Word |
English & Tamil Meaning |
---|---|
நேரப்போக்கு | nēra-p-pōkku, n. <>id.+. Pastime; பொழுதுபோக்குகை. வெற்றுநேரப் போக்காய்ப்புகல் வினோதமுமன்று (இரக்ஷணிய. பக். 2). |
நேரியது | nēriyatu, n. cf. நேரியல். A kind of fine cloth; ஒருவகை நல்லாடை. Nā. |
நைமிசம் | naimicam, n. A spiritual world, one of kuyyāṭṭaka-puvaṉam, q.v.; குய்யாட்டகபுவனத்து ளொன்று. (சி. போ. பா. 2, 3, பக். 213.) |
நைராத்மியதர்சனம் | nairātmiya-tar-caṉam, n. <>nis+ātmya+. The doctrine of the non-existence of the soul; ஆன்மா இல்லை என்ற வாதம். (நீலகேசி, 528, உரை.) |
நொக்கல் | nokkal, n. A kind of sweetmeat; தின்பண்டவகை நொக்கல் பால்கோவா (பஞ்ச, திரு முக. 1837.) |
நொங்கு - தல் | noṅku-, 5 v. intr. prob. நுங்கு-. To become weak and emaciated; மெலிதல். அங்கமு நொங்குதே (கனம்கிருஷ்ணையர், 72). |
நொண்டங்காய் | noṇṭankāy, n. Nā. 1. Tender fruit of tamarind; புளியங்காயின் பிஞ்சு. 2. Tamarind fruit almost ripe; |
நொந்துபோ - தல் | nontu-pō-, v. intr. <>நோ-+. 1. To be improverished; to be reduced in circumstances; நிலைக்கெடுதல். (W.) 2. To become spoilt; |
நொம்பலம் | nompalam, n. Pain; நோவு. Nā. |
நொரநாட்டியம் | noranāṭṭiyam, n. Fastidiousness; நொறுநாட்டியம். Tinn. |
நொள்ளை | noḷḷai, n. Infant, baby; கைக்குழந்தை. Tinn. |
நொற்பம் | noṟpam, n. perh. நொய்ப்பம். Insignificance; எளிமை. நொற்பவுலகத்தவர் நோய் தீர்த்து (பஞ்ச. திருமுக. 611). |
நொற்பன் | noṟpaṉ, n. See நொற்பம். (யாழ். அக.) . |
நோ - தல் | nō-, 13 v. tr. To hate; வெறுத்தல். ஏதிலரை நோவதெவன் (நீதிநெறிவி.25). |
நோக்கட்டாமரம் | nōkkaṭṭā-maram, n. cf. நெய்க்கொட்டான்+. Loquat. See இலகோட்டா. (L.) |
நோக்கிமாடை | nōkki-māṭai, n. perh. நோக்கு-+. A coin; நாணயவகை. ஸ்ரீபண்டாரத்தில் ஒடுக்கின நோக்கிமாடை ஒன்றும் (S. I. I. iv, 293). |
நோக்கு - தல் | nōkku-, 5 v. tr. To supervise; கண்காணித்தல். இம்மடம் நோக்கும் திருமேனிக்கு. (S. I. I. iv, 17). |
நோட்டம் | nōṭṭam, n. Account; கணக்கு. நோட்டத்திற் செல்லெழுதி (சரவண. பணவிடு. 84). |
நோய்க்குணக்குறி | nōy-k-kuṇa-kuṟi, n. <>நோய்+குணம்+. See நோய்க்குறி. Pond. . |
நோய்க்குறி | nōy-k-kuṟi, n. <>id.+. Symptom of a disease; நோயின் அடையாளம். Pond. |
நோய்க்கூறுபாடு | nōy-k-kūṟupāṭu, n. <>id.+. See நோய்க்குறி. Pond. . |
நோயாளிசாலை | nōyāḷi-cālai, n. <>நோயாளி+. See நோவாளிமடம். Pond. . |
நோலாமை | nōlāmai, n. <>நோல்+ஆ neg. Unrepentance; செய்த பாவத்துக்கு வருந்தாமை.R.C. |
நோலாவலை | nōlāvalai, n. A kind of fishing net; மீன் பிடிக்கும் வலைவகை. (அபி. சிந். 1017.) |
நோவாளிமடம் | nōvāḷi-maṭam, n. <>நோவாளி+. Hospital; வைத்தியசாலை. Pond. |
ப்ரப்ருதி | prapruti, part. <>prabhrti. Suffix meaning 'and others'; முதலானோர் என்னும் பொருளில் வரும் இறுதிநிலை. ஸ்ரீ மதுரகவிப்ரப்ருதி ஸ்ஜ்ஜனங்களடங்கலும். (ஈடு. 1, 3, 2.) |
ப்ரயோஜகம் | prayōjakam, n. <>prayōjaka. Epitome; சுருக்கம். இனி ப்ரயோஜகத்திலே சொல்லிவிடுமன்று ப்ரதிபத்திக்கு விஷயமாகாது (ஈடு, 1, 1, 4). |
பக்கச்சுருள் | pakka-c-curuḷ, n. prob. பக்கம்+. Tinn. 1. Additional presents made to a bridegroom by the bride's party; மணமகள் வீட்டாரால் மணமகனுக்கு அதிகப்படியாகக் கொடுக்கப்படுஞ் சம்பாவளை. 2. Presents made to bridegroom's relatives at a marriage; |