Word |
English & Tamil Meaning |
---|---|
பந்தர்ச்சோலை | pantar-c-cēlai n. <>பந்தர்+. A kind of saree, as from Bunder, the modern Masulipatam; புடைவைவகை. (பஞ்ச. திருமுக. 1163.) |
பந்தர்ப்புகையிலை | pantar-p-pukaiyilai n. <>id.+. A variety of tobacco, as from Masulipatam; புகையிலைவகை. (மதி. க. ii, 194.) |
பந்தாட்டு - தல் | pantāṭṭu- v. tr. <>பந்து+. To tease; to vex; அலைத்து வருத்துதல். பந்தாட்டியே விடுவேனடி (குருகூர்ப். 89). |
பந்திக்கட்டு | panti-k-kaṭṭu n. <>பந்தி+. Dining hall; உணவருந்துவதற்கென்று அமைத்த கட்டிடம். உக்கிராணம் களஞ்சியம் பந்திக்கட்டு பண்ணை முதலிய எல்லா இடங்களின் விசாரணை வேலைகளின் (மீனாட். சரித். i, 36). |
பந்திவழங்கு - தல் | panti-vaḷaṅku- v. intr. <>id.+. To serve food; உணவுபரிமாறுதல். பந்தி வழங்கவிலை (கோவ. 15). |
பப்பு - தல் | pappu- 5 v. perh. பப்பு. intr. To roam about; பரவித்திரிதல். சேரன் குலத்தனாம் பப்பிப்போய படைஞன் (தியாக. ல¦லை. 14, 7). --tr. 2. To eat; |
பம்மாற்று | pammāṟṟu n. perh. Persn. bīmnāk. cf. பம்மாத்து. False show; பம்மாத்து. பம்மாற்றுக் காட்டிவந்த பாழ்ம்பதரே (பஞ்ச. திருமுக. 617). |
பமோஜிப் | pamōjip adv. <>Persn. bha+Arab. mūjib. According to; conformably to; அதன்படி. (P. T. L.) |
பயணஉத்தரவுச்சீட்டு | payaṇa-uttaravu-c-cīṭṭu n. <>பயணம்+உத்தரவு+. Port clearance; கப்பல் துறைமுகத்தைவிட்டகலுமுன் கொடுக்கப்படும் அனுமதிச் சீட்டு. (M. Navi.) |
பயந்தான்கொள்ளி | payantāṉ-koḷḷi n. <>பயம்+. Coward; பயங்கொள்ளி. Loc. |
பயரப்பெறு - தல் | payara-p-peṟu v. tr. prob. பெயர்-+. To resume, as by Government; அரசாங்கத்தாரால் திரும்ப எடுத்துக்கொள்ளப்படுதல். (T. A. S. iii, 167.) |
பயற்றுருண்டை | payaṟṟurunṭai n. <>பயறு+. A kind of sweet cake; பொரிவிளங்காய். Loc. |
பயா | payā n. A kind of drum; தக்கா என்னும் முழவு. (கலைமகள், xii, 402.) |
பயிர்கொளுத்து - தல் | payīr-koḷuttu- v. intr. <>பயிர்+. To cultivate; பயிர் செய்தல். ஏறப் பயிர்கொளுத்து மேற்பாடும் (சரவண. பணவிடு. 24). |
பயிர்ச்செலவு | payir-c-celavu n. <>id.+. Cultivation, husbandry; பயிர்த்தொழில். Loc. |
பயிரடைப்பு | payir-aṭaippu n. <>id.+. Tenancy; நிலத்தைப் பயிர்செய்ய ஒப்படைக்கை. பயிரடைப்பான நிலத்திலே (S. I . I. v, 373). |
பயிரேற்று - தல் | payir-ēṟṟu- v. tr. <>id.+. To cultivate; பயிர்செய்தல். பயிரேற்றி அனுபவிக்க (S. I. I. iv, 134). |
பர்மாக்கொண்டை | parmā-k-koṇṭai n. perh. மருமா+. A mode of plaiting hair; மயிர்ப்பின்னல் வகை. Loc. |
பரக்கூலி | para-k-kūli n. perh. புறம்+. Wages for carrying; சுமைகூலி. பரக்கூலிபட்டுக் கொண்டுந்து (S. I. I. v, 497). |
பரகசியம் | parakaciyam n. cf. பரசியம். Revealing or publishing secrets; அந்தரங்கச் சமாசாரத்தை வெளியிடுகை. (யாழ். அக.) |
பரகுடி | para-kuṭi n. perh. பரம்+. Non-resident ryot farming land in a village; புறக்குடி. (G. Sm. D. I, ii, 283.) |
பரகுரு | para-kuru n. <>para+. Spiritual preceptor; ஞானாசாரியன். (ஞானதீக்ஷை. 1.) |
பரங்கிக்கள்ளவராகன் | paraṅki-k-kaḷḷa-varākaṉ n. <>பரங்கி+. An inferior coin; மட்டமான நாணயவகை. (சரவண. பணவிடு. 206.) |
பரங்கியாமணக்கு | paraṅki-y-āmaṇakku n. <>id.+. Papaw; பப்பாளி. (M. M. 55.) |
பரசீவைக்கியம் | para-cīvaikkiyam n. <>பரம்+சீவம்+. Union of the individual soul with the Supreme Soul; சீவான்மாவுங் கடவுளும் ஒன்றுகை. (விவேகசூடா. 9.) |
பரசூனியவாதம் | para-cūṉiya-vātam n. <>id.+சூனியம்+. Egoism; மமகாரம். Pond. |
பரதளவிபாடன் | parataḷa-vipāṭaṉ n. <>para-daḷa-vipāṭa. 'Destroyer of enemy's forces', a military title; பகைப்படையை அழிப்பவன் என்று பொருள்படும் ஒரு விருது. பகைவீர வீரன் பரதளவிபாடன் (குழைக்காதர் திருப்பணிமாலை, 16). |
பரதாகம் | para-tākam n. perh. pari-tāpa. Distress; வருத்தம். பார்த்தவுடனெங்கள் பரதாக மோர் வாக்கால் தீர்த்தருளும் (தெய்வச். விறலிவிடு. 75). |
பரப்பிரமவிந்து | para-p-pirama-vintu n. <>பரம்+பிரமம்+. Sublimate of mercury; வாலரசம். (மூ. அ.) |
பரப்பு | parappu n. See பரம்பு. பரப்பில் காசும் நெல்லும் நியோகம் எழுதி (S. I. I. vi, 29). . |