Word |
English & Tamil Meaning |
---|---|
பற்றுவரவுப்புள்ளி | paṟṟuvaravu-p-puḷḷi n. <>பற்றுவரவு+. Customer; வழக்கமாகப் பண்ட முதலியன வாங்குபவன். Loc. |
பற்றுவழி | paṟṟu-vaḷi n. <>பற்று+. Running account; நெடுநாட் கணக்கு. Loc. |
பற்றுவழிக்கணக்கு | paṟṟuvaḷi-k-kaṇakku n. <>பற்றுவழி+. Loc. 1. See பற்றுவழி. . 2. Ledger; |
பற்றுவழியா - தல் | paṟṟu-vaḷi-y-ā- v. intr. <>id.+. To be paid out, as money due; செல்லவேண்டிய தொகையைக் கொடுத்தல். Loc. |
பறத்து - தல் | parattu- 5 v. tr. Caus. of பற-. To hasten; விரைவுபடுத்துதல். வேலை சீக்கிரம் முடியவேண்டுமென்று பறத்துகிறார். |
பறவை | paṟavai n. <>பற-. Flying; பறக்கை. பறவை தளருந் துறைவனை (அகநா. 170.) |
பறவைச்சுழி | paṟavai-c-cuḷi n. <>பறவை+. A curl mark, in horses; குதிரைச்சுழிவகை. தனுவேராகிய பறவைச்சுழி (தஞ். சர. iii, 118). |
பறி - தல் | paṟi-, 4. v. tr. cf. பரி-. To pierce; to penetrate; ஊடுருவுதல். பட்டுப்பறியும் படைவேல் (சொக்க. உலா, 393). |
பறிகால் | paṟi-kāl n. <>பறி-+. Betelvine garden; கொடிக்கால். Loc. |
பறிகூடை | paṟi-kūṭai n. <>பறி+. Baling basket; இறைகூடை. Loc. |
பறிப்பு | paṟippu n. <>பறி-. Plunder; extortion; கொள்ளை. Pond. |
பறிபட்சி | paṟi-paṭci n. <>id.+. Bird of prey; மாமிசம் உண்ணும் பறவை. Pond. |
பறுவான்காசிலிங்கு | paṟuvāṉkā-ciliṅku n. <>Hind. parvān+E. sling. Yard-sling; பறுவானைப் பாய்மரத்தோடு இணைக்க உதவுங் கயிறு அல்லது சங்கிலி. (M. Navi.) |
பறைத்தறி | paṟai-t-taṟi n. prob. பறை+. An ancient tax; பழைய வரிவகை. (S. I. I. i, 91.) |
பறைத்துடைவை | pārai-t-tuṭaivai n. <>id.+. Endowment for pariahs; பறையர்க்கு விடும் மானியம். ஊரில்விடும் பறைத்துடைவை உணவுரிமையாக்கொண்டு (பெரியபு. திருநாளைப். 13). |
பறைமை | paṟaimai n. perh. id. A village perquisite; கிராமசுதந்தரவகை. (Pudu. Insc. 271.) |
பறையிறை | paṟai-y-irai n. perh. id.+. A tax paid in cash; காசாயவகை. (S. I. I. iv, 195.) |
பன்சர் | paṉcar n. cf. பஞ்சர். Waste land; தரிசுநிலம். (P. T. L.) |
பன்மை | paṉmai n. A tax paid in cash; காசாயவகை. பன்மையாலும் பண்டவெட்டியாலும் ஆளொன்றுக்குக் காசு பத்தாக (S. I. I. v, 365). |
பன்றியாழ்வார் | paṉṟi-y-āḷvār n. <>பன்றி+. Viṣṇu in His Boar-incarnation; வராகாவதாரமூர்த்தி. (I. M. P. S.A. 380.) |
பன்றியோடை | paṉṟi-y-oṭai n. <>id.+. Small channel; சிறுவாய்க்கால். Loc. |
பன்னெறி | paṉṉeṟi n. <>பல்+. Maxims on miscellaneous topics; பலபொருள்களைப்பற்றிக் கூறும் நீதிவசனங்கள். (நாலடி. அதி. 37.) |
பனம்பற்று | paṉam-paṟṟu n. <>பனை+. Palmyra tope; பனந்தோப்பு. (S. I. I. viii, 209.) |
பனிச்சுடர் | paṉi-c-cuṭar n. <>பனி+. Moon; சந்திரன். பனிப்பகையைப் பனிச்சுடர் விட்டெறிப்பன (தக்கயாகப். 485). |
பனிநீர் | paṉi-nīr n. <>id.+. The clear liquid at the top, when curd is allowed to settle; தயிர் முதலியன வடிந்தபின் மேலாக எஞ்சி நிற்குந் தெளிந்த நீர். பனிநீருள்ளது வடித்துக் கட்டியாயிருக்கிற தயிரும் (திவ். பெரியாழ். 2, 2, 2, வ்யா. பக். 250). |
பனிப்பிரபை | paṉi-p-pirapai n. <>id.+. Moonlight; நிலா. பனிப்ரபையிட் டவித்தே (தக்கயாகப். 482). |
பனைமூக்கன் | paṉai-mūkkaṉ n. <>id.+. cf. பனைமூக்காரன். A kind of paddy; நெல்வகை. நிறக்கும் பனைமூக்க னென்றும் (நெல்விடு. 185). |
பனைவடலி | paṉai-vaṭali n. <>பனை+. Young palymra; வடலி. Loc. |
பஸ்யதோஹரன் | pašyatōharaṉ n. <>pašyatō-hara. Thief who steals even when a person is looking on; பார்த்துக்கொண்டிருக்கும் போதே திருடுவோன். (திவ். பெரியதி. 1, 1, 5, வ்யா. பக். 37). |
பஸ்கி | paski n. A kind of physical exercise which consists of sitting down and standing up alternately; தேகப்பயிற்சி வகை. Mod. |
பஸ்தி | pasti n. Jaina temple; ஜினாலயம். (M. E. R. 1901, P. 2.) |
பஸ்திசெய் - தல் | pasti-cey- v. tr. <>பஸ்தி+. To improve; திருத்துதல். Loc. |
பக்ஷகன் | pakṣakaṉ n. <>bhakṣaka. Consumer; destroyer; அழிப்பவன். ரக்ஷகனன்றிக்கே பக்ஷகனானாலும் விடலாயோ உன் வடிவிருப்பது (திவ். திருமாலை, 39, வ்யா. பக். 118). |