Word |
English & Tamil Meaning |
---|---|
பரிதாபி | paritāpi n. <>paritāpa. Sufferer; துன்புறுபவ-ன்-ள். பேதையேன் றன்னைப் பரிதாபி யாக்கலென் (சரபேந்திரபூபாலகுறவஞ்சி, 17, 1). |
பரிது | paritu n. cf. பரிசு. Manner, mode; விதம். பட்டபரிது விடுபேறு அட்டிப்பேறாக (T. A. S. ii, 68). |
பரிப்பிராசகர் | parippirācakar n. <>parivrājaka. A class of ascetics; துறவியருள் ஒரு சாரார். (மேரூமந். 75.) |
பரிபிரமி - த்தல் | paripirami- 11 v. intr. <>pari-bhrama. To whirl round; சுழலுதல். சம்சாரத்துப் பரிபிரமிக்கின்றான். (நீலகேசி, 189, உரை). |
பரிபுஷ்கரை | paripuṣkarai n. A kind of cucumber, Cucumis madraspatanus; வெள்ளரி வகை. Pond. |
பரிமளவெண்ணெய் | parimaḷa-v-eṇṇey n. <>பரிமளம்+. Consecrated oil, used in baptism; ஞானஸ்நானத்தில் உபயோகிக்குந் தைலம். Chr. |
பரியநுயோச்சியோபேக்ஷணம் | pariyanuyōcciyōpēkṣaṇam n. <>paryanuyojya+upēkṣaṇa. (Log.) A defect in argumentation; தோல்வித்தானத்தொன்று. (செந். iii, 13.) |
பரிவாரக்கொந்தம் | parivāra-k-kontam n. perh. பரிவாரக்கொத்து. Temple servants; கோயிற் பணியாளர். (S. I. I. iv. 492.) |
பருக்கு - தல் | parukku- 5 v. tr. Caus. of பருகு-. To increase; பெருக்குதல். (பரராச. i, 231.) |
பருக்கை | parukkai n. <>பரு-. Refuse, dregs; sediment; கோது. அதில் பருக்கை தட்டாதபடி அதின் வாயிலே பிழியுமாய்த்து (திவ். பெரியதி. 1, 2, 5, வ்யா.). |
பருங்கல் | paruṅkal n. perh. பருங்கு-. Fear; அச்சம். Loc. |
பருதி | paruti n. <>paridhi. Quoit; விளையாட்டுக்குரிய வளையம். Pond. |
பருந்தடைப்பு | paruntaṭaippu n. <>பருந்து+. Double bracket ( ); எழுத்துக்கள் எண்கள் முதலியவற்றை அடைத்துக் காட்டுவதற்கு இடும் ஓர் அடையாளக்குறி. Mod. |
பருநடை | paru-naṭai n. <>பரு-மை+. Swift walk, as of bull; வேகமான நடை. Loc. |
பரும்பிடி | parum-piṭi n. <>id.+. Extortion; அநீதமாய்ப் பொருள்பறிக்கை. Pond. |
பரும்புடவை | parum-puṭavai n. <>id.+. A kind of cloth; ஆடைவகை. பரும்புடவைப் பொதி ஒன்றுக்குக் காசு பத்து (S. I. I. viii, 233). |
பருமிப்பு | parumippu n. <>பருமி-. Fencing; சிலம்பம். Pond. |
பருமுளைவராகன் | parumuḷai-varākaṉ n. A coin; நாணயவகை. (M. E. R. 1923-4, p. 110.) |
பருமைசெய் - தல் | parumai-cey- v. tr. <>பருமை+. To repair; திருத்திச் செப்பனிடுதல். இம்மடைகளும் கரையும் பருமைசெய்கைக்கு (S. I. I. vii, 252). |
பருவரு - த்தல் | paruvaru- 5 v. intr. <>பருவா-. To be distressed in mind; மனம்வருந்துதல். இவட்கு உறுத்துமென்று பருவருத்திருப்பதுஞ் செய்யார் (குறள், 1127, மணக்.). |
பருஷி - த்தல் | paruṣi- 11 v. tr. <>paruṣa. To chide; கடிதல்.மெத்தெனப் பருஷித்ததற்காக வருநன்மையும் இல்லையன்றே (நீலகேசி, 537). |
பல்சந்தி | pal-canti n. <>பல்+. (அரு. நி.) 1. Sugar-cane; கரும்பு. 2. Bamboo; |
பல்லா | pallā n. <>புல்லா. A linear measure; நீட்டலளவைவகை. (W.) |
பல்லி | palli n. <>வல்லி. Root; வேர். (திவ். பெரியாழ். 3, 4, 2, வ்யா. பக். 594.) |
பல்லிங்காஸனம் | palliṅkāsaṉam n. A posture of Jaina ascetics; சைனத்துறவியின் ஆசனவகை. (கனம்கிருஷ்ணையா, 3-4.) |
பல்லிடுக்கி | pal-l-iṭukki n. <>பல்+. Pincers to extract teeth; பல்லைப் பிடுங்குங் குறடு. Pond. |
பல்லுவன் | palluvaṉ n. cf. பல்லவன். Mean person; இழிந்தோன். (நாமதீப. 178.) |
பல்லூகம் | pallūkam n. <>bhallūka. Bear; கரடி. (W.) |
பல்வாங்கி | pal-vāṅki n. <>பல்+. see பல்லிடுக்கி. Pond. . |
பல்வேவு | pal-vēvu n. <>id.+. Tooth-ache; பல்நோய்வகை. (பாராச. i, 218.) |
பலகாயம் | pala-kāyam n. <>பல+. Sundry spices, as pepper, etc.; மிளகு கடுகு வெந்தயம் போன்ற கறிக்கு உதவும் பண்டங்கள். பலகாயம் நிசதி மிளகு ஆழாக்கும் கடுகு உழக்கும் (S. I. I. iii, 381). |
பலகீரைப்பதார்த்தம் | palakīrai-p-patārttam n. <>id.+கீரை+. A relish made of kalavai-k-kīrai; கலவைக்கீரைக் கறி. Pond. |
பலகீரைபறி - த்தல் | palakīrai-paṟi- v. intr. <>பலகீரை+. To do mischief; தீங்குசெய்தல். Colloq. |
பலகைசுரண்டி | palakai-curaṇṭi n. <>பலகை+. Carpenter's scraping instrument; சீவுளி. Loc. |