Word |
English & Tamil Meaning |
---|---|
திருவிட்டிக்கண்ணி | tiruviṭṭikaṇṇi n. Small elliptic-cuspidate-leaved wind-berry; வாயு விளங்கம். (L.) |
திருவிடு | tiru-v-iṭu n. <>திரு + இடு-. Deed of endowment; தானசாசனம். திருவிடு இட்டுக்கொடுத் தமைக்கு (S. I. I. vii, 46). |
திருவிடைப்பற்று | tiru-v-iṭai-p-paṟṟu n. <>id.+ இடை + cf. திருவிடையாட்டம். Temple land; கோயில் நிலம். திருவிடைப்பற்று குவளைக்கழவச்சேரியான திருவெண்ணாவல் நல்லூர் (S. I. I. iv, 133). |
திருவிடையாட்டம் | tiru-viṭai-y-āṭṭam n. <>id.+ id. Divinity; ஐசுவரியம். திருவிடையாட்டத்திலே இழிய அமையும் (திவ். பெரியதி. 1, 1, 2, வ்யா. பக். 24). |
திருவிருக்குக்குறள் | tiru-v-irukku-k-kuṟal n. <>id.+. prob. இருக்கு+. (Pros.) A kind of metre; ஓரடி இருசீராக நாலடியான் வருஞ் செய்யுள்வகை. (தேவா. 138. |
திருவிரையாக்கலி | tiru-viraiyā-k-kali n. <>id.+ perh. விரை- + ஆ neg.+. The sacred oath on God šiva; சிவபிரானது ஆணையைக் குறிக்குஞ் சொல். இவையழிக்கச் சிந்தையாற்றா நினைவார் திருவிரையாக்கலியென்று (பெரியபு. கோட்பு. 4). (S. I. I. vii, 398.) |
திருவிலான் | tiru-v-ilāṉ n. <>id.+ இல் neg. Unfortunate, god-forsaken person; பாக்கியமற்றவன். உருவிலான் பெருமையை யுளங்கொளாதவத் திருவிலார் (தேவா. 345, 2). |
திருவீதிநாயகர் | tiru-vīti-nāyakar n. <>id.+ வீதி+. Deity of a temple intended for carrying out in procession during festivals; உற்சவமூர்த்தி. ராஜாக்கள் தம்பிரான் திருவீதிநாயகர் திருப்பவனி எழுந்தருளும்போது (S. I. I. viii, 21). |
திருவீதிப்பந்தம் | tiru-vīti-p-pantam n. <>id.+ id.+. . சுவாமிபுறப்பாட்டில் உபயோகிக்குந் தீவட்டிவகை. (S. I. I. v, 89.) |
திருவுதரமாலை | tiru-v-utara-mālai n. <>id.+. Ornament for the waist of a deity; girdle; கோயில்மூர்த்தியின் இடையிலிடும் ஆபரணவகை. (S. I. I. iii, 474.) |
திருவுலகள - த்தல் | tiru-v-ulakaḷa- v. intr. <>id.+ உலகு+. To survey or measure land; நிலத்தை யளந்து கணக்கிடுதல். திருவுலகளந்தபடி நிலம் எழுமா (S. I. I. vii, 309). |
திருவுலாச்செய் - தல் | tiru-v-ulā-c-cey- v. intr. <>id.+ உலா+. To go out in procession, as a deity in a temple; வலம்வருதல். Loc. |
திருவுலாப்புறஞ்செய் - தல் | tiru-v-ulā-p-puṟa-cey- v. intr. <>id.+ id.+ புறம்+. See திருவுலாச்செய்-. (சிவநெறிப். 8.) . |
திருவுலாப்புறம் | tiru-v-ulā-p-puṟam n. <>id.+ id.+. Tiru-k-kailāya-āṉa-v-ulā, a poem by Cēramāṉ-perumāḷ; திருக்கைலாயஞானவுலா. சேரர்காவலர் பரிவுடன் கேட்பித்த திருவுலாப்புறம் (பெரியபு. வெள். 48). |
திருவுறை | tiru-v-uṟai n. <>id.+. Temple; கோயில். கரியோன் திருவுறை (கல்லா.). |
திருவெண்காடர் | tiru-veṇkāṭar n. <>id.+. The sage Paṭṭiṉattār; பட்டினத்தடிகள். |
திருவெழுத்துச்சாத்து - தல் | tiru-v-eḷuttu-c-cāttu v. intr. <>id.+. To sign; கையெழுத்திடுதல். தேவர் திருவெழுத்துச்சாத்தின திருமுகம் வந்தமையில் (S. I. I. viii, 27). |
திருவேள் - தல் [திருவேட்டல்] | tiruvēḷ- v. tr. <>id.+. To marry; திருமணம்புரிதல். தென்னவர்கோன் மகளாரைத் திருவேட்டு (பெரியபு. சேரமான். 92). |
திருவையாற்றுச்சக்கரம் | tiru-v-aiyāṟṟu-c-cakkaram n. <>id.+ ஐயாறு+. A kind of coin; நாணயவகை. (பணவிடு. 145.) |
திருஷ்டபோக்கியம் | tiruṣṭa-pōkkiyam n. <>drṣṭa+. Effects of actions done in this birth; இம்மையிற்செய்த கருமங்களின் பலனை அனுபவிக்கை. (சி. சி. 2. 39, ஞானப்.) |
திருஷ்டிசுற்று - தல் | tiruṣṭi-cuṟṟu- v. intr. <>drṣṭi+. To wave specified articles round a person, to avert the evil eye; திருஷ்டிகழித்தற்பொருட்டுச் சில பண்டங்களைச் சுற்றுதல். Loc. |
திருஷ்டிபரிகாரம் | tiruṣṭi-parikāram n. <>id.+. Averting of the evil eye; கண்ணேறுபட்டதாலுண்டாந் தீங்கினை நீக்குகை. Colloq. |
திரை - த்தல் | tirai- 11 v. intr. To lie, as in bed; படுத்தல். திரைப்பமெல்லணை செய்வ விழுத்தவம் (நீலகேசி, 251). |
திரைப்புழு | tirai-p-puḻu n. perh. திரை-+. A kind of worm; புழுவகை. (பரராச. ii, 217.) |
திரையுறி | tirai-y-uṟi n. <>id.+. 1. Network of rope for keeping big pots suspended; பெரிய உறி. 2. Plaited network of rope; |
தில்லாயம் | tillāyam n. Deception; புரட்டு. தில்லாயக் கட்டுமொழி செப்புகிறாய் (பஞ்ச. திருமுக. 1220). |