Word |
English & Tamil Meaning |
---|---|
திருப்பிறை | tiru-p-piṟai n. <>id.+. An ornament; அணிவகை. (S. I. I. iii, 473.) |
திருப்புகை | tiru-p-pukai n. <>id.+. Incense; தூபம். (T. S. A. ii, 173.) |
திருப்புதியது | tiru-p-putiyatu n. <>id.+. First fruits, as a due to a temple; கோயிலுக்குக் கடமையாகச் செலுத்தும் முதல் விளைவு. (S. I. I. i, 81.) |
திருப்புறக்கொடை | tiru-p-puṟa-k-koṭai n. <>id.+ புறம் + கடை. Backyard; பின்பக்கத்து முற்றம். அருளாளப் பெருமாள்கோயிலில் திருப்புறக்கொடையில் கீழைத் திருவாசலுக்குக் கிழக்கு (S. I. I. iv, 101). |
திருப்பூமண்டபம் | tiru-p-pū-maṇṭapam n. <>id + பூ+. The maṇṭapam where flowers are strung together as garlands for the deity in a temple; கோயிலில் மாலைதொடுக்கும் இடம். (S. I. I. iv, 37.) |
திருப்போர்வை | tiru-p-pōrvai n. <>id.+. Cape; கிறிஸ்துவமதபோதகரின் உடைவகை. Chr. |
திருமந்திரக்கொடி | tiru-mantira-k-koṭi n. <>id.+ மந்திரம்+. Flag on the flag-staff; கொடிச்சீலை. (S. I. I. vii, 439.) |
திருமந்திரஞ்சொல்(லு) - தல் | tirumantira-col- v. tr. <>id.+ id.+. To impart religious instruction; உபதேசஞ்செய்தல். குருவுக்குத் திருமந்திரஞ் சொல்வோன். |
திருமந்திரபோனகம் | tiru-mantira-pōṉakam n. <>id.+ id.+. Food-offering to a deity; நிவேதனம். சிறுகாலைச்சந்தி திருமந்திரபோனகத்துக்கு அமுது செய்தருள (S. I. I. vii, 281). |
திருமந்திரபோனப்புறம் | tirumantirapōṉa-p-puṟam n. <>திருமந்திரபோனகம்+. Endowment of land for providing food-offerings to the deity in a temple; கோயில் நிவேதனத்துக்கு விடப்பட்ட மானியம். (S. I. I. iv, 194.) |
திருமந்திரம் | tiru-mantiram n. <>திரு + mandira. Temple; கோயில். (Insc.) |
திருமலர்ச்செல்வி | tiru-malar-c-celvi n. <>id.+ மலர்+. The Goddess Lakṣmī, as seated on the lotus; இலக்குமி. (S. I. I. ii, 115.) |
திருமாளிகைப்பிள்ளையார் | tiru-māḷikai-p-piḷḷaiyār n. <>id.+ மாளிகை+. Caṇdēša, šiva's seneschal; சண்டீசர். (Insc.) |
திருமுக்கால் | tiru-mukkāl n. <>id.+. (Mus.) A kind of song; இசைப்பாட்டுவகை. (தேவா.) |
திருமுகத்தேவை | tiru-muka-t-tēvai n. <>id.+ முகம்+. Personal services in a temple or palace; கோயில் அரண்மனைகளிற்செய்யும் வேலை. திருமுகத்தேவை செய்யுமிடத்து (S. I. I. vi, 27). |
திருமுடியடைவு | tiru-muṭi-y-aṭaivu n. <>id.+ முடி+. Pedigree; வமிசாவளி. பெரிய திருமுடியடைவு. |
திருமுன்காட்சி | tiru-muṉ-kāṭci n. <>id.+ முன்+. A tax; வரிவகை. (S. I. I. iv, 122.) |
திருவக்கிரம் | tiru-v-akkiram n. <>id.+ agra. Offerings to the deity in a temple; நிவேதனம். (T. A. S. iii, 166.) |
திருவட்டமணி | tiru-vaṭṭa-maṇi n. <>id.+ வட்டம்+. See திருவட்டமணிவடம். (S. I. I. iii, 474.) . |
திருவட்டமணிவட்டம் | tiru-vaṭṭa-maṇivaṭam n. <>id.+ id.+. A kind of necklace; கழுத்தணிவகை. (S. I. I. iii, 474.) |
திருவரங்கன் | tiru-v-araṅkaṉ n. <>id.+ அரங்கம். A kind of campā paddy; சம்பா நெல்வகை. (குருகூர்ப். 58.) |
திருவாங்கோட்டுமின்னல் | tiruvāṅkōṭṭu-miṉṉal n. An ancient coin, as from Travancore; பழைய நாணயவகை. (பணவிடு. 137.) |
திருவாலத்தட்டி | tiru-v-āla-t-taṭṭi n. <>திரு + ஆலம்+. A kind of plate used for waving lights in temple service; கோயில் தீபத்தட்டுவகை. (Puda. Insc. 300.) |
திருவாழித்தண்டு | tiruvāḻittaṇṭu n. cf. திருவாடுதண்டு. Poles attached to the temple vehicles for carrying them; கோயில் வாகனங்களின் காவுதண்டு. (யாழ். அக.) |
திருவாளன் | tiru-v-āḷaṉ n. <>திரு+. 1. (šaiva.) Saint or great man blessed with divine grace; கடவுளது திருவருளைப்பெற்றவன். திருத்தொண்டத்தொகை முன்பணித்த திருவாளன் (பெரியபு. சண்டேசுர. 60). 2. (šaiva.) God; |
திருவி | tiruvi n. <>id. Wealthy lady; சம்பத்துள்ளவள். பெருந்திருவி யார்மகள்கொல் (சீவக. 1968). |
திருவிசை | tiru-v-icai n. <>id.+. A collection of poems by nine šaiva saints; திருவிசைப்பா. சங்கத் தமிழமுதம் மண்டுந் திருவிசையு மந்திரமும் (சொக்க. உலா, 36). |