Word |
English & Tamil Meaning |
---|---|
பங்கலா | paṅkalā, n. <>E. Bangalow; பங்களா. pond. |
பங்காளி | paṅkāḷi, n. <>பங்கு+. An officer whose duty was to prepare a record of all the holdings in a village; ஊரார் நிலஉரிமைகளை வகுத்தெழுதும் உத்தியயோகஸ்தன். (கடம்பர். உலா, 50.) |
பங்கீடு | paṅkīṭu, n. <>id.+. Account; கணக்கு விவரம். குடிகளுக்குப் பங்கீடு சொல்லப்பயங்கொண்டு (சரவண. பணவிடு. 133). |
பங்கு | paṅku, n. prob. பகு-. 1. District; ஜில்லாப்பகுதி. Pond. 2. Turban; |
பங்குவழியினாம் | paṅku-vaḻi-y-iṉām, n. <>பங்கு+. Land granted to a body of persons in common, for the encouragement of cultivation; வியவசாய விருத்திக்காக ஒரு கூட்டத்தாருக்கு இனாமாகக் கொடுக்கும் நிலம். (R. T.) |
பங்கோற்பயிண்டு | paṅkōṟpayiṇṭu, n. Imprisonment in a jail; ஜெயிலில் அடைக்கை. பங்கோற்பயிண்டு பருவிலங்குமாட்டி (பஞ்ச. திருமுக. 1732). |
பச்சாளை | paccāḷai, n. A disease of crops; பயிர்கட்குவரும் நோய்வகை. Tinn. |
பச்சிமத்தோன் | paccimattōṉ, n. <>pašcima. Saturn; சனி. (சாதகசிந். 7.) |
பச்சை | paccai, n. 1. See பச்சாளை. (யாழ். அக.) . 2. A shrub; |
பச்சைக்கல்யாணி | paccai-k-kalyāṇi, n. <>பச்சை+. One of the seven mythical horses of the sun's chariot; சூரியன் தேர்க்குதிரைகளுளொன்று. |
பச்சைநரம்பு | paccai-narampu, n. <>id.+. Vein; உடலில் அசுத்த இரத்தம் ஓடுங் குழாய். Loc. |
பச்சைப்பணம் | paccai-p-paṇam, n. <>id.+. A tax; வரிவகை. (pudu. Insc.) |
பச்சைப்பருப்பு | paccai-p-paruppu, n. <>id.+. Split green gram; சிறு பயற்றம்பருப்பு. Loc. |
பச்சைப்பாக்கு | paccai-p-pākku, n. <>id.+. Unripe or undried areca-nut; உலரவைக்காதபாக்கு. (W.) |
பச்சைமிளகாய் | paccai-miḷakāy, n. <>id.+. Green chilli; பழுக்காத மிளகாய். Colloq. |
பசகம் | pacakam, n. <>bhāja-ka. Divisor; வகுக்கும் எண். Pond. |
பசடன் | pacaṭan, n. cf. கசடன். Ignorant person; அறிவிலான். (புன்பசடர் செய்தகுற்றம் பொறுத்திடவும் வேண்டாமோ (வள்ளி. கதை. Ms.). |
பசபசப்பு | pacapacappu, n. Redupl. of பசப்பு-. Tale-bearing; கோள். Pond. |
பசலைமரம் | pacalai-maram, n. <>பசலை+. Fruit tree; பயன்றருமரம். (S. I. I. iv, 105.) |
பசளைக்கல் | pacaḷai-k-kal, n. perh. id.+. Marl; சுண்ணாம்பு கலந்த களிமண். Pond. |
பசாசமடந்தை | pacāca-maṭantai, n. <>பசாசம்+. A woman who has paicāca-cattuvam; பைசாசசத்துவமுள்ள பெண். பள்ளிகொள்ளாள் பசாசமடந்தையே (கொக்கோ. 4, 22). |
பசித்துவாழ் - தல் | pacittu-vāḻ-, v. intr. <>பசி-+. To live in indigent circumstances; எளியவாழ்வு வாழ்தல். (S. I. I. vi, 149.) |
பசியன் | paciyaṉ, n. <>பசி. Hungryman; பசியுடையவன். பசியரா யிருக்குமவர்கள் சோறுசமையப்பற்றாமல் வெந்தது கொத்தையாக வாயிலிடு மாபோலே (ஈட, 1. 3, 1). |
பசு - த்தல் | pacu-, 11 v. intr. <>பசு-மை. To be green; பசுமையாதல். பசுத்த மரகதம்போலேயிருக்கிற மடக்கிளியே (திவ். பெருமாள். தனியன், 3). |
பசுங்கூட்டு | pacuṅ-kūṭṭu, n. <>id.+. Ground lime; சுண்ணாம்புச்சாந்து. ஆட்டாண்டு. தோறும் பசுங்கூட்டாலே ஜீர்ணோத்தாரம் பண்ணவேண்டுகையாலும் (S. I. I. vii, 501). |
பசுந்தாளெரு | pacun-tāḷ-eru, n. <>id.+தாள்+. Green leaves, used as manure; தழையுரம். Loc. |
பசுப்பு | pacuppu, n. <>பசு-. 1. Greenness; பசுமை. ஆற்றங்கரைப் பசுத்தா னக்கரையோ டிக்கரையாய்த் தோற்றும் பசுப்பைத் தொடர்வுறுமே (பாடு. 29, நெஞ்சிற்.). 2. [T. pašupu] Greenish yellow; |
பசுபாகநியாயம் | pacu-pāka-niyāyam, n. <>பசு+. (Log.) A nyāya; நியாயவகை. (அபி. சிந். 613.) |
பசுவன் | pacuvaṉ, n. cf. basava. The boy in charge of the bull-worship in a kōlāṭṭam festival; கோலாட்டக் கொண்டாட்டத்திலே விருஷபபூஜை செய்யும். மாணி. Loc. |
பசை | pacai, n. A kind of lubricant for carts; உசவு. Tj. |
பசைப்படம் | pacai-p-paṭam, n. <>பசை+. Cloth smeared with paste and prepared for painting; கஞ்சிபூசிப் படமெழுதத் தயாரித்த துணி. (பஞ்சதசப்பிர. பக். 2.) |