Word |
English & Tamil Meaning |
---|---|
உபாக்கியானம் | upākkiyāṉam n. <>upā-khyāna. Episode, short story introduced into a long one; கிளைக்கதை. நளோபாக்கியானம். |
உபாகமம் | upākamam n. <>upāgama. (šaiva.) 1. Secondary Agamas, said to be 207 in number; மூலாகமங்கலின் வழித்தோன்றிய சைவ ஆகமங்கள்.(சைவச. பொது. 336, உரை.) 2. The Tamil name for the Book of Deuteronomy; |
உபாகர்மம் | upakarmam n. <>upā-karman. Cermoney performed once a year before commencing to recite the Vēda when the sacred thread is put on anew; சிராவணச்சடங்கு. Brāh. |
உபாங்கதாளம் | upāṅka-tāḷam n. <>upānga+. (Mus.) Variety of time-measure; தாள வகை. (பரத. தாள. 4, உரை.) |
உபாங்கம் | upāṅkam n. <>upāṅga. 1. Minor limb or member; சார்புறுப்பு. 2. A class of writings, supplementary to the Vēdāṅgas, of which four are enumerated, viz. மீமாஞ்சை, நியாயம், புராணம், மிருதி; 3. Kind of drum; 4. Subsidiary musical instrument; 5. See உபாங்கதாளம். |
உபாங்கராகம் | upāṅka-rākam n. <>id.+. (Mus.) A melody-type; இராகவகை. Loc. |
உபாசகன் | upācakaṉ n. <>upāsaka. 1. Worshipper, devotee; உபாசனை செய்வோன். விழைவா லுபாசக ராகி (விநாயகபு. 83, 107). 2. Buddhist layman, opp. to பிக்ஷு; |
உபாசகை | upācakai n. Fem. of உபாசகன். Buddhist woman of the laity; பௌத்தரில் இல்லறத்தவள். (மணி. 28, 12. அரும்.) |
உபாசனம் | upācaṉam n. <>upāsana. See உபாசனை. . |
உபாசனை | upācaṉai n. <>upāsanā. Worship; வழிபடு. இருவேறாகு முபாசனை (விநாயகபு. 83, 67). |
உபாசி - த்தல் | upāci- 11 v. tr. <>upās. To worship; வழிபடுதல். நயந்துபா சித்த வாறும் (விநாயகபு. பதி.3). |
உபாஞ்சு | upācu n. <>upāmšu. See உபாம்சு. (சைவச. பொது. 152, உரை.) . |
உபாத்தி | upātti n. <> upādhyāya. Teacher; உபாத்தியாயன். (பிங்.) |
உபாத்தியாயம் | upāttiyāyam n. <>id. Profession of conducting religious ceremonies; புரோகிதத் தொழில். Brāh. |
உபாத்தியாயன் | upāttiyāyaṉ n. <>id. 1. Teacher, schoolmaster; கற்பிப்போன். 2. Religious preceptor; |
உபாத்தியாயனி | upāttiyāyaṉi n. <>upādhyāyānī. Lady teacher, schoolmistress; படிப்பிப்பவள். |
உபாத்தியாயி | upāttiyāyi n. <>upādhyāyī. See உபாத்தியாயனி. Loc. . |
உபாத்தினி | upāttiṉi n. <>upādhyāyānī. See உபாத்தியாயனி. . |
உபாதானகாரணம் | upātāṉa-kāraṇam n. <>upā-dāna+. Material cause, as clay for a pot; முதற்காரணம். |
உபாதானம் | upātāṉam n. <>upā-dāna. 1. See உபாதானகாரணம். உலகமேருபாதான மின்றெனி னின்று (ஞானா. 14, 9). 2. Dole of uncooked rice; |
உபாதி 1 | upāti n. <>upā-dhi. 1. Dues; கடமை, எப்பேர்ப்பட்ட உபாதிகளும் இழித்து விட்ட அளவுக்கு (S.I.I. ii, 118). 2. (Log.) Special cause of a general effect; 3. Appearance, phantom; |
உபாதி 2 | upāti n. cf. bādhā. 1. Torment, agony, pang; வேதனை. உச்சியிற் சாலவுபாதி பசிதாகமாகும் (பட்டினத். திருப்பா. திருத்தில்லை. 8). 2. Disease, ailment; 3. Hindrance, obstruction; |
உபாதி 3 - த்தல் | upāti- 11 v. tr. <>id. To cause distress; to afflict, torment; torture; உபத்திரவஞ்செய்தல். (J.) |
உபாதேயம் | upātēyam n. <>upā-dēya. That which is worthy of acceptance or adoption; ஏற்றுக்கொள்ளத்தக்கது. குருவசனம் எப்போதும் உபாதேயமானது. |
உபாம்சு | upāmcu n. <>upāmšu. Recitation of a mantra in a hushed low voice so as to be heard by the reciter alone; தனதுசெவிகேட்க வாய்க்குட் செபிக்கை. சிவமந்திரத்தை வாசகமாகத்தான் உபாம்சுவாகத்தான் மானசமாகத்தான்.. . ஜபிப்பது (சி. சி. 8, 23, சிவாக்). |
உபாயக்காரன் | upāya-k-kāraṉ n. <>upā-ya+. Artful person, schemer, contriver; தந்திரி. Loc. |