Word |
English & Tamil Meaning |
---|---|
பஞ்சமாசத்தம் | paca-mā-cattam, n. <>pacan+. The five drums, viz., ceṇṭai, timilai, cēkaṇṭi, kai-t-tāḷam and kāḷam or tattaḷi, mattaḷi, karaṭikai, tāḷam, kākaḷam; செண்டை திமிலை சேகண்டி கைத்தாளம் காளம் என்றும் தத்தளி மத்தளி கரடிகை தாளம் காகளம் என்றும் இருவிதமாகச் சொல்லும் ஐவகைப் பறை. (T.A. S. V, 172.) |
பஞ்சமுகம் | paca-mukam, n. <>id.+. A kind of surgical instrument; சத்திரவைத்தியத்திலுபயோகிக்கும் ஆயுதவகை. (தஞ். சர. iii, 40.) |
பஞ்சமுத்திரை | paca-muttirai, n. <>id.+. An ornament worn on the foot, consisting of pieces shaped like the five weapons of Viṣṇu; பஞ்சாயுத வடிவங்களாகச் செய்து சேர்த்த காலணி. (சீகாழிக். 411.) |
பஞ்சரட்டை | pacaraṭṭai, n. A kind of bird; பறவைவகை. (தஞ். சர. iii, 160.) |
பஞ்சலத்தார் | pacalattār, n. perh. pacan. The five artisan communities; பஞ்சகம்மாளர். (I. M. P. cg. 692.) |
பஞ்சவர் | pacavar, n. <>id. (Jaina.) The five groups of heavenly bodies, viz., cantiraṉ, cūriyaṉ, 7 kōḷ, 27 nakṣatras and the other stars; சந்திரன் சூரியன் ஏழுகோள்கள் இருபத்தேழு நட்சத்திரங்கள் ஏனைய நட்சத்திரங்கள் ஆகிய ஐவகைச் சோதிகள். (தக்கயாகப். பக். 282.) |
பஞ்சவாரம் | paca-vāram, n. <>id.+. Land revenue due to government and payable in kind, being one-fifth of the tenant's share of the produce; கண்டுமுதலிற் குடியானவன் பங்கில் ஐந்திலொரு பாகமாகிய அரசிறை. (S. I. I. iii, 380.) |
பஞ்சாங்கம் | pacāṅkam, n. <>id.+. (Jaina.) The five elements constituting the sin of killing; கொலைப்பாவத்துக்குரிய ஐந்து உறுப்புக்கள். (நீலகேசி, 541, உரை.) |
பஞ்சாணுவிரதம் | pacāṇu-viratam, n. <>id.+அணு+. (Jaina.) The five vows practised by laymen; சைனருள் இல்வாழ்வான் அனுஷ்டிக்கும் ஐந்து விரதங்கள். (மேருமந். கதை. 24.) |
பஞ்சாரத்திருவிளக்கு | pacāra-t-tiruviḷakku, n. perh. பஞ்சரம்+. A kind of light; விளக்குவகை. (S. I. I. v, 215.) |
பஞ்சாலவச்சு | pacāla-v-accu, n. A coin; நாணயவகை. (I. M. P. cm. 359.) |
பஞ்சான் | pacān, n. A kind of fish; மீன்வகை. கோளையாள லொஞ்சான் பஞ்சான் (குருகூர்ப். 7). |
பஞ்சிகரன் | pacikaraṉ, n. <>pajikāra. One who prepares almanacs; பஞ்சாங்கங் கணிப்போன். Pond. |
பஞ்சிகை | pacikai, n. perh. pacikā. Journal; பத்திரிகை. Loc. |
பஞ்சீகிருதம் | pacīkirutam, n. <>pacīkṟta. That which is effected by pacīkaraṇam; பஞ்சீகரணப்பட்டது. பஞ்சபூதங்க ளொன்றோடொன்று பஞ்சீகிருதமாய்க் கலந்து (வேதாந்தசா. 45). |
பஞ்சுபடு - தல் | pacu-paṭu-, v. intr. <>பஞ்சு+. To become light or useless; to be valueless; எளிமையாதல். பஞ்சுபடு சொல்லனிவன். (தாயு. தேசோ. 5). |
பஞ்சைப்பனாதி | pacai-p-paṉāti, n. <>பஞ்சை+. Useless person; vagabond; அனாதை. (மதி. க. ii, 61.) |
பட்சம் | paṭcam, n. <>pakṣa. Leaning; சார்பு. (சைவப்பிரகாசன. 16.) |
பட்டகம் | paṭṭakam, n. <>paṭṭaka. A piece of cloth; துணி. பட்டகசாலையுள் பட்டகத்தை விரித்துக்கொண்டிருந்தனள் (ஸ்ரீபுராணம். Ms.) |
பட்டாசாலியன் | paṭṭacāliyaṉ, n. cf. பட்டாலியன். A class of weavers; நெசவுத்தொழிலாளிகளுள் ஒருவகையினன். (S. I. I. iii, 265.) |
பட்டடைச்சட்டம் | paṭṭaṭai-c-caṭṭam, n. <>பட்டடை+. Sleeper; தண்டவாளம் முதலியவற்றிற்கு அடியிலிடுங் கனத்த மரத்துண்டு. (C. E. M.) |
பட்டடைப்பலகை | paṭṭaṭai-p-palakai, n. <>id.+. Wooden seat in a shop, for the shop-keeper; கடையில் வியாபாரிகள் உட்காரும் பலகை. Loc. |
பட்டடைப்பாடு | paṭṭaṭai-pāṭu, n. <>id.+. Shortage in stored paddy, due to shrinkage, waste, etc.; பட்டடையிற் காணும் நெற்குறைவு. சம்பாவிற் பட்டடைப்பா டென்றெழுதி (சரவண. பணவிடு. 137). |
பட்டடைவரி | paṭṭaṭai-vari, n. perh. id.+. An ancient tax; பழைய வரிவகை. (S. I. I. V, 95.) |
பட்டடைவாய்ச்சீட்டு | paṭṭaṭai-vāy-c-cīṭṭu, n. <>id.+. Ola memorandum stuck in a heap of harvested paddy, showing the quantity stored; வாயோலை. பட்டடைவாய்ச்சீட்டெடுத்துப்பார் (சரவண. பணவிடு. 113). |