Word |
English & Tamil Meaning |
---|---|
படைப்புவரி | paṭaippu-vari n. <>படைப்பு+. A kind of musical composition in which all the various elements are represented; இசைப் பாட்டுவகை. (சிலப். 7, 4-ம் பாட்டு, உரை.) |
படையழிவு | paṭai-y-aḻivu n. <>படை+. Crops destroyed by the march of troops; பயிர்களுக்குப் போர் வீரரால் உண்டாஞ் சேதம். (Pudu. Insc. 323.) |
படையறு - தல் | paṭai-y-aṟu- v. intr. <>id.+. To become subordinate or submissive; கீழ்ப்பட்டு அடங்குதல். (ஈடு, 1, 9, 9, ஜீ.) |
பண் | paṇ n. prob. பண்ணு-. Land, field; வயல். (M. E. R. 12 of 1923.) |
பண்குறுணி | paṇ-kuṟuṇi n. perh. பண்+. A tax; வரிவகை. (M. E. R. 442 of 1925.) |
பண்டந்தாங்கி | paṇṭan-tāṅki n. <>பண்டம்+. Table, shelf or other article of furniture, used as a stand; பண்டங்களை வைக்க உதவும் மேசை முதலியன. Loc, |
பண்டப்பேழை | paṇṭa-p-pēḷai n. <>id.+. Dresser; சமையற் சாமான்களை வைக்கும் பண்டந்தாங்கி. Pond. |
பண்டவெட்டி | paṇṭa-veṭṭi n. <>id.+. A tax; வரிவகை. (S. I. I. v. 365.) |
பண்டாடுபழநடை | paṇṭāṭu-paḷa-naṭai n. <>பண்டு+ஆடு-+. Ancient, immemorial custom; நீண்டகாலமாக நடந்து வரும் வழக்கம். பண்டாடுபழநடை இறுத்து வந்த தரத்திலே (S. I. I. v. 142). |
பண்டாரக்கண்காணி | paṇṭāra-k-kaṇkāṇi n. <>பண்டாரம்+. Treasury officer; பொக்கிஷ அதிகாரி. விற்குமிடத்துப் பண்டாரக்கண்காணி புறப்பட்டு விலை நிச்சயித்து (S. I. I. viii, 42). |
பண்டாரக்கல் | paṇṭāra-k-kal n. <>id.+. Weight used by the Government Treasury; அரசாங்கப்பொக்கிஷத்தி லுபயோகிக்கும் நிறை. (S. I. I. iii, 295.) |
பண்ணறையன் | paṇṇaṟaiyaṉ n. <>பண்+அறு-. One who talks gibberish, gibberer; தெளிவாகப் பேச இயலாதவன். மூக்கிழந்த பண்ணறையனானாலும் பாராரோ (நெல்விடு. 270). |
பண்ணாட்டு | paṇṇāṭṭu n. <>பண்ணை+ஆடு-. Authority; அதிகாரம். வெள்ளைக்காரன் காலத்திலே தலைதலைக்குப் பண்ணாட்டு (எங்களூர், 152). |
பண்ணாடி | paṇṇāṭi n. <>id.+id. Master; அதிகாரி. (எங்களூர், 16.) ஆள் ஆளும் பண்ணாடி எருது ஆர் மேய்க்கிறது? |
பண்ணிக்கக்கூலி | paṇṇikka-k-kūli n. perh. பணிக்கு+. A tax; வரிவகை. (S. I. I. vi, 189.) |
பண்ணையம் | paṇṇaiyam n. <>பண்ணை. Farming; பண்ணைவைத்து நடத்தும் விவசாயம். (எங்களூர், 21.) |
பணம் | paṇam n. <>paṇa. Bet; பந்தயம். சூதில் . . . வருக்கமார் பொருளனைத்தையும் பணத்திடைமாய்த்தே (வேதாரணி. பலபத். 4). |
பணம்பு | paṇampu n. [K. pranambu.] Bridge; பாலம். (ஸ்ரீபுராணம். Ms.) |
பணவர்க்கம் | paṇa-varkkam n. <>பணம்+. Tax payable in cash; காசாயம். (Insc.) |
பணவாசி | paṇa-vāci n. <>id.+. An ancient tax; பழைய வரிவகை. (S. I. I. iv, 122.) |
பணாமுடி | paṇā-muṭi n. <>phanā+. The hood of the cobra, as its crown; பாம்பின் படமுடி. சோதிப் பணாமுடி யாயிரங் கொண்ட தொல்லறி வென்னுமொர் பாம்பின்மேல் (பாரதி. பாஞ்சாலி, 1, 81). |
பணாமுத்திரை | paṇā-muttirai n. <>id.+. A handpose, in worship; முத்திரைவகை. (சைவாநு. வி. 18.) |
பணி | paṇi n. <>பணி-. Lowness; meanness; தாழ்ச்சி. (ஈடு, 10, 3, 4, ஜீ.) |
பணிக்கு | paṇikku n. cf. பணிக்கம். Pond. 1. Detailed account or statement; விவரமான குறிப்பு. நிலங்களின் பணிக்கு. 2. Counsel; |
பணிக்கூடம் | paṇi-k-kūṭam n. <>பணி+. Smithy; கொல்ல னுலைக்கூடம். (நாநார்த்த. 948.) |
பணிக்கொத்து | paṇi-k-kottu n. <>id.+. Cess collected for the maintenance of village servants; கிராம ஊழியக்காரருக்காக வாங்கும் வரி வகை. (S. I. I. v, 374.) |
பணித்திருத்தம் | paṇi-t-tiruttam n. <>id.+. Fineness of workmanship; வேலைப்பாட்டின் நேர்த்தி. பணித்திருத்தத்தால் வந்தவழகு தோன்றியிருக்கிறபடி பாராய் (திவ். பெரியாழ். 2, 3, 2, வ்யா. பக். 281). |
பணிபோ - தல் | paṇi-pō- v. intr. <>id.+. To be engaged, as in a work; தொழில் புரிதல். அவர்கள் சப்தாதி விஷயங்களிலே அன்யபரராய் அவற்றோடே பணிபோந்திருந்தார்கள். (ஈடு, 10, 6, ப்ர. பக். 177). |
பணிலம் | paṇilam n. Conch bracelets; சங்கினாலியன்ற கைவளைவகை. கைப்பணிலந்தன்னைக் கழற்றிவிடுத்து (சொக்க. உலா, 171). |