Word |
English & Tamil Meaning |
---|---|
உம்பர்கோன் | umpar-kōṉ n. <>உம்பர்+. [M. umbarkōn.] Indra, the lord of the celestials; இந்திரன். உம்பர்கோனு முலகேழும் வந்தீண்டி வணங்கும் (திவ். பெரியதி. 5, 4, 5). |
உம்பரார் | umparār n. <>id. Celestials; தேவர். உம்பரார்க்கு முரைபருந் தகைய ரானார் (சீவக. 1678). |
உம்பரான் 1 | umpar-āṉ n. <>id.+ ஆன்1 1. Cow of the celestial world; காமதேனு. (W.) |
உம்பரான் 2 | umparāṉ n. <>id.+ ஆன் suff. Person in high state, one in exalted position; உயர்நிலையி லிருப்பவன். உவப்பி னும்பரான் (கந்தபு. மாயைப். 33). |
உம்பருலகு | umpar-ulaku n. <>id.+. World of the gods; தேவலோகம். கற்போர் . . . உம்பருலகாள்வர் (திருவாலவா. பயன்மு. 5). |
உம்பல் 1 | umpal n. prob. உ4. 1. Descendant; வழித்தோன்றல். நல்லிசைச் சென்றோ ரும்பல் (மலைபடு. 540). 2. Family, tribe; 3. Male of the elephant or of the goat; 4. Elephant; 5. Rising in view, becoming visible; 6. Power, strength; |
உம்பல் 2 | umpal n. Coomb teak. See குமிழ். (மலை.) . |
உம்பளம் 1 | umpaḷam n. [T. umbaḷamu, K. umbaḷi.] Land granted rent-free for the performance of services; மானியநிலம். Loc. |
உம்பளம் 2 | umpaḷam n. <>உப்பளம். Salt pan; உப்பளம். உம்பளந் தழீஇய வுயர்மண னெடுங்கோட்டு (மணி. 24, 27). |
உம்பன் | umpaṉ n. <>உம்பர். Pre-eminent being; உயர்ந்தோன். உம்பரீச ரும்பன். (ஞானா. பாயி. 7, 4.) |
உம்பி | umpi n. <>உன்+பி. suff. He who was born after you, your younger brother; உன் தம்பி. உம்பியெம்பியென்று (திவ். பெரியதி 5, 8, 1). |
உம்பிடிக்கோல் | umpiṭi-k-kōl n. A standard measuring rod used for measuring lands; நிலவளவு கோல்வகை. Rd. |
உம்பிளிக்கை | umpiḷikkai n. [T. umbaḷika, K. umbaḻige, Tu. umboḷi.] See உம்பளம்1. Loc. . |
உம்மாங்காய் | ummāṅ-kāy n. <>ஊமன்+. Seedless palmyra fruit; கொட்டையில்லாப் பனங்காய். (J.) |
உம்மச்சு 1 | ummaccu n. <>T. ommattsu. See உம்மிசம். . |
உம்மச்சு 2 | ummaccu n. prob. T. kammattsu. Wire-drawer's plate; கம்பியிழுக்கும் சட்டம். |
உம்மணாமூஞ்சி | ummaṇā-mūci n. <>உம்மெனல்+ஆம்+மூஞ்சி. 1. One who is unable to speak freely; one who hesitates in speaking; தாராளமாகப் பேசத்தெரியாதவன். Vul. 2. Sullen, sulky person; |
உம்மத்து | ummattu n. <>Arab. ummat. Followers, adherents; பின்பற்றுபவர்கள். Muham. |
உம்மாண்டி | ummāṇṭi n. <>ஊமாண்டி. Bugbear; பூச்சாண்டி. Nurs. (J.) |
உம்மிசம் | ummicam n. <>T. ommattsu. Groove in the framework of a jewel in which stones are to be set; இரத்தினம் பதிக்க அமைத்த நகைக்கட்டடம். Loc. |
உம்மெனல் | um-m-eṉal n. 1. Utterance of an interj. sound um expressive of assent, anger, or threat; உடன்பாடு சினம் முதலியவற்றின் ஒலிக்குறிப்பு. 2. Onom. expr. denoting the sound of bubbing streams, pattering of rain, murmuring of the wind; |
உம்மை 1 | ummai n. <>உம். The part. உம்; உம்மெனிடைச்சொல். உம்மை யெட்டே (நன். 425). |
உம்மை 2 | ummai n. <>உம்-மை. 1. Birth previous to the present one; முற்பிறப்பு. உம்மை வினைவந் துருத்த லொழியாது (மணி. 26, 32.). 2. Life beyond the grave, existence after the present life; |
உம்மைத்தொகை | ummai-t-tokai n. <>உம்மை1+. (Gram.) An elliptical compound in which the conj. part. உம் is understood, as இராப்பகல்; உம் என்பது தொக்க தொகை. (நன். 368, உரை.) |
உமட்டியர் | umaṭṭiyar n. fem. of உமணர். Women of the umaṇ caste; உமணசாதிப்பெண் மக்கள். உமட்டிய ரீன்ற . . . புதல்வரொடு (சிறுபாண். 60). |
உமண் | umaṇ n. cf. உமணன். The caste of salt-makers; உப்பமைப்போர்சாதி. (நன்.210, மயிலை.) |