Word |
English & Tamil Meaning |
---|---|
பழம்புள்ளிமாடை | paḻam-puḷḷi-māṭai n. <>id.+புள்ளி+. An ancient coin; பழைய நாணயவகை. (S. I. I. iv. 291.) |
பழமுதல்கண்காணி | paḻa-mutal-kaṇkāṇi n. <>id.+முதல்+. Temple supervisor; கோயில் மேற்பார்வையாளன். (M. E. R. 1 of 1921.) |
பழமுந்தினவெட்டு | paḻa-muntiṉa-veṭṭu n. <>id.+முந்து-+. An ancient coin; பழைய நாணயவகை. (பணவிடு. 141.) |
பள்ளி | paḷḷi n. [M. paḷḷi.] Christian church; கிறிஸ்தவக் கோயில். சவேரியார் கோயிற்பள்ளி. |
பள்ளிக்குன் - று | paḷḷi-k-kuṉṟu n. <>பள்ளி+. Mt. Kailās; கைலாச பருவதம். பள்ளிக்குன்றும் விற்குன்று மொழிய (தக்கயாகப். 536). |
பள்ளிச்சிவிகை | paḷḷi-c-civikai n. <>id.+. A kind of palanquin; பல்லக்குவகை. (S. I. I. iii, 271.) |
பள்ளிசை | paḷ-ḷ-icai n. <>பள்+. A dramatic poem, dealing with the life of paḷḷas; பள்ளுப்பிரபந்தம். (தண்டிகைக்கனகராயன் பள்ளு, குறிப். 3.) |
பள்ளித்தோழன் | paḷḷi-t-tōḻaṉ n. <>பள்ளி+. Schoolmate; ஒருசாலைமாணாக்கன். Pond. |
பள்ளியுணர் - தல் | paḷḷi-y-uṇar- v. intr. <>id.+. To wake up from sleep; துயில் நீங்குதல். பள்ளியுணர்ந்தா னவனைப் பார்த்து (பாரதவெண். 85). |
பள்ளிவத்தன் | paḷḷi-vattaṉ n. <>id.+. varjya. One who is unfit to enter a Buddhist monastery; பௌத்தப்பள்ளியிற் புகுதற்குத் தகுதியற்றவன். பத்தின்மேலும் பழிசெய்யுமேற் பள்ளி வத்தன் கண்டீர் (நீலகேசி, 247). |
பள்ளிவிளாகம் | paḷḷi-viḷākam n. <>id.+. cf. மடவிளாகம். Streets around a Jaina temple; சினாலயத்தைச் சுற்றியிருக்குந் தெருக்கள். (M. E. R. 415 of 1928-29) |
பள்ளிவெற்பு | paḷḷi-veṟpu n. <>id.+. See பள்ளிக்குன்று. பள்ளிவெற்பின் மாறுகோள் பெறாது (தக்கயாகப். 371) . |
பள்ளேசல் | paḷ-ḷ-ēcal n. <>பள்+. See பள்ளிசை. (குருகூர்ப். 2, 3.) . |
பளாயோக்கியம் | paḷā-yōkkiyam n. <>பளா+. A term meaning 'very good'; `மிகவும் நன்று' என்ற பொருளில் வழங்குஞ் சொல். Loc. |
பளிங்கர் | paḷiṅkar n. A hill tirbe; ஒருவகை மலைச்சாதியார். |
பளிங்கு | paḷiṅku n. Topaz; புஷ்பராகம். (S. I. I. ii, 204.) |
பளியர் | paḷiyar n. cf. பளிங்கர். A hill tribe of the Western Ghats in Pāṇdya country; பாண்டிநாட்டில் மேற்குமலைத் தொடரில் வசிக்கும் ஒரு வகை மலைச்சாதியார். (G. Tn. D. i, 6.) |
பற்கிட்டுநோய் | paṟ-kiṭṭu-nōy n. <>பல்+கிட்டு-+. Tetanus; தாட்கிட்டிசன்னி. Loc. |
பற்சாரம் | paṟ-cāṟam n. <>id.+. A disease; நோய்வகை. (பரராச. i, 235.) |
பற்பபாதன் | paṟpapātaṉ n. <>padmapāda. Viṣṇu, as having feet resembling lotus flowers; திருமால். பரக்கவைத் தளந்து கொண்ட பற்பபாத னல்லையே (திவ். திருச்சந். 32.) |
பற்றக்சார் | paṟṟakcār n. <>E. futtock. Futtock shrouds; காவிமரத்தின் கயிறுகளை அடிமரத்தோடு இணைக்குங் கயிறு. (M. Navi.) |
பற்றறு - த்தல் | paṟṟaṟu- v. tr. <>பற்று+. To decide; தீர்மானித்தல். வழக்குகளைப் பற்றறுத்து வருவேனான் உன்னிடத்தில் (கோவ. க. 42). |
பற்று - தல் | paṟṟu- 5 v. intr. To hold oneself in patience; to wait; பொறுத்தல். சோறு சமையப் பற்றாமல் (ஈடு, 1, 3, 1). |
பற்றுக்கம்பு | paṟṟu-k-kampu n. <>பற்று+. Peg planted in the levelling plank; பரம்புமரத்தில் ஊன்றுங் கழி. Loc. |
பற்றுக்காவல் | paṟṟu-k-kāval n. <>id.+. Watch for the lands; நிலக்காவல். Nāṉ. |
பற்றுப்பருக்கை | paṟṟu-p-parukkai n. <>id.+. Grain of cooked rice; சோற்றுப்பருக்கை. Loc. |
பற்றுப்பாடு - தல் | paṟṟu-p-pāṭu v. intr. prob. id.+. To sing in accompaniment; வாரம் பாடுதல். (சிலப். 6, 19, அரும்.) |
பற்றுப்பார் - த்தல் | paṟṟu-p-pār- v. intr. <>id.+. To test by rubbing, as a piece of turmeric; உரைத்துப் பரிசோதித்தல். ஊரிற் பெண்கள் தங்களுக்குப் பூசுகைக்கு மஞ்சள் அரைத்தால் பற்றுப்பார்ப்பது இவனுடம்பிலே யாய்த்து (திவ். பெரியாழ். 3, 2, 2, வ்யா. பக். 536). |
பற்றுப்பொதுக்காவல் | paṟṟu-p-potu-k-kāval n. <>id.+. Watchman of the village lands; கிராமக்காவற்காரன். Nāṉ. |
பற்றுமுறி | paṟṟu-muṟi n. <>id.+. Receipt; ரசீது. பற்றுமுறி கொடுத்தோம் (S. I. I. viii, 84). |