை+. A flaw in rubies, one of māṇikka-k-kuṟṟam; மாணிக்கக்குற்றங்களு ளொன்று. (திருவாலவா. 25, 14.) |
செம்மணிச்சை | cem-maṇiccai n. <>id.+prob. மணிச்சிகை. A tree; மரவகை. (S. I. I. iii, 408.) |
செய்காடு | cey-kāṭu n. <>செய்-+. Thicket; குறுங்காடு. (திருக்தோ. 148, உரை.) |
செய்காரியஅட்டவணை | cey-kāriya-aṭṭavaṇai n. <>id.+காரியம்+. Index of items of work to be done in temple service; கோயிலில் நடக்க வேண்டிய காரியங்களைக் காட்டும் பட்டி. Loc. |
செய்கால் | cey-kāl n. <>id.+. Labour necessary for the cultivation of lands; நிலச்சாகுபடி செய்தற்கு வேண்டும் உழைப்பு. TJ. |
செய்கைக்காரன் | ceykai-k-kāraṉ n. <>செய்கை+. Servant; வேலைக்காரன். (யாழ். அக.) |
செய்கைத்தரை | ceykai-t-tarai n. <>செய்கை+. Field prepared for sowing; பண்படுத்தின நிலம். (யாழ். அக.) |
செய்திப்பிழை | ceyti-p-piḻai n. <>செய்தி+. Unconscious mistake; slip; அறியாது செய்த தவறு. எப்பொழுதுந் தன் மனத்துக்கேற்க நடப்பார்க்கொரு செய்திப்பிழை வாராதோ தினகரா (தினகர வெண்பா, 85). |
செய்துகோள் | ceytu-kōḷ n. <>செய்-+. Artificiality; தானே உண்டாகாது செய்துகொள்ளப்பட்டது. (நம்பியகப். 1, பக். 36.) |
செய்நீர் | cey-nīr n. <>id.+. Tincture; மருந்துச் சரக்கினின்று இறக்கப்படுஞ் சத்துநீர். Loc. |
செய்ம்மெழுகு | cey-m-meḻuku n. <>id+. Lac; அரக்கு. Loc. |
செய்யுட்டாரணை | ceyyuṭ-ṭāraṇai n.<>செய்யுள் +தாரணை. One of navatāraṇai, q.v.; நவதாரணையுள் ஒன்று. (W.) |