Word |
English & Tamil Meaning |
---|---|
நூனதை | nūṉatai, n. <>nyūna-tā. Defect; குறைவு. சிவனுக்கு . . . நூனதை ஆரோபித்தலின் சுவாமித் துரோகிகளாய் (சிவசமவா. பக். 38). |
நெகிழ்ச்சி | nekiḷcci, n. <>நெகிழ்-. 1. Loosening, slackening; தளர்கை. (W.) 2. Tenderness of feeling; |
நெகிழியல்வஸ்து | nekiḷ-iyal-vastu, n. <>id.+இயல்+. Fluid; நீர்த்தன்மையுடைய பண்டம். Mod. |
நெஞ்சுக்கல் | necu-k-kal, n. <>நெஞ்சு+. That which oppresses the mind; மனத்தை உறுத்துவது. Nā. |
நெஞ்சுக்கூடு | necu-k-kūṭu, n. <>id.+. Thorax; வயிற்றிற்குறிமேலுங் கழுத்திற்குக் கழும் உள்ள உடற்பகுதி. |
நெஞ்சுத்திடுக்கம் | necu-t-tiṭukkam, n. <>id.+. Trembling of the heart; மனநடுக்கம். Nā. |
நெஞ்செதிர் | necetir, adv. <>id.+. Directly in front; நேரெதிரில். பெண்களை நெஞ்செதி ராகவே கண்டால் (வள்ளி. கதை. Ms.) |
நெட்டாள் | neṭṭāḷ, n. prob. நெடு-மை+. A tax; வரிவகை. (S. I. I. vii, 489.) |
நெட்டிப்புல் | neṭṭi-p-pul, n. <>நெட்டி+. Ayiri, a long grass; அயிரி என்ற புல்வகை. (W.) |
நெட்டிமுட்டி | neṭṭimuṭṭi, n. A plant; செடிவகை. (பரி அக.) |
நெட்டுவட்டி | neṭṭu-vaṭṭi, n. <>நெடு-மை+. Simple interest; சாதாரண வட்டி. Loc. |
நெட்டெழுத்து | neṭṭeḻuttu, n. <>id.+. 1. Document-writing; பத்திர முதலியான எழுதுகை பத்திரத்தின் . . . நெட்டெழுத்துக்கூலி ரிஜிஸ்தர்ச் செலவோடு (பஞ்ச. திருமுக. 1584). 2. The body of a document or letter; |
நெட்டை | neṭṭai, n. prob. id. Carcass; பிணம். Pond. |
நெட்டோலை | neṭṭōlai, n. <>id.+. Mat of plaited palmyra-leaf; பறியோலை. நெட்டோலைச் சயனத்தார் (நூற்றெட்டுத் திருப்புகழ். 95). |
நெடுக்குமரம் | neṭukku-maram, n. <>நெடுக்கு+. Longitudinal frame, as of a door; வாசற்கால் கதவுச்சட்டம் முதலியவற்றின் பக்கவடம். Loc. |
நெடுங்கப்பற்று - தல் | neṭuṅka-p-paṟṟu-, v. tr. prob. நெருங்கு-+. To grasp firmly; இறுகப் பிடித்தல். கண்ட இரை நெடுங்கப் பற்றி வழுங்கிய பாம்புபோல் (நீலகேசி, 308, உரை). |
நெடுங்கம்பு | neṭuṅ-kampu, n. <>நெடு-மை+. A kind of bulrush millet; கம்புப்பயிர்வகை. (விவசா. 4.) |
நெடும்புழு | neṭum-puḻu, n. <>id.+. A disease of crops, due to worms; பயிரில்விழும் பூச்சிநோய்வகை. Nā. |
நெடுமடல் | neṭu-maṭal, n. <>id.+. A metallic vessel for sacred ashes; திருநீறு வைக்கும் பாத்திரவகை. (S. I. I. ii, 419.) |
நெடுமை | neṭumai, n. Long vowel; நெட்டெழுத்து. நெடுமையுந் தீர்க்கமு நெடிற்பெயர் (பேரகந். 15). |
நெடுவட்டி | neṭu-vaṭṭi, n. <>நெடு-மை+. See நெட்டுவட்டி. Tinn. . |
நெடுவாலன் | neṭu-vālaṉ n. <>id.+. Rope; கயிறு. (J.) |
நெடுவாலி | neṭu-vāli, n. <>id.+. Iguana; உடும்பு. Nā. |
நெய் | ney, n. Cementing substance; சாந்துடன் சேர்ந்து இறுகப்பிடித்துக் கொள்ளுதல்குரிய கருப்புக்கட்டி முதலியன. மணலும் நீருங் கூட வரைந்த சாந்திற் கருப்புக் கட்டியாகிய நெய் அளவினவாறுபோல (நீலகேசி, 310, உரை). |
நெய்விலை | ney-vilai, n. <>நெய்+. A tax; வரிவகை. (S. I.I. ii, 352.) |
நெரளைதாளி | neraḷaitāḷi, n. A tree, Antidesma alexiteria; மரவகை. Pond. |
நெரிசம் | nericam, n. Spear; ஈட்டி. Loc. |
நெருக்கு - தல் | nerukku-, 5 v. tr. To press, as in a mill; to crush; ஆலை செக்கு முதலியவற்றில் இட்டு ஆட்டுதல். நல்ல கரும்பு நெருக்கிச் சாறுதிரட்டி வட்டாகச் செய்த அக்காரமும் (திவ். பெரியாழ். 2, 9, 7, வ்யா. பக். 468.) |
நெருஞ்சிப்பாகல் | neruci-p-pākal, n. <>நெருஞ்சி+. A kind of balsam pear; மிதிபாகல். Madr. |
நெருஞ்சிப்பூ | neruci-p-pū n. <>id.+. An ornament; ஓரணி. (Insc.) |
நெருப்புக்குச்சி | neruppu-k-kucci, n. <>நெருப்பு+. Match; தீக்குச்சி. Mod. |
நெருப்புப்பூ - த்தல் | neruppu-p-pū-, v. intr. <>id.+. To smoulder, as live charcoal; நீறுபூத்தல். Loc. |