Word |
English & Tamil Meaning |
---|---|
பரம் | param n. <>para. Mendicant; பரதேசி. நீ கிருத்திகைதோறும் பத்துப் பரங்கட்குத் தவறாது அன்னம் போட்டுவா (மதி. க. i, 180). |
பரம்பர் | parampar n. cf. பறம்பர். A class of cultivators; உழுவர் குடிவகை. அளவர் பள்ளிகள் பரம்பர் உட்பட உழுது இறுத்து (S. I. I. vii, 385). |
பரம்பு | parampu n. Revenue account; வரிக்கணக்கு. பரம்பில் நெல்லுங்காசும் வெள்ளாளர் பக்கல் நியோகமெழுதிக் கொள்ள (S. I. I. vi, 27). |
பரம்மக்கன்கல் | parammakkaṉ-kal n. Sati stone; உடன்கட்டையேறியவளைக் குறிக்கும் அடையாளக்கல். (M. E. R. 192 of 1931-32.) |
பரமகலை | parama-kalai n. <>parama+kalā. Pārvatī; பார்வதி. (கூர்மபு. திருக்கலியாண. 23.) |
பரமபதபடம் | paramapata-paṭam n. <>பரமபதம்+. Board for a kind of backgammon; கட்டங்களிற் காய் வைத்தாடும் ஒருவகை விளையாட்டிற்குரிய படம். Loc. |
பரமாணுவாதம் | paramāṇu-vātam n. <>பரமாணு+. Atomic theory of the origin of the world; பிரபஞ்சம் அணுக்கூட்டத்தாலாகியது என்னும் நையாயிக மதம். (பிரபஞ்ச. வி. 28.) |
பரரூபம் | para-rūpam n. perh. para+. Permutation of letters; எழுத்துக்களை மாறிச் சேர்த்து அமைக்கை. (R.) |
பரவிந்து | para-vintu n. <>id.+. (šaiva.) šakti in union with šiva; சிவத்தோடு ஒன்றிய சக்தி. (சி. போ. பா. 223.) |
பராக்கு | parākku n. <>parāk. Diversion; கவனம் மாறுகை. Colloq. |
பராசிதம் | parācitam n. <>aparājitā. viṭṭuṇukkirānti, a medicinal plant; விட்டுணுக்கிராந்தி. (நாமதீப. 324.) |
பராத்தம் | parāttam n. cf. வராத்தம். Order; கட்டளை. (W.) |
பராபரிப்பு | parāparippu n. <>பராபரி-. cf. பராமரிப்பு. Supervision; மேற்பார்வை. பராபரிப்பாளன் (தண்டிகைகனகராயன்பள்ளு, குறிப்பு. 69). |
பரார்த்தலிங்கம் | parārtta-liṅkam n. <>parārtha+. šiva liṅgam in a temple, of five kinds, viz., cuyampu-liṅkam, kāṇa-liṅkam, taivika-liṇkam, āriṭa-liṅkam and māṉuṭa-liṅkam; சுயம்புலிங்கம் காணலிங்கம் தைவிகலிங்கம் ஆரிடலிங்கம் மானுடலிங்கம் என்று ஐவகைப்பட்டதும் திருக்கோயிலுள்ளதுமான சிவலிங்கம். (சிவாலயதரிசன விதி, பக். 3.) |
பராவிவை - த்தல் | parāvi-vai- v. tr. <>பராவு-+. To make an offering to a deity in fulfilment of a vow; நேர்த்திக்கடனாகக் கொடுத்தல். (S. I. I. vii, 379.) |
பரிகம் | parikam n. A kind of spoon கரண்டிவகை. (E. T.) |
பரிகருமம் | pari-karumam n. (Math.) A method of calculation; கணிதவகையு ளொன்று. (யாப். வி. 528.) |
பரிகாரன் | parikāraṉ n. <>parikāra. Servant; வேலைக்காரன். மடத்துப் பரிகாரர்களுக்கும் (S. I. I. v, 189). |
பரிகை | parikai n. perh. parigha. Guard; காவல். படைப்பரிகைத் துரகங்கள் (தக்கயாகப். 267). |
பரிச்சேதம் | pariccētam n. <>paricchēda. Small portion; part; சிறு பகுதி. Pond. |
பரிசங்கிளத்தல் | paricaṅ-kiḷattal n. <>பரிசம்+. (Akap.) Theme in which the lady's maid informs the hero of an impossibly high bride-price; தலைவியை மணத்தற்குரிய அருவிலையைத் தோழி தலைவனுக்கு உரைத்தலாகிய அகத்துறை. (களவியற். 115.) |
பரிசம் 1 | paricam n. <>šparša. Hard consonant; வல்லெழுத்து. பரிசம் வல்லினப்பெயர் (பேரகத். 31). |
பரிசம் 2 | paricam n. cf. புருஷம். Depth; ஆழம். நாலாள் பரிசம். |
பரிசவேதி | parica-vēti n. <>sparša+vedhin. Transmuter; பரிசனவேதி. நீர் நம்முடைய பரிசவேதி என்று அருளிச்செய்து (குருபரம். பக். 484). |
பரிசவேதைமணி | paricavētai-maṇi n. <>பரிசவேதி+. An alchemic substance; இராசவாதத்திற்குரிய மருந்துவகை. (தஞ். சர. iii, 58.) |
பரிசனைவைத்தியன் | paricaṉai-vaittiyaṉ n. prob. பரிசனை+. Quack doctor; போலிவைத்தியன். Pond. |
பரிசை | paricai n. <>pariṣahā. (Jaina.) The troubles endured for checking karma; கருமத்தைத் தடுத்தற்பொருட்டுப் பொறுக்கவேண்டுந் துன்பங்கள். ஆற்றல் பரிசை முதலாகிய வன்னவெல்லாம். (நீலகேசி, 125). |
பரித்தம் | parittam n. <>pali. parittam <>paritrā. Invocation to a deity for deliverance from calamity; கஷ்டநிவாரணத்தின் பொருட்டுச் செய்யும் ஸ்தோத்திரம். மோரிப்பரித்தம் (நீலகேசி, 1, உரை). |