Word |
English & Tamil Meaning |
---|---|
நெருப்புப்பெட்டி | neruppu-p-peṭṭi, n. <>id.+. Match box; தீப்பெட்டி. Mod. |
நெருப்பெறும்பு | neruppeṟumpu, n. <>id.+. A kind of small red ant whose bite is very painful; கடித்தவிடத்து நெருப்புப்பட்டது போல் வலியுண்டாக்கும் ஓருவகைச் சிவப்புச் சிற்றெறும்பு. Loc. |
நெருப்போடு | neruppōṭu, n. <>id.+. Chafing dish, used by goldsmiths; தட்டார் வேலைக்குரிய நெருப்புச்சட்டி. Colloq. |
நெல்லானி | nellāṉi, n. Guinea peach; வம்மி. (L.) |
நெல்லிக்காய்முத்து | nellikkāy-muttu, n. <>நெல்லிக்காய்+. cf. நெல்லிக்காய்மணி. A kind of necklet; கழுத்தணிவகை. (S.I.I. viii, 59.) |
நெல்லுப்பருத்தி | nellu-p-parutti, n. <>நெல்+. A kind of cotton; பருத்திவகை. (M.E.R. 1915, p. 107.) |
நெல்லுமா | nellu-mā, n. <>id.+. Rice, flour; நென்மா. (நாநார்த்த. 2, உரை.) |
நெல்லூர்ப்புதுமாடை | nellūr-p-putumāṭai, n. <>நெல்லூர்+. A coin; நாணயவகை. (M. E. R. 116 of 1929-30.) |
நெல்லூர்மாடை | nellūr-māṭai, n. <>id.+. A coin; நாணய வகை. (M. E. R. 356 of 1919 B.) |
நெல்லெடை | nel-l-eṭai, n. <>நெல்+. Weight of a grain of paddy, used as a unit in weighing gold; பொன் நிறுக்க வுதவுஞ் சிறு எடை வகை. |
நெளிவர்ணச்சேலை | neḷi-varṇa-c-cēlai, n. <>நெளி+வர்ணம்+. A kind of saree; புடவை வகை. (பஞ்ச. திருமுக. 1160.) |
நெற்குறுசாலை | neṟ-kuṟu-cālai, n. <>நெல்+குறு-+. Place where paddy is husked; நெல்லைக் குத்தும் இடம் (S. I.I. iv, 188.) |
நெற்சம்பளம் | neṟ-campaḷam, n. <>id.+. Salary paid in paddy; நெல்லாகப் பெறுஞ் சம்பளம். பணம் வேறு நெற்சம்பளம் வேறு பற்றி (சரவண. பணவிடு, 120). |
நெற்றி | neṟṟi, n. Middle; நடு. காலை நெற்றியிலகிலமுஞ்சுடு கனலிகுறைபட (தக்கயாகப். 334). |
நெற்று - தல் | neṟṟu-, 5 v. tr. To attain as an end; பெறுதல். Pond. -intr. 2. To mature, ripen; |
நெறி 1 | neṟi, n. cf. நெரி. Inflammation of the gland; நெறிக்கட்டி. Colloq. |
நெறி 2 - த்தல் | neṟi-, 11 v. tr. To look; நோக்குதல். (நீலகேசி, 53, உரை) |
நென்புடவை | neṉ-puṭavai, n. prob.மென்மை+. A kind of fine cloth, dist. fr. parum-puṭavai; மெல்லிய ஆடைவகை. நென்புடவை பொதி ஒன்றுக்குக் காசு இருபதும் (S. I.I. viii, 233). |
நேசங்காட்டி | nēcaṅ-kāṭṭi, n. <>நேசம்+. Cajoler; இச்சகம் பேசுவோன். Pond. |
நேமநிஷ்டை | nēma-niṣṭai, n. <>நேமம்+. Daily rites and observances; நித்தியானுட்டானம். |
நேமநெட்டு | nēmaneṭṭu, n. Benami; மலரணை. Loc. |
நேமுகம் | nēmukam, n. <>நியமகம். Appointment; நியமனம். Loc. |
நேமுகன் | nēmukaṉ, n. prob. நியாமகன். Officer; உத்தியோகஸ்தன். நிசக்கட்டாகக் கொடுக்கும் நேமுகர்போல் (சரவண. பணவிடு. 139.) |
நேர் | nēr, n. Manner; பிரகாரம். இந்நேரிலே தந்தாம் பிள்ளைகள் தாய்மார் பக்கலிலே அழுது சென்றால் தரிப்பார்களோ (திவ். பெரியாழ். 2, 2, 3. வ்யா. பக். 253.) |
நேர்கோடு | nēr-kōṭu, n. <>நேர்+. Straight line; வளையாத கோடு. Mod. |
நேர்கோணக்கருவி | nēr-kōṇa-k-karuvi, n. <>நேர்கோணம்+. Mason's rule; மூலைமட்டப் பலகை. Pond. |
நேர்கோணம் | nēr-kōṇam, n. <>நேர்+. Right angle; ஒன்றுக்கொன்று செங்குத்தான கோடுகளின் இடையேயுள்ள கோணம். Pond. |
நேர்ச்சிக்கடா | nērcci-k-kaṭā, n.<>நேர்ச்சி+. Ram intended as a row offering to a deity; பிரார்த்தனைக்கு நேர்ந்துவிட்ட ஆட்டுக்கிடாய். Nā. |
நேர்ந்தவாக்கில் | nērnta-vākkil, adv. <>நேர்-+. Loc. 1. At random; முறையின்றி, 2. At Pleasure; |
நேர்ந்தவாக்கு | nērnta-vākku, n. <>id.+. Rashness; நேர்ந்தபோக்கு. (W.) |
நேர்மை | nērmai, n. <>id. Occurrence; சம்பவம். இதுகண் டிந்நேர்மை புதிதென் றதிசயித்தான் (மகாராஜாதுறவு, 111). |
நேரப்பலன் | nēra-p-palaṉ, n. <>நேரம்+. Astrological effect of the time when a work is commenced; காரியத் தொடங்கப்பட்ட வேளையின் பலன். Nā. |