Word |
English & Tamil Meaning |
---|---|
பாக்கம் | pākkam n. Small bundle; சிறுமூட்டை. ஆமணக்கங்கொட்டை வண்டி ஒன்றுக்குக் காசு பத்தும் பொதி ஒன்றுக்குக் காசு அரையும் பாக்கம் ஒன்றுக்குக் காசு காலும் (S. I. I. viii, 232). |
பாகத்தியாகலக்ஷணை | pāka-t-tiyāka-lak-ṣaṇai n. <>bhāga+tyāga+. (Gram.) A variety of ilakkaṇai, in which the primary sense of a word is partly discarded and partly retained; விட்டும் விடாதவிலக்கணை. (விசாரசந். 227.) |
பாகம் | pākam n. <>bhāga. Place, spot, region; இடம். கன்னபாகமும் (பாரத. புட்ப. 33). |
பாகவதநம்பி | pākavata-nampi n. <>பாகவதன்+. Vaiṣṇava devotee; விஷ்ணுபக்தன். (S. I. I. iv, 40.) |
பாகவிஸ்தி | pāka-visti n. <>பாகம்+. Partition; பாகப்பிரிவினை. Tinn. |
பாகாயம் | pākāyam n. <>U. bāgāyat. cf. பாகாயதி. Fenced plot of ground, fit for garden cultivation; தோட்டம்வைத்தற் கேற்றபடி வேலியடைப்புள்ள நிலம். Loc. |
பாகியாங்கம் | pākiyāṅkam n. <>bāhya+. (Phil.) The outer path; புறவழி. பிரமத்தை யடைகிறதற்கு பாகியாங்கமென்றும் அந்தராங்கமென்று மிரண்டங்கங்களுண்டு (வேதாந்தசா. 26). |
பாகுடக்கவி | pākuṭa-k-kavi n. <>Pkt. pāhuda <>prābhṟta+. Dedicatory poem; காணிக்கையாகச் சமர்ப்பிக்கும் பாட்டு. (செந். vi, 335.) |
பாகை | pākai n. <>bhāga. The spot from which ichor flows in an elephant; யானையின் உடலில் மதநீர் ஊறுமிடம். முகபாகை குதிபாய் கடாம் (தக்கயாகப். 3). |
பாங்கு | pāṅku n. Palm-leaves, etc., required for constructing a sheep-pen; ஆட்டுக்கிடை மறிப்பதற்குரிய விரியோலை முதலியன. Tinn. |
பாங்குநெல் | pāṅku-nel n. A kind of paddy; நெல்வகை. (விவசா. 2.) |
பாசனாங்கம் | pācaṉāṅkam n. <>bhājana+aṅga. A celestial tree, one of kaṟpaka-taru; கற்பகமரவகை. (தக்கயாகப். 757, உரை.) |
பாசு | pācu n. <>E. pass. 1. Success, as in examinations; பரீட்சை முதலியவற்றில் தேர்ச்சி. (பிரதாப. விலா. 13.) 2. Gate-pass' permit; |
பாஞ்சாலம் | pācālam n. <>pācāla. One of the three literary styles, midway between kauṭam, and vaitaruppam; கௌட வைதருப்ப ரீதிகளுக்கு இடைப்பட்ட காவிய ரீதி. (சங்கற்பசூ. பக். 6.) |
பாட்சிகன் | pāṭcikaṉ n. <>pākṣika. Birdcatcher; fowler; பட்சிபிடிப்பவன். (W.) |
பாட்டம் | pāṭṭam n. <>பாடு. Wet lands held on a favourable assessment paid in grain; குறைந்த தானியத் தீர்வை செலுத்தி அனுபவிக்கும் நஞ்சை நிலம். (R. T.) |
பாட்டமாளன் | pāṭṭam-āḷaṉ n. <>பாட்டம்+. 1. Officer in charge of revenue collections; அரசிறையதிகாரி. (M. E. R. 101 cf 1926-7.) 2. Cultivator, lessee; |
பாட்டிராசி | pāṭṭirāci n. <>பாட்டு+. The sign of the zodiac occupied by the sun at sunset; சூரியன் அஸ்தமிக்கும் இலக்கினம். பாட்டி ராசியிற் புறப்படாதே. |
பாட்டிலேபோடு - தல் | pāṭṭilē-pōṭu- v. tr. <>பாடு+. To place or lay down horizontally; பூமியுடன் ஒட்டி நேராகச் சார்த்துதல். Loc. |
பாட்டு | pāṭṭu n. <>id. Longitudinal layer, in brick-work; செங்கற்சுவர் எழுப்பும்போது நெடுக்காக வைக்கும் கல். Loc. |
பாடண்டமதம் | pāṭaṇṭa-matam n. <>pāṣaṇda+. Heretic religion; அவைதிகமதம். புல்லும் பாடண்டமதானுபவங்கடமை (நூற்றெட்டுத் திருப்பு. 7). |
பாடம் | pāṭam n. prob. pāṭha. Utterance, word; வார்த்தை. படுக்கலுற்ற பதகநின் பாடமே (நீலகேசி, 537). |
பாடவை - த்தல் | pāṭa-vai- v. tr. <>பாடு-+. To celebrate the ceremony of irutu-snāṉam before a girl actually attains her age; இருதுவாகு முன் ஒரு பெண்ணுக்கு இருது ஸ்நானச் சடங்கு செய்தல். Brāh. |
பாடாலம் | pāṭālam n. <>பாடலம். Trumpet-flower; பாதிரி. பாடாஅலப் புட்பத்தனவாகிய பண்பு நாற்றம் (நீலகேசி, 422). |
பாடாவரிநட்சத்திரம் | pātāvari-naṭcattiram n. <>பாடாவிரி+. A group of inauspicious nakṣatras; சில அசுபநட்சத்திரங்கள். (சோதிட. சிந். 56.) |
பாடாவிரி | pāṭāviri n. cf. பாடாவதி. Disaster; பெருந்துன்பம். அதுவொரு பாடாவிரி (இராமநா. பால. 11). |
பாடிலம் | pāṭilam n. Country; நாடு. (R.) |