Word |
English & Tamil Meaning |
---|---|
பணிவிடைமடத்தாள் | paṇiviṭai-maṭattal n. <>பணிவிடை+. Lay sister; மடத்துத் துணைச்சகோதரி. Pond. |
பணை | paṇai n. prob. பணை-. 1. Anvil; உலைக்களத்துப் பட்டடை. (குறள், 828, மணக். பக். 28.) 2. Tusk of an elephant; |
பணையேர் | paṇai-y-ēr n. perh. பணம்+ஏர். Hired plough, dist. fr. māṟṟēr; கூலிக்குவிடும் ஏர். Loc. |
பத்தடி | pattaṭi n. <>பற்று+. Place, locality; இடம். எந்த பத்தடியிலிருந்து வருகிறாய்? |
பத்தம் 1 | pattam n. cf. பற்றம். Mass, heap, collection; குவியல். தூற்றும்பத்தம் (பட்டினத்துப் கோயிற்றிரு. 2). |
பத்தம் 2 | pattam n. cf. பத்தர். Eating vessel; உண்கலம். பத்தங்குடை செருப்புந்தொழு பால¦ (நீலகேசி, 328). |
பத்தர் | pattar n. A part of yāḷ; யாழினேருறுப்பு. பத்தருங் கோடு மாணியு நரம்புமென்று (சிலப். கானல். கட்டுரை). |
பத்தல் | pattal n. See பத்தர். குளப்பு வழியன்ன கவடுபடு பத்தல் (பொருந. 4). . |
பத்தாந்து | pattāntu n. <>E. Patent; தான் நூதனமாக உண்டாக்கிய பொருளைப்போல் பிறர் செய்யாது தடுத்துத் தானே செய்து பயன் பெறுதற்கு அரசாங்கத்தாரளிக்கும் உரிமை. Loc. |
பத்தியவிளக்கம் | pattiya-viḷakkam n. <>பத்தியம்+. Dietary; பத்தியமான ஆகாரமுறை. Pond. |
பத்திரகடம் | pattira-kaṭam n. <>bhadra+. Pot filled with water and sanctified by rites; பூர்ணகும்பம். (T. A. S. v, 162.) |
பத்திராசனம் | pattirācaṉam n. <>bhadrāsana. Throne; சிங்காதனம். பத்திராசனங் கொண்டுள்ள பதிகளா (வீரநாரா. நூல்வர. 5). |
பத்து | pattu part. 1. A prefix to numerals, meaning `about'; எண்ணுக்கு முன் சேர்த்து 'உத்தேசமாக' என்னும் பொருளில் வருஞ் சொல். உண்டாலும் ஒரு காலே பத்தெட்டு நாளைக்கு உண்ணவுமாய் (திவ். திருநெடுந். 1, வ்யா.). 2. Card marked with ten pips, in playing cards; |
பதசம் | patacam n. <>patasa. (W.) 1. Bird; பறவை. 2. Moon; |
பதபாளி | pata-pāḷi n. <>pada+pāli. Word-sequence; சொற்களின் வரிசை. (விவேகசிந். பக். 6.) |
பதரப்படு - தல் | patara-p-paṭu- v. intr. <>பதர்-+படு-. To escape; தப்புதல். பதரப்படாமே பழந்தாம்பா லார்த்த (திவ். பெரியாழ். 1, 2, 9). |
பதவளை | pata-vaḷai n. <>பதம்+. Swelling in the joints; நெறிக்கட்டி. Loc. |
பதாகினி | patākiṉi n. <>patākinī. Army carrying banners; கொடிப்படை. நாயகி பதாகினிகளே (தக்கயாகப். 433). |
பதிக்கினி | patikkiṉi n. <>pati-ghnī. One who murders her husband; புருஷனைக் கொன்றவள். (W.) |
பதிதரிராப்போசனம் | patitar-irā-p-pōcaṉam n. <>பதிதன்+இரா+. The Lord's supper; இயேசுவின் கடைசி இராப்போஜனம். Pond. |
பதிப்பெயர் - த்தல் | pati-p-peyar- v. tr. <>பதி+. To relinquish; விட்டு நீக்குதல். உண்ணா நோன்போ டுயிர்பதிப்பெயர்ப்புழி (மணி. 14, 95) |
பதிபந்தம் | patipantam n. <>prati-bandha. Obstacle; தடை. வர்த்தமானப் பதிபந்தங் காண் (வேதா. சூ. 141.) |
பதிபாதமூலப்பட்டுடையார் | pati-pāta-mūla-p-paṭṭuṭaiyār n. <>பதி+பாதம்+மூலம்+பட்டு+. A class of temple servants; கோயிற் பணியாளர்வகை. (S. I. I. ii, 111.) |
பதியார் | patiyār n. <>பதி. Temple servants; கோயிற் பணியாளர். (S. I. I. iv, 295.) |
பதினறுமார் | patiṉaṟumār n. <>பதினாறு. A temple committee in ancient days, consisting of sixteen persons; பதினறுவர் கொண்ட கோயில் விசாரணைச் சபையார். (T. A. S. iii, 191.) |
பதினாறுவரிகருமம் | patiṉāṟu-+vari-karu-mam n. <>id.+வரி+. A method of calculation; கணிதவகையு ளொன்று. (யாப். வி. 528.) |
பதுக்கம் | patukkam n. <>பதுங்கு-. Snare; கண்ணி. Pond. |
பதுப்பி - த்தல் | patuppi- 11 v. tr. cf. பதுக்கு-. To hide; மறைத்தல். பண்டைக் கோலத்தைப் புதுப்பித்திடும் பட்டாங்குரையாய் (வள்ளி. கதை. Ms.). |
பதுமை | patumai n. <>padmā. Patumaniti; பதுமநிதி. (அபி. சிந்.) |
பதுவாரம் | patuvāram n. A tax; வரிவகை. (S. I. I. viii, 214.) |
பந்தயமரம் | pantaya-maram n. <>பந்தயம்+. Greasy climbing pole; வழுக்குமரம். Pond. |