Word |
English & Tamil Meaning |
---|---|
பாவாடைவீசு - தல் | pāvāṭai-vīcu- v. intr. <>id.+. To wave pāvāṭai before kings and chieftains, as a mark of honor; அரசர் தலைவர் முன்பு ஒருவகைப் பாவாடை விருதை வீசி உபசாரஞ் செய்தல். இருபுறத்தும் . . . பாவாடை வீச (தெய்வச். விறலிவிடு. 565). |
பாவி - த்தல் | pāvi- 11 v. tr. <>bhava. To experience; to enjoy; அனுபவித்தல். பாவித்தாள் மாதவியாள் (கோவ. க. 96). |
பாவிப்பு | pāvippu n. <>பாவி-. 1. Model; example; மாதிரி. (யாழ். அக.) 2. Guidance; |
பாவின்புணர்ப்பு | pāviṉ-puṇarppu n. <>பா+. (Poet.) A kind of verse; மிறைக்கவிவகை. (பிங்.) |
பாவீடு | pāvīṭu n. <>பாவு-+. Terraced house; மேலே தளம்போட்ட வீடு. பாவீடு பள்ளியறை (நெல்விடு. 164). |
பாவுள் | pāvuḷ n. <>id.+. A room in the inner part of the house; வீட்டின் உட்பக்கத்திலுள்ள அறை. Tinn. |
பாவுஸ்தே | pāvustē n. <>E. Bob-stays; சப்தறாமரத்திற்குக் கீழ்ப்புறத்தில் ஆதாரமாகவுள்ள கயிறு அல்லது சங்கிலி. (M. Navi.) |
பாவோட்டம் | pāvōṭṭam n. perh. பாவை+ஓட்டம். Dance; நடனம். பாவோட்டம் ஓடுவது நட்டுவன்மார் (பணவிடு. 190). |
பாழறுவான் | pāḻ-aṟuvāṉ n. <>பாழ்+அறு-. A term of abuse, meaning 'a damned person'; 'நாசமாய்ப்போவான்' என்று பொருள்படும் வசைமொழி. அடபாழறுவாய் உன்செய்திசற்று முரைத்திலேன் (சரவண. பணவிடு. 94). |
பாளையத்துப்பிள்ளை | pāḷaiyattu-p-piḷḷai n. <>பாளையம்+. Son of a warrior brought up and trained as a soldier, at the king's expense; போர்வீரரின் மக்களாய் அரசன் செலவிற் படைவீரராவதற்கு வளர்க்கப்படுவோன். Pond. |
பாளையம்வாங்கிப்போ - தல் | pāḷaiyam-vāṅki-p-pō- v. intr. <>id.+. To change the camping place, as an army; படை இடம் விட்டுப் பெயர்ந்து செல்லுதல். Pond. |
பாற்கடுக்கன் | pāṟ-kaṭukkaṉ n. perh. பால்+. A kind of paddy; நெல்வகை. பறக்குஞ் சிறுகுருவி பாற்கடுக்க னென்றும் (நெல்விடு. 185). |
பாற்சாயவேஷ்டி | pāṉ-cāya-vēṣṭi n. <>id.+. A kind of cloth; ஆடைவகை. Loc. |
பாற்பதார்த்தம் | pāṉ-patārttam n. <>id.+. Edibles prepared from milk; பாலிலிருந்து உண்டாக்கும் பாற்கட்டி முதலானவை. Pond. |
பாற்லி | pāṟli n. Bunt-lines; கப்பற்பாயைக் குறைக்க அல்லது சுருட்ட அதன் கீழோரத்திற் கட்டியிருக்குங் கயிறு. (M. Navi.) |
பாறாவளை | pāṟāvaḷai n. cf. பாராவளையம். A kind of boomerang; வளைதடி. (திருவாலவா. 39, 19, பி-ம்.) |
பாஜனம் | pājaṉam n. <>bhājana. Vessel; பாத்திரம். தந்திவர்ம மகாராஜர் கொடுத்த பொன் பாஜனம் ஒன்றினால் (S. I. I. iv, 8). |
பாஷிதபேதம் | pāṣita-pētam n. <>bhāṣita+. See பாஷைவிகற்பம். Pond. . |
பாஷைக்கருத்து | pāṣai-k-karuttu n. <>பாஷை+. Implied meaning of a word; சொல்லின் உட்பொருள். (தாதுமாலை, பக். 132.) |
பாஷைவிகற்பம் | pāṣai-vikaṟpam n. <>id.+. Dialect; தேசிகம். Pond. |
பாஸ்கரீயன் | pāskarīyaṉ n. <>bhāskarīya. Follower of the doctrine of Bhāskara; பாற்கரிய மதத்தைச் சார்ந்தவன். (ஈடு, 1, 1, அவ. பக். 63.) |
பாஸ்குத்திருநாள் | pāsku-t-tirunāḷ n. <>Fr. paques+. Easter; passover; ஒரு கிறிஸ்தவப் பண்டிகை. Chr. |
பாஸ்திகர்மம் | pāstikarmam n. Passing stools before passing urine; சிறுநீர்விடுமுன் மலங்கழிக்கை. (யோகஞானா. 33.) |
பிக்கு | pikku n. Fragrant basil; திருநீற்றுப்பச்சை. (நாமதீப. 329.) |
பிங்கலம் | piṅ-kalam n. perh. பின்+. Spittoon; எச்சிலுமிழும் படிக்கம். (M. E. R. 1 of 1920, p. 101.) |
பிங்கலிகை | piṅkalikai n. <>piṅgalikā. (Jaina.) One of the nine treasures; நவநிதியுளொன்று. (சீவசம். Ms.) |
பிங்களை | piṅkaḷai n. <>piṅgalā. The second of the three stages of one's life; ஆயுளின் மூன்று பகுதிகளுள் இரண்டாவது பகுதி. (W.) |
பிச்சல் | piccal n. <>piccha. Back-part of a ship; கப்பலின் பின்னணியம். (M. Navi.) |
பிச்சவாரி | picca-vāri n. prob. பிச்சை+. A kind of paddy; நெல்வகை. (மதி. க. i, 6.) |