Word |
English & Tamil Meaning |
---|---|
உபாயநிட்டை | upāya-niṭṭai n. <>id.+. Fixing on an easy method of attaining spiritual tranquillity; எளிதிற் சித்தியடையும் வழியிலூன்றி நிற்கை. மேலோர் உபாயநிட்டை யுணர்ந்துகின்றார் (சி. சி. 9, 8, மறைஞா. அவ.). |
உபாயநிட்டைவெண்பா | upāya-niṭṭai-veṇpā n. <>id.+. A šaiva šiddhānta treatise by Ampalavāṇa-tēcikar, one of paṇṭāra-cāttiram, q.v.; பண்டாரசாத்திரங்களுள் அம்பலவாண ரியற்றியநூல். |
உபாயம் | upāyam n. <>upāya. 1. That by which a person realizes his aim; means, stratagem, artifice; சூழ்ச்சி. யாஅ ருபாயத்தின் வாழாதார் (நாலடி, 119). 2. Means of overcomming an enemy, one of caturvitōpāyam, q.v.; 3. Four; 4. Smallness; |
உபாயனம் | upāyaṉam n. <>upāyana. Present to a superior; காணிக்கை. மன்னனுக்கிய லுபாயன மென்று கொடுத்தனர் (யசோதர. 3, 5). |
உபாயஸ்வரூபம் | upāya-svarūpam n. upāya+. (Vaiṣṇ.) Nature of the path to final bliss, which is of five kinds, viz. கரும, ஞான, பக்தி, பிரபத்தி, அசாரியாபிமானம், one of artha-pacakam; மோட்சத்தைப்பெறும் வழியின் தன்மை. (அஷ்டாதச. பக். 25.) |
உபாலம்பனம் | upālampaṉam n. <>upālambhana. Reproach, reproof; நிந்திக்கை. சந்திரோபாலம்பனம் (நைடத.). |
உபானம் 1 | upāṉam n. <>upā-nah. Kind of shoes, wooden sandals; மிதியடி உபானபதத்தொடு நடக்கும் (சிவதரு. சுவர்க்க. 142). |
உபானம் 2 | upāṉam n. <>upāna. (Arch.) First moulding above the plinth in the structure of towers, etc., forming the base above the lowest of a series of rows or layers intended to produce an ornamental effect, pedestal; கோபுரத்தின் அடிச்சித்திரவரை. (T.A.S. i, 180.) |
உபானவரி | upāṉa-vāri n. See உபானம்2. (W.) . |
உபுக்கு - தல் | upukku- 5 v. intr. [T. ubuku, U. ubuk.] To swell, overflow; பெருகுதல். (W.) |
உபேட்சி - த்தல் | upēṭci- 11 v. tr. <>upēkṣ. To neglect, disregard, overlook, ignore; புறக்கணித்தல். பரமபதத்தை உபேட்சித்துவந்து (குருபரம். 169, பன்னீ.). |
உபேட்சை | upēṭcai n. <>upēkṣā. Disregard, neglect, indifference; புறக்கணிப்பு. மேதகு மறைவிரோத மேவுநூ லுபேட்சை (சூத. சருவவே தாந். 6). |
உபேந்திரன் | upēntiraṉ n. <>upēndra. Viṣṇu who, at one time, incarnated as a younger brother of Indra; இந்திரனுக்குத்தம்பியாக அவதரித்த திருமால். முச்சகமளந்த வுபேந்திரன் (தணிகைப்பு. விடை. 18). |
உபேந்திராசிரியர் | upēntirāciriyar n. <>id.+ā-cārya. The author of the Ciṉēntiramālai; சினேந்திரமாலை யியற்றியவர். |
உபோதம் | upōtam n. <>upōdaka. Wild spinach. See பேய்ப்பசளை. (மலை.) . |
உபோற்காதம் | upōṟkātam n. <>upōd-ghāta. Introduction, preface; பாயிரம். (தொல். பாயி. விருத். பக். 16.) |
உம் | um part. [K. M. um.] 1. Connective particle implying (a) simple connection, as in சேரனும் பாண்டியனும்; (b) negation, as in மறப்பினு மோத்துக் கொளலாகும்; (c) speciality whether of superiority or inferiority, as in குறவரு மருளுங் குன்றம் or புலையனும் விரும்பாத யாக்கை ; எண்ணும்மை; எதிர்மறையும்மை; சிறப்பும்மை; ஜயவும்மை; எச்சவும்மை; முற்றும்மை; தெரிநிலையும்மை; ஆக்க வும்மை. (நன். 425.) 2. Ending of (a) 3rd pers. sing. of all genders and of the impers. pl. of verbs of the present as well as the future tense; பலர்பாலொழிந்த படர்க்கை நிகழ்கால எதிர்கால முற்று விகுதி; (b) imp. pl. ஏவற்பன்மைவிகுதி; (c) opt. auxilary; ரு வியங்கோல்துணைவிகுதி. பழுதுறா 3. A poetic expletive; |
உம்கூட்டு - தல் | um-kūṭṭu- v. intr. See உம்கொட்டு- Colloq. . |
உம்கொட்டு - தல் | um-koṭṭu- v. intr. [T. ūkoṭṭu.] 1. To respond by ejaculating um as in listening to a story that is told; உம்மொலியிட்டுப் பிறர் கூறுவதைக் கேட்டல். 2. To say 'yea', agree without questioning; |
உம்பர் | umpar <>உ4. n. 1. Elevated spot, higher place; மேலிடம். மாடத்தும்பர் (ஞானா. 9, 6). 2. Height, elevation; 3. Sky, firmament; 4. Celestial world, paradise; 5. [M. umbar.] Celestials, immortals, gods; 6. Brāh-mans; -adv. 1. Yonder, on the farther side of; 2. Overhead, aloft; |