Word |
English & Tamil Meaning |
---|---|
பக்கத்துக்குத்துக்கால் | pakkattu-k-kuttu-k-kāl, n. <>id.+. Queen-post; முகட்டுக்கையைத் தாங்குவதற்கு உத்திரத்தின்மேல் நிறுத்துங்கால். Madr. |
பக்கநேத்திரம் | pakka-nēttiram, n. cf. புக்கினநேத்திரம். A kind of delirium; சன்னிவகை. (தஞ். சர. iii, 194.) |
பக்கப்பத்தி | pakka-p-patti, n. <>பக்கம்+. Pent-house; பிரதானக்கட்டடத்தைச் சாரவைத்துக்கட்டப்படுந் தாழ்வாரம். Na. |
பக்கப்பழு - த்தல் | pakka-p-paḻu-, v. intr. Redupl. of பழு-. To become very ripe; மிக முதிர்தல். பக்கப்பழுத்த கிழவன்முன்னே வெட்கமென்னடி (வள்ளி. கதை. Ms.). |
பக்கப்பிறந்தநாள் | pakka-p-piṟanta-nāḷ, n. <>பக்கம்+. The day of one's natal star occurring in a month other that the monthe in which one was born; பிறந்தமாதமல்லாத மாதங்களில் வருஞ் ஜன்ம நட்சத்திரம். Nā. |
பக்கப்பூ | pakka-p-pū, n. prob. id.+. Decorating flower; ஒப்பனைப்பூ. (குறள், 1316, மணக்.) |
பக்கம்வை - த்தல் | pakkam-vai-, v. intr. <>id.+. To put forth shoots from the stem; பக்கத்தில் மூடுவெடித்துக் கிளையிடுதல். Nā. |
பக்கமிடு - தல் | pakkam-iṭu-, v. intr. prob. id.+. To ease; மலங்கழித்தல். Loc. |
பக்காயம் | pakkāyam, n. Tub; தொட்டி. Loc. |
பக்கான் | pakkāṉ, n. Shepherd koel; சாதகபட்சி. (யாழ். அக.) |
பக்கிணம் | pakkiṇam, n. <>bhakṣaṇa. Confection; பட்சணம். (T. A. S. V, ii, 158.) |
பக்கித்தட்டான் | pakki-t-taṭṭāṉ, n. <>பக்கி+. Dragon-fly; தட்டாரப்பூச்சி. Nā. |
பக்கிழம் | pakkiḻam, n. <>pakṣa. Lunar fortnight; பக்ஷம். அபரபக்கிழத்து (T. A . S. V, ii, 158). |
பக்தை | paktai, n. <>bhaktā. Woman devotee; பக்தியுள்ளவள். (தென். இந். க்ஷேத். பக். 313.) |
பக்ரு | pakru, n. <>Arab. fakhr. Pride; கருவம். Muham. |
பகடக்காரன் | pakaṭa-k-kāraṉ, n. prob. பகடு+. Artful person; தந்திரக்காரன். (யாழ். அக.) |
பகர்ச்சை | pakarccai, n. prob. பெயர்-. Cooked food sent from the temple or palace to the houses of certain dignitaries, as a perquisite; கோயில் அரண்மனை முதலிய இடங்களினின்றும் மரியாதையாக அனுப்பும் எடுப்புச்சோறு. கோயிலிலிருந்து மூத்தபிள்ளை வீட்டுக்குப் பகர்ச்சைபோகிறது. Nā. |
பகல் | pakal, n. <>பகு-. 1. Unsociability; பிறரோடு கூடாமை. பகலென்னும் பண்பின்மை (குறள், 851). 2. Party; |
பகல்விடுதி | pakal-viṭuti, n. <>பகல்+. Day lodging; பகலில் தங்குமிடம். (W.) |
பகலாந்தை | pakal-āntai, n. prob. id.+. A kind of owl; ஆந்தைவகை. Pond. |
பகலி | pakali, n. A disease of horses; குதிரைநோய்வகை. (அசுவசா. 111.) |
பகவந்தன் | pakavantaṉ, n. <>bhagavān. Lord; பகவான். மூவருள் முதலான பகவந்தனீயென்று கண்டும் (நூறறெட்டுத். திருப்பு. 97.) |
பகற்கோயில் | pakaṟ-kōyil, n. <>பகல்+. Hall in the middle of a tank; நீராவிமண்டபம். (சீவக. 2860, உரை.) |
பகாப்பிடுகு | pakāppiṭuku, n. A title of the Pallava kings; பல்லவரது பட்டப்பெயர்களுளொன்று. (Insc.) |
பகிர்கமி - த்தல் | pakir-kami-, 11 v. intr. <>bahis+gam. To ease oneself; வெளிக்குப்போதல். பகிர்கமிக்குங் காலத்து நாய்க்குக் கொடுக்கின்றோமென நினைந்துவிட நல்லதர்மமாமோ (நீலகேசி, 223, உரை). |
பகிர்ச்சி | pakircci, n. <>பகிர்-. Division; பகுதி. Pond. |
பகுதி | pakuti, n. <>பகு-. 1. Administrative sub-division of Taluq; தாலூகாவின் உட்பிரிவு. Nā. 2. That which belongs to a person; |
பகுநாயகம் | paku-nāyakam, n. <>bahunāyaka. Plutocracy; வெகுநாயகம். பகுநாயகம் ஜகத்து என்கிறதைத் தவிர்த்துக் குறுகவிட்டு வைத்தார்களிறே சிலவேதாந்திகள் (திவ். திருநெடுங். 2, வ்யா. பக். 19). |
பகுமதி | pakumati, n. <>bahumati. See பகுமானம், பகுமதி நிமித்தமாகப் போர்த்தே னென்னில் (நீலகேசி, 272, உரை). . |
பகுமானம் | pakumāṉam, n. <>bahumāna. High esteem, great respect; honour, dignity; பெருமதிப்பு. பாட்டொன்றோ வென்ன பகுமானம் (பஞ்ச. திருமுக. 924). |
பகைச்சரக்கு | pakai-c-carakku, n. <>பகை+. Antidote; மாற்றுச்சரக்கு. Loc. |