Word |
English & Tamil Meaning |
---|---|
பாரகூலி | pāra-kūli n. <>பாரம்+. Cartage; freight; carrier's charges; சாமானை எடுத்துக் கொண்டு போவதற்குரிய கூலி. (S. I. I. i, 140.) |
பாரஞ்சாம்பி | pāra-cāmpi n. <>id.+. Crane; சுமையை யேற்றியிறக்குவதற்குரிய கருவி. Pond. |
பாரணம் | pāraṇam n. <>pārāyaṇa. Ceremonial recitation; பாராயணம். பாரணங்க ளெங்கும் பரந்தொலிப்ப (பாடு. திருவருட்.). |
பாரணை | pāraṇai n. prob. பாரி-. Extensiveness; பாரிப்பு. பாரணைநல்ல பதினறுகற்பத்தவர் (நீலகேசி, 90). |
பாரதப்புறம் | pārata-p-puṟam n. <>பாரதம்+. Gift of land for reading the Mahābhārata; பாரதம் வாசிப்பதற்கு விடப்பட்ட இறையிலிநிலம். (S. I. I. v, 81.) |
பாரபூதி | pārapūti n. A spiritual world, one of kuyyāṭṭaka-puvaṉam, q.v.; குய்யாட்டக புவனத்து ளொன்று. (சி. போ. பா. 2, 3, பக். 213.) |
பாரவிட்டம் | pāraviṭṭam n. Good habits. See துதாங்கனம். பத்துமாய பாரமீதை பாரவிட்டமென்றலும் (நீலகேசி, 359). |
பாராட்டுச்சரிப்பு | pārāṭṭuccarippu n. <>பாராட்டு+உச்சரிப்பு. Emphasis on a word; சொற்களை எடுத்துக் கூறுகை. Pond. |
பாராட்டுவாக்கியம் | pārāṭṭu-vākkiyam n. <>id.+. Magniloquence; ஆடம்பரப்பேச்சு. Pond. |
பாராபாரி | pārāpāri n. Redupl. of பாரி. Great dimension; பேரளவு. முழம் கட்டை யென்றால் அகலம் பாராபாரி என்பார்கள் (மதி. கள. i, 5). |
பாராயணி - த்தல் | pārāyaṇi- 11 v. tr. <>பாராயணம். To read ceremoniously, as in pārāyaṇam; பாராயணமாகப் படித்தல். அதிகமாகப் பயின்றும் பாராயணித்தும் (இராமநா. முகவுரை, பக். 17). |
பாரி - த்தல் | pāri- 11 v. tr. To resemble; ஒத்தல். காந்தனாம் பாந்தளைப் பாரித்தலர்ந் தனவே (திருக்கோ. 324, உரை). |
பாரிசத்தான் | pāricattāṉ n. <>பாரிசம். 1. Friend; நண்பன். Pond. 2. Partisan; |
பால்மாங்காய் | pāl-māṅkāy n. <>பால்+. A kind of fruit salad; மா பலா முதலான பழங்கலந்த பாலுணவு. Loc. |
பால்வெள்ளைச்சோளம் | pāl-veḷḷai-c-cōḷam n. <>id.+வெள்ளை+. A kind of maize; சோளவகை. (விவசா. 3.) |
பாலத்துவம் | pālattuvam n. <>bāla-tva. Childhood; பிள்ளைமை. Pond. |
பாலப்பிரமசாரி | pāla-p-piramacāri n. <>bāla+. Young ascetic; பாலசந்நியாசி. (சீவக. நூலாசிரியர்வரலாறு, பக். 16.) |
பாலப்பிராயம் | pāla-p-pirāyam n. <>id.+. Young age; பிள்ளைப்பருவம். பாலப்பிராயத்தே பார்த்தற் கருள்செய்த கோலப்பிரானுக்கு (திவ். பெரியாழ். 2, 6, 6). |
பாலாமை | pāl-āmai n. <>பால்+. A kind of tortoise; வெண்மை நிறமுள்ள ஆமைவகை. |
பாலாவி | pālāvi n. A kind of paddy; நெல்வகை. (யாப். வி. 509.) |
பாலிகை | pālikai n. perh. பாலி-. Canopy; மேற்கட்டி. Pond. |
பாலிபாய் - தல் | pāli-pāy- v. intr. <>பாலிகை+. To flow easily, without damming; பாலிகை பாய்தல். Tj. |
பாலை | pālai n. 1. A kind of fish; மீன்வகை. (பறாளை. பள்ளு. 75.) 2. Sultriness; heat; |
பாவகநிலை | pāvaka-nilai n. perh. pāvaka+. A method of removing or counteracting poison; விடந்தீர்க்குஞ் செயல்வகை. (பெரியபு. திருஞான. 1060.) |
பாவதோஷம் | pāva-tōṣam n. <>pāpa+. Sin; evil; crime; பாபம். அவன் பாவதோஷத்துக்குப் பயந்தவன். |
பாவம் | pāvam n. <>bhāva. (Jaina.) The change in the soul, due to the activities of the mind, body and speech; மனோவாக்காய வியாபாரத்தால் ஜீவனிடம் உண்டாகும் பரிணாம விசேஷம். (நீலகேசி, 427, உரை.) |
பாவமூர்க்கத்தனம் | pāva-mūrkka-t-taṉam n. <>பாவம்+. Impenitence; தான் செய்த பாவத்துக்கு இரங்காமை. Chr. |
பாவலி | pāvali n. An ear-ornament; செவியணிவகை. (பெண். தாலாட். 13.) |
பாவன் | pāvaṉ n. <>pāpa. Sinner; பாபி. (இரக்ஷணிய. 76.) |
பாவனி | pāvaṉi n. (Mus.) A primary rāga; மேளகர்த்தாக்களு ளொன்று. (சங். சந். 47.) |
பாவாடை | pāvāṭai n. perh. பாவு-+. Servant; வேலையாள். (I. M. P. Cg. 146.) |
பாவாடைக்காரன் | pāvāṭai-k-kāraṉ n. <>பாவாடை+. Liveried servant; குஞ்சம்பாவாடை கட்டும் வேலைக்காரன். Loc. |