Word |
English & Tamil Meaning |
---|---|
பாடிவேட்டை | pāṭi-vēṭṭai n. perh. பாடி+. Hunting; பாரிவேட்டை. (S. I. I. iv, 115.) |
பாடுகாவல் | pāṭu-kāval n. of. பாடிகாவல். Keeping another in restraint, near oneself; தன்னருகிலே வைக்குங் காவல். (திவ். பெரியாழ். 3, 7, 5, வ்யா. பக். 713.) |
பாடுபட்டசொரூபம் | pāṭu-paṭṭa-corūpam n. <>பாடு+படு-+. Christ; இயேசுநாதர். Chr. |
பாண் | pāṇ n. <>பாழ். That which ruins; பாழாக்குவது. பாதியிலே நீங்குமோ பாண்சனியன் (தெய்வச். விறலிவிடு. 377). |
பாணி 1 | pāṇi n. Fem. of. பாணன். Woman of the Pāṇar caste; பாடினி. என்கொணர்ந்தாய் பாணா நீயென்றாள் பாணி (பெருந்தொ. 1684). |
பாணி 2 - த்தல் | pāṇi- 11 v. tr. <>பாணி. To render; to give; கொடுத்தல். காசோ நெற்றானியமோ பாணிப்பீரென்ன (பஞ்ச. திருமுக. 645). |
பாணினி | pāṇiṉi n. Fem. of பாணன். Songstress, woman of the Pāṇar caste; பாடினி. பாணினியு மின்னிசையாற் பாடுவாள் (கடம்ப. உலா, 295). |
பாத்திரம் | pāttiram n. prob. pātra. Field where ragi is grown; வரகுப்பாத்தி. Loc. |
பாதகத்தன்மை | pātaka-t-taṉmai n. <>பாதகம்+. Criminality; குற்றத்தன்மை. Pond. |
பாதகி | pātaki n. <>pātakin. Criminal; பாதகம். பக்திமான்களும் பாதகிகளும் ஒக்கவாழ்ந்து போய்த்து (திவ். அமலனாதி. 2, வ்யா. பக். 33). |
பாதகோசம் | pāta-kōcam n. <>பாதம்+. Gaiter; கணுக்காலுறை. Pond. |
பாதம் | pātam n. <>pāta. Foetus aborted in the fifth or sixth month of pregnancy; ஐந்து அல்லது ஆறாம் மாதங்களில் அழியுங் கரு. (சி. சி. 2, 93, மறைஞா.) |
பாதர் | pātar n. <>Persn. bahādur. Bahadur; பகதூர். பாதர் வெள்ளை யென்று கூப்பிடுவேன் (கட்டபொம்மு. பக். 26). |
பாதாமல்வா | pātām-alvā n. See பாதுமல்வா. Loc. . |
பாதாளகங்கைக்கிணறு | pātāḷakaṅkai-k-kiṇaṟu n. <>பாதாளகங்கை+. Artesian well; பூமியிலுள்ள நீரூற்றிலிருந்து மேனோக்கிப்பாயும் நீருள்ள கிணறு. (சகசந். 9.) |
பாதிசம்வாதம் | pāti-camvātam n. <>பாதி+. Unilateral consent; ஒருபக்கத்தார் மட்டுஞ் சம்மதிக்கை. (ஈடு, 4, 1, 1.) |
பாதுகை | pātukai n. <>pādukā. Art of reaching a destination by wearing a magic shoe; மாயாசக்தியுள்ள செருப்பை மாட்டிக்கொள்வதால் நினைத்தவிடத்திற்குச் செல்லும் வித்தை. (சௌந்த. ஆனந்த. 30, உரை.) |
பாதுமல்வா | pātum-alvā n. <>Persn. bādām+. A kind of confection prepared with almond; வாதுமையாலான அல்வா. பாதுமல்வா நெய்யுருண்டை (பஞ்ச. திருமுக. 1837). |
பாந்தல் | pāntal n. perh. பாந்து. Hamlet of a village; சிற்றூர். ஏந்தல் பாந்தலுட்பட (S. I. I. viii, 67). |
பாப்பாத்திக்கழுகு | pāppātti-k-kaḻuku n. <>பாப்பாத்தி+. Egyptian vulture; கழுகுவகை. (M. M.) |
பாப்பாத்திப்பூச்சி | pāppātti-p-pūcci n. <>id.+. Butterfly; வண்ணாத்திப்பூச்சி. (W.) |
பாம்புச்சட்டம் | pāmpu-c-caṭṭam n. <>பாம்பு+. Bressummer; சட்டைச்சுவர் அல்லது தாழ்வாரத்தில் ஓடும் நெடுக்குமரம். Madr. |
பாமரவைத்தியன் | pāmara-vaittiyaṉ n. <>பாமரம்+. See பரிசனைவைத்தியன். Pond. . |
பாய்கொடு - த்தல் | pāy-koṭu- v. intr. <>பாய்+. To celebrate the nuptial ceremony; சாந்திக் கல்யாணஞ் செய்தல். Loc. |
பாய்மடை | pāy-maṭai n. <>பாய்-+. Opening in the ridge of a field for the inflow of water; வாய்மடை. Colloq. |
பாய்மரக்கயிறு | pāymara-k-kayiṟu n. <>பாய்மரம்+. Cable; ஆலாத்து. Pond. |
பாயமாலி | pāyamāli n. <>பாய்மாலி. Destruction, ravage, ruin; அழிவு. (P. T. L.) |
பாயிதா | pāyitā n. <>Arab. fāyadā. Gain, advantage; benefits; இலாபம். Loc. |
பாயிரம் | pāyiram n. Prob. Bahis. That which is outside; புறம்பானது, உள்ளமும் பாயிரமும் மொக்குமேல் (நீலகேசி, 261) |
பார்க்கோல் | pār-k-kōl n. prob. பார்+. Staff of honour; கட்டியத்தடி. (T. A. S. ii, 67.) |
பார்வைத்தூண் | pārvai-t-tūṇ n. <>பார்வை+. Decorated post at the entrance or at the central hall of a building; வீட்டினுடைய முகப்பிலேனுங் கூடத்திலேனும் அழகுபடச்செய்து நிறுத்துந்தூண். Loc. |
பார்வைப்பலகை | pārvai-p-palakai n. <>id.+. Plank placed on the transom of a door; சூரியப்பலகை. Loc. |