Word |
English & Tamil Meaning |
---|---|
உபரிசுரதம் | upari-curatam n. <>id.+. Coitus muliere super, virum decumbonte; சுரத விசேடம். (கொக்கோ. 6, 47.) |
உபரிதம் | uparitam n. <>uparītaka. See உபரிசுரதம். இசலியிசலி யுபரித ல¦லையுற்று (திருப்பு. 497). |
உபரிபாகம் | upari-pākam n. <>upari+bhāga. Vedānta, the crown of the Vēdas; வேதாந்தம். உபரிபாகப்பொருள் (பதினொ. திருநாவுக்.1). |
உபலக்கணம் | upalakkaṇam n. <>upa-lakṣaṇa. See உபலட்சணம். (சி. போ. 5, 1, சிற்.) . |
உபலட்சணம் | upa-laṭcaṇam n. <>id. 1. Implying something that has not been made explicit by expressing another thing associated or connected with it; ஒருமொழி ஒழிந்த தன்னினத்தையுங் குறிப்பது. 2. Secondary or unessential mark which helps the recognition of a thing, as the branch of a tree is pointed out to enable one to see through it a constellation or the crescent moon; |
உபலம் | upalam n. <>upa-la. 1. Stone, rock; கல். (சூடா.) 2. Small stone; 3. Crystal; |
உபலம்பம் | upalampam n. <>upa-lambha. Preception, recognition; தோற்றுகை. அவன் றனக்கு ஈஸ்வரனையொழிய ப்ருதக்ஸ்திதியாதல் உபலம்பமாதல் இல்லாமையாலே (ஈடு, 1, 1, 6). |
உபலாலனை | upa-lālaṉai n. <>upa-lālana. Fondling, caressing; கொண்டாடுகை. |
உபலாளனம் | upa-lāḷaṉam n. <>id. 1. See உபலாலனை. 2. Cleansing, purifying; உத்ஸவங்களையும் உபலாளனங்களையும் ஸ்ரீ பாஞ்சராத்ரப்ரகாரமாக வ்யவஸ்தைபண்ணி (கோயிலொ. 54). தூய்மை செய்கை. (திவா.) |
உபலோத்திரம் | upa-lōttiram n. <>upa-lōdhra. Gum of wood-apple tree; விளாம்பிசின். (மூ. அ.) |
உபவசி 1 - த்தல் | upavaci- 11 v. intr. <>upa-vas. To fast; உபவாசஞ்செய்தல். ஆயிரமாண் டுபவசித்து (உத்தரரா. இராவணன்பிற. 26). |
உபவசி 2 | upavaci n. <>upa-vāsin. See உபவாசி. அன்றைக் குபவசியாய் (சைவச. பொது. 303). |
உபவம் | upavam n. Gulancha. See சீந்தில். (மூ. அ.) . |
உபவனம் 1 | upa-vaṉam n. <>upa-vana. Grove, flower-garen; சோலை. அந்த மன்ன னோர் நாளி லுபவனத் தொருவனாய் (ஞானவா. உற்பத்தி. 31). |
உபவனம் 2 | upavaṉam n. Climbing nettle, See காஞ்சொறி. (மூ. அ.) . |
உபவாசகாலம் | upavāca-kālam n. <>upa-vāsa+. 1. Time of religious fasts; பட்டினியாயிருக்கும் விரதகாலம். 2. Lent; |
உபவாசம் | upavācam n. <>upa-vāsa. Fast, fasting; உண்ணா விரதம், இதன் புனலாடி யுபவாச முஞற்றியக்கால் (சேதுபு. பலதீ. 19). |
உபவாசி 1 - த்தல் | upavāci- 11 v. intr. <>id. To fast; உபவாசஞ்செய்தல். ஓங்குந் திரிதி கையுபவாசித்தே (மச்சபு. அனந்ததிரி. 28). |
உபவாசி 2 | upavāci n. <>upa-vāsin. One who observes a fast; பட்டினி நோன்பிருப்பவன். மதத்தவுடலதனா லற்ற வுபவாசி யொளித்துண்பானென் றுணர்தல் (உபநி. 16). |
உபவிருங்கணம் | upaviruṅkaṇam n. <>upa-brmhaṇa. See உபப்பிரும்மணம். (பெரியபு. திருமலைச். சூசனம்.) . |
உபவீதம் | upavītam n. <>upa-vīta. 1. Sacred thread worn by men of the twice-born castes; பூணூல். (பிங்.) 2. Wearing the sacred thread in the usual manner over the left shoulder and under the right arm, app. to பிரா சீனாவீதம்; |
உபவீதி | upavīti n. <>upa-vītin. See உபவீதம், 2, opp. to பிராசீனாவீதி. . |
உபவேட்டனம் | upavēṭṭaṉam n. prob. upa-vēṣṭana. (Nāṭya.) A mode of gesticulation; கூத்தின் அங்கக்கிரியைகளுள் ஒன்று. (சுந்தா; சிலப். பக். 81.) |
உபவேட்டிதம் | upa-vēṭṭitam n. <>upa-vēṣṭita. (Nāṭya.) A gesture by the fingers in dancing; அபிநயவகை. (சீவக. 1257, உரை.) |
உபவேதம் | upa-vētam n. <>upa-veda. Secondary Vēdas, class of writtings subordinate to the Vēdas, of which four are enumerated, viz., ஆயுர்வேதம், தனுர்வேதம், காந்தர்வவேதம், அர்த்தவேதம்; நான்குவேதங்களையடுத்து மத்திக்கப்பெறும் ஆயுர்வேதம் முதலிய நான்குவேதங்கள். (திருக்காளத். பு. 29, 38.) |
உபறியாவி | upaṟiyāvi n. cf. pāribhāvya. Arabian constume. See கோட்டம். (மூ. அ.) . |
உபஸ்தம் | upastam n. <>upa-stha. See உபத்தம். . |
உபஸ்தானம் | upastāṉam n. <>upasthāna. Worshipping accompanied by recitation of mantras, a particular part of sandhyā; மந்திரத்தோடு வழிபடுகை. Brāh. |
உபா | upā n. Tooth-brush tree. See உகா. (L.) . |