Word |
English & Tamil Meaning |
---|---|
பட்டோலைக்காசு | paṭṭōlai-k-kācu n. <>பட்டோலை+. An ancient tax, in cash; காசாய வகை. (S. I. I. i, 89.) |
படக்கு | paṭakku n. perh. படக்கெனல். Fire works, crackers; பட்டாசு. Nāṉ. |
படகம் | paṭakam n. cf. பிடாகம். A measure of land; நிலவளவு. (I. M. P. Cg. 193. ft.) |
படப்பாதி | paṭa-p-pāti n. perh. படு-+பாதி. Joining, in carpentry; மரப்பலகைகளைப் பொருத்துந் தச்சுவேலைவகை. (W.) |
படர் | paṭar n. <>படர்-. Cruelty; தறுகண்மை. படரெருமைப் பகட்டின்மிசை. (தக்கயாகப். 463). |
படலிகை | paṭalikai n. A measure of quantity; ஓர் அளவு. வெற்றிலை படலிகையால் ஒரு பற்று (S. I. I. iii, 10). |
படவடி - த்தல் | paṭa-v-aṭi- v. tr. <>படு-+. To vanquish; to lay low; தோற்பித்தல். வெறும் புறத்திலே படவடிக்கவல்ல கையிலே . . . பாஞ்ச ஜந்யம் . . . திருவாழி இவற்றை யுடையராயிருக்கை (திவ். அமலனாதி. 7, வ்யா. பக். 83). |
படாங்கழி | paṭāṅ-kaḻi n. <>படாம்+. A kind of tax; வரிவகை. (S. I. I. ii, 352.) |
படாம் | paṭām n. <>படம். A piece of cloth, used as headdress; பரிவட்டம். படாம் பீடம் படுத்தே (ஞானதீக்ஷை. 3). |
படி - தல் | paṭi- 4 v. intr. To be fit or suited; பொருந்துதல். வளை கைக்குப் படிந்திருக்கிறது. |
படி | paṭi n. A measure of 34 palam; 34 பலங்கொண்ட ஒரு நிறை. (G. Tn. D. i, 238.) |
படிகளை - தல் | paṭi-kaḷai- v. tr. <>படி+. To undress, as an idol; விக்கிரகத்தின் அலங்காரத்தை நீக்குதல். Loc. |
படிச்சட்டம் | paṭi-c-caṭṭam n. <>id.+. Palanquin of an idol; விக்கிரங்களை எடுத்துச் செல்லுங் கோயிற்சிவிகைவகை. (சிவக். பிரபந். பக். 237.) |
படித்தளம் | paṭi-t-talam n. <>id.+. Step of a staircase; படிக்கட்டு. ஓராம் படித்தளமாம் (கட்டபொம்மு. பக். 58). |
படிப்பினை | paṭippiṉai n. <>படி-. Mod. 1. Lesson; புத்திமதி. 2. Moral; |
படிமா | paṭimā n. <>Pkt. padimā <>pratimā. Example; illustration; திருட்டாந்தம். நம்மோடு ஸஜாதீயர்பக்கல் பரிமாறினதன்றோ நமக்குப் படிமா (ஈடு, 10, 4, 5). |
படியள - த்தல் | paṭi-y-aḷa- v. intr. <>படி+. To supply articles of food for maintenance; ஜீவனத்திற்குரியனவற்றை யளித்தல். பல்லுயிருக்கெல்லாம் படியளக்கும் வேலவரே (கதிரை மலைப்பேரின்பக்காதல், 13). |
படிவிஞ்சனம் | paṭi-vicaṉam n. <>படி+வியஞ்சனம். Articles other than rice of the preparation of food, as in a temple; நித்தியப் படித்தரமான வியஞ்சனப்பொருள். தேங்காய் பழம் உள்ளிட்ட படிவிஞ்சனங்களுக்கும் (S. I. I. iv, 129). |
படிவிடை | paṭi-v-iṭai n. <>படி-+. Snare; கண்ணி. Pond. |
படிவு | paṭivu n. <>id. See படிவிடை. Pond. . |
படிற்றொழுக்கம் | paṭiṟṟoḻukkam n. <>படிறு+. Hypocritical conduct; போலி ஒழுக்கம். வஞ்சமனத்தான் படிற்றொழுக்கம் (குறள், 221). |
படுகால் | paṭu-kāl n. <>படு-+. 1. Step; படி. நெஞ்சூட் டிட்டிகைச் சுதைச்சுவர்ப் படுகால் (பெருங். உஞ்சைக். 40, 316). 2. Mēkalai, a girdle; |
படுகொலைக்காரன் | paṭukolai-k-kāraṉ n. <>படுகொலை+. Cold-blooded murderer; assassin; கொடுங்கொலை செய்வோன். நீர்மை கேடனான அப் படுகொலைக்காரனால் (ஈடு, 10, 3, 1). |
படுதண்டு | paṭu-taṇṭu n. <>படு-+. Poles for carrying temple vehicles; திருவாடுதண்டு. Loc. |
படுநிலம் | paṭu-nilam n. <>id.+. Barren tract of land; விளையா நிலம். (R. T.) |
படுபாதி | paṭu-pāti n. <>id.+. Just half; சரிபாதி. அறுப்பம் புல்லாய் படுபாதிபோக (சரவண. பணவிடு. 144). |
படுமுடை | paṭu-muṭai n. <>id.+. Flesh of animals which died a natural death; தானே இறந்துபட்ட பிராணிகளின் ஊன். தகவுடையோ ருண்ணாப் படுமுடை தின்பார்க்கு (நீலகேசி, 332, உரை). |
படுவாரி | paṭu-vāri n. <>id.+. Spontaneous growth springing up from stray grains in the field after harvest; அறுவடையான பின் உதிர்ந்த நெல்லினின்றும் தானே உண்டாகும் பயிர். (R. T.) |
படைநாயகம் | paṭai-nāyakam n. <>படை+. Command of the army; சேனைத்தலைமை. (S. I. I. vii, 49.) |
படைப்பணம் | paṭai-p-paṇam n. <>id.+. An ancient tax; வரிவகை. (I. M. P. Tv. 40, A. B.) |