Word |
English & Tamil Meaning |
---|---|
புத்திரிகை | puttirikai n. <>putrikā. Daughter whose son is considered as the son of her father, according to the stipulation at the time of her marriage; தனக்குப் பிறக்கும் மகனைத் தன் தந்தையின் மகனாகக் கொள்வது என்ற நிபந்தனைக் குட்பட்டு விவாகமாகும் மகள். (ஆராய். தொ. 71.) |
புதம் | putam n. <>budha. Intelligence; அறிவு. புதமிகு பொதியா சலமுனி பணிவோய் (பழனிப்பிள்ளைத்தமிழ், 25). |
புதற்புல் | putaṟ-pul n. <>புதல்+ A kind of grass; புல்வகை. (அக. நி.) |
புதாரு | putāru n. Bush; புதர். Pond. |
புதாஷ்டமி | putāṣṭami n. <>Budha+. The aṣṭami titi falling on a Wednesday; புதன்கிழமை வரும் அஷ்டமிதிதி. (பஞ்.) |
புதியது | putiyatu n. <>புது-மை. The festival on the completion of the harvest; அறுவடையானதுங் கொண்டாடும் பண்டிகை. கார்த்திகைப் புதியதுக்குக் குளித்தார்களாகில் (ஈடு, 1, 5, 1). |
புதியதுண்(ணு) - தல் | putiyatuṇ- v. intr. <>புதியது+. To have a first taste of; முதன்முதல் ருசிபார்த்தல். தன் பிறவிக்குரிய போகங்களிலும் ஆசார ஸம்ஸ்காராதிகளிலும் புதியதுண்ணாதே (ரஹஸ்ய. 87). |
புதினத்தாள் | putiṉa-t-tāḷ n. <>புதினம்+. Newspaper; சமாசாரப் பத்திரிகை. Mod. |
புதினம் | putiṉam n. <>புது-மை. See புதினத்தாள். Mod. . |
புதுக்குளிகை | putu-k-kuḷikai n. <>id.+. An ancient coin; பழைய நாணயவகை. (S. I. I. iv, 108.) |
புதுக்கோடி | putu-k-kōṭi n. <>id.+. New cloth offered ceremonially to a woman on her widowhood; விதவைக்கு அளிக்குங் கோடிப்புடைவை. Mod. |
புதுச்சேவகன் | putu-c-cēvakaṉ n. <>id.+. Conscript; புதிதாக இராணுவத்திலமர்ந்த படையாள். Pond. |
புதுமங்கலக்குடியான் | putumaṅkala-k-kuṭiyāṉ n. An ancient coin; பழைய நாணயவகை. (பணவிடு. 139.) |
புதுமானியம் | putu-māṉiyam n. <>புது-மை+. Newly-granted inam land; புதிதாகக் கொடுத்த இனாம் நிலம். (பணவிடு. 171.) |
புதுமின்னல் | putu-miṉṉal n. <>id.+. An ancient coin; பழைய நாணயவகை. (பணவிடு. 143.) |
புதுமுயற்கூடு | putu-muyaṟ-kūṭu n. <>id.+முயல்+. The moon; சந்திரன். (சாதகசிந். 6.) |
புதுவெட்டு | putu-veṭṭu n. <>id.+. An ancient coin; பழைய நாணயவகை. (பணவிடு. 133.) |
பும்ஸவேதம் | pumsa-vētam n. <>pumsavēda. (Jaina.) See புருடவேதம். (மேருமந். 434, உரை.) . |
புய - த்தல் | puya- v. tr. <>புய்-. To pluck, pull out; பெயர்த்தல். நவைகண்டு வாட்கண் புயக்கவொரு மைந்தனைப் போவித்தார் (கச்சி. வண்டுவிடு. 293). |
புரசல் | puracal n. cf. புரை. Leak; ஒழுக்கு. Loc. |
புரட்டு - தல் | puraṭṭu- 5 v. tr. To turn over, as the leaves of a book; புத்தகவிதழ்கள் முதலியவற்றைத் திருப்புதல். Colloq. |
புரவியெடுப்பு | puravi-y-eṭuppu n. <>புரவி+. Festival of taking a deity on a horse in procession; குதிரைவாகனத்தில் சுவாமி எழுந்தருளுந் திருவிழா. (பஞ்ச. திருமுக. 172.) |
புரவு | puravu n. cf. புரவுபொன். Land-tax; நிலவரி. ஆயிரப் புரவினால் (S. I. I. ii, 386). |
புரவுநெல் | puravu-nel n. <>புரவு+. Land-tax paid in paddy; நெல்லாகச் செலுத்தும் நிலவரி. அளக்கக்கடவ புரவுநெல் முந்நூற்றுக்காடியும் (S. I. I. v, 499). |
புரளி | puraḷi n. Blood; இரத்தம். (இறை. 1, பக். 9.) |
புரளிவித்தைக்காரன் | puraḷi-vittai-k-kāraṉ n. <>புரளி+. Charlatan; மாமாலக்காரன். Pond. |
புராணஸ்தலம் | purāṇa-stalam n. <>id.+. A shrine which has been celebrated in a sthala-purāṇam, although not mentioned in the Tēvāram or other old hymns; அடியார்கள் பாடல்பெறாமல் புராணநூற் சிறப்புமட்டுங் கொண்ட க்ஷேத்திரம். Loc. |
புராதனன் | purātaṉaṉ n. <>purātana. Brahmā; பிரமதேவன். புண்டரிகத்துவாழும் புராதனன் புகழ்ந்து சொல்வான் (பாகவத. 4, தக்கன் வேள்வியழித். 65). |