Word |
English & Tamil Meaning |
---|---|
உபபத்திரம் | upa-pattiram n. <>upa-pattra. A stipule; இலைக்காம்பருகேயுள்ள சிறிய இலை. (C. G.) |
உபபதி | upa-pati n. <>upa-pati. Illicit partner of a married woman, paramour; சோர நாயகன். |
உபபலம் | upa-palam n. <>upa-bala. Auxiliary, allied army; துணைவலி. Brāh. |
உபபாதகம் | upa-pātakam n.<>upa-pātaka. Sin less heinous than pancamā-pātakam; crime of a second degree; சிறுபாதகம். (சிவதரு. பாவ. 34.) |
உபபாவம் | upa-pāvam n. <>upa-pāpa. See உபபாதகம். (சூத. ஞான. 7, 34.) . |
உபபுராணம் | upa-purāṇam n. <>upa-purāṇa. Secondary or minor Purāṇas which are 18 in number, viz., . |
உபம் | upam n. <>ubha. Two; இரண்டு. முன்னான்கி னவிலந்த மொருகழஞ்சா மற்றையுபம் (தைலவ. தைல. 109). |
உபமலம் | upa-malam n. <>upa-mala. Mental impurity, inward depravity; மனமாசு. (பிங்.) |
உபமன்னியன் | upamaṉṉiyaṉ n. See உபமன்னியு. (சோயிற்பு. வியாக். 24.) . |
உபமன்னியு | upamaṉṉiyu n. <>Upamanyu. A šaivite rṣi, the reputed author of the Upamaṉyu-bhakta-vilāsa, a Skt. work relating the stories of the 63 šaiva saints; ஒரு சைவரிஷி. |
உபமானம் | upamāṉam n. <>upa-māna. 1. Standard of comparison, recognition of likeness; resemblance; உவமை. 2. (Log.) Analogy, opp. to உபமேயம்; |
உபமானரகிதம் | upamāṉa-rakitam n. <>id.+rahita. That which is matchless, incomparable; உவமையற்றது. |
உபமிதி | upamiti n. <>upa-miti. Knowledge of things derived from analogy; உபமானப்பிரமாணத்தினால் வரும் அறிவு. (தர்க்கபா. 30.) |
உபமேயம் | upamēyam n. <>upa-mēya. That which is compared, subject of comparison; உவமிக்கப்பட்ட பொருள். (அணியி. 1.) |
உபமேயோபமாலங்காரம் | upamēyōpa-mālaṅkāram n. <>id.+upa-mā+. (Poet.) A figure of speech in which the upa-māṉam and upa-mēyam are compared to each other; reciprocal comparison, as of the moon to a beautiful face; உபமான உபமேயங்கள் ஒன்றற்கு ஒன்று உபமேய உபமானங்களாகவரும் அணி. (அணியி. 3.) |
உபமை | upamai n. <>upa-mā. Comparison, similarity. See உவமை. . |
உபயகர்ப்போட்டம் | upaya-karppōṭṭam n. <>ubhaya+garbha+. Double conception of rain by the clouds, supposed to take place if clouds appear without rain on the last day of the month of Mārkali; மார்கழிமாதத்துக் கடைசி நாளிற் சூற்கொண்டு மழைபெய்யாதுநிற்கும் மேகம். |
உபயகவி | upaya-kavi n. <>id.+. Poet who has attainments enabling him to compose verses with equal facility in two languages, as for example, in Sanskrit and Tamil; இருபாஷைகளிற் கவிபாட வல்லவன். உபயகவிப்புலவன் (திவா. 1, கட்டுரை.) |
உபயகுலம் | upaya-kulam n. <>id.+kula. The two ancestral lines, paternal and maternal; தாய்தந்தை மரபுகள். உபயகுல தீபதுங்க (திருப்பு. 128). |
உபயகுலோத்தமன் | upaya-kulōttamaṉ n. <>id.+id.+ut-tama. One of noble extraction on his paternal as well as maternal sides; தாய்வழி தந்தைவழிகளால் உயர்ந்தவன். உபயகுலோத்தமனபயன் (கலிங். கடவுள். 2.) |
உபயகோமுகி | upaya-kō-muki n. <>id.+. Cow in the act of calving, as having two faces, or heads towards both ways, considered as a fit object of gift for the acquirement of merit; ஈனும்போது கன்றின்முகம் வெளியே உதயமாகியுள்ள பசு. உபயகோமுகியை யீந்தோர் (காசிக. தேவர்கள்பி. 22). |
உபயசம்மதம் | upaya-cammatam n. <>id.+. Acceptance by both parties in a dispute; இருநிறத்தா ரனுமதி. |
உபயத்திரர் | upayattirar n. <>ubhayatra. Both parties; இருதிறத்தாரும். Colloq. |
உபயம் | upayam n. <>ubhaya. 1. Two; இரண்டு. (திவா.) 2. Gift to a temple or a monastery; |
உபயமாதம் | upaya-mātam n. <>id.+. (Astrol.) The four months in which the sun is in the common signs, viz. ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி, corresponding to June-July, September-October, December-January and March-April; உபயராசிமாதங்கள். (W.) |