Word |
English & Tamil Meaning |
---|---|
புள்ளடி | puḷ-ḷ-aṭi, n. <>புள்+. A defect in precious stones; மணிக்குற்றங்களு ளொன்று. புள்ளடியுட் கீற்றுப் பொருங்குற்ற மைந்துவகை (பஞ்ச. திருமுக. 477) |
புள்ளடிக்கல் | puḷḷaṭi-k-kal, n. <>புள்ளடி+. Demarcation stone; அடையாளமிட்ட எல்லைக்கல். ஆசறுதியில் நாட்டின புள்ளடிக்கல்லே யுற்று (S.I.I.v, 206) |
புள்ளடிபோடு - தல் | puḷḷaṭi-pōṭu-, v. intr. <>id.+. To make a mark in the place of signature, as an illiterate person; கீறல்போடுதல். Loc. |
புள்ளறுதல் | puḷ-ḷ-aṟutal, n. perh. புள்.+. A defect in coins; நாணயக்குற்றவகை. (பணவிடு. 139) |
புள்ளாங்குச்சு | puḷḷāṅ-kuccu, n. perh. id.+. A children's game; கீச்சுக்கீச்சுத்தாம்பாளம் Tinn. |
புள்ளிக்குளிகைவராகன் | puḷḷi-k-kuḷikai-varākaṉ, n. An ancient coin; பழைய நாணயவகை. (M. E. R. 32 of 1923) |
புள்ளீடு | puḷ-ḷ-iṭu, n. <>புள்+. A disease in children, attributed to the evil influence of birds; பட்சிதோஷத்தால் வருவதாகக் கருதப்படும் பிள்ளைநோய். புள்ளீட்டுக்கும் பேயீட்டுக்கும் பிழைக்கப்பெற்ற தென்கிறார் (திவ். பெரியாழ். 2, 5, 4, வ்யா. பக். 343) |
புள்ளெனல் | puḷ-ḷ-eṉal, n. Expr. of sourness of taste; புளித்தற்குறிப்பு. கூழ் புள்ளென்றது (நேமிநா. 66, உரை) |
புளிக்காப்பு | puḷi-k-kāppu, n. <>புளி+. Paste of tamarind, soapnut, etc., used for removing oil smeared on the idols in a ceremonial bath; விக்கிரகத்திற்கு எண்ணெய்க்காப்பிடும்போது எண்ணெய்கழற்ற, உதவும் அரைத்த புளி முதலியன. (திவ். பெரியாழ். 2, 4, 1, வ்யா. பக். 311.) |
புளியம்பிராணி | puḷiyam-pirāṇi, n. <>id.+புறணி. Bark of tamarind; புளியஞ் செதிள். (சங். அக.) |
புளிவசளை | puḷi-vacaḷai, n. <>id.+. A kind of greens; வல்லிசூரணை. (சங். அக.) |
புளிவஞ்சி | puḷi-vaci, n. <>id.+. A creeper with sour fruits; புளிப்புள்ள பழங்கள் காய்க்குங் கொடிவகை. (நாநார்த்த. 556.) |
புற்கை | puṟkai, n. Poultice; பற்று. Pond. |
புற்செதுக்கி | puṟ-cetukki, n. <>புல்+ செதுக்கு-. Grass hoe; புல்லைச்செதுக்க வுதவுங்கருவி. Loc. |
புற்பண்ணை | puṟ-paṇṇai, n. <>id.+. A kind of greens, Celosia mousonia; கோழிக்கீரை வகை. Pond. |
புற்றாம்பழம் | puṟṟām-paḻam, n. <>புற்று+. Termites, in an ant-hill; புற்றாஞ்சோறு. (யாழ். அக.) |
புற்றானியபானம் | puṟṟāṉiya-pāṉam, n. perh. புல்+தானியம்+. Cervisia; சாராயவகை. Chr. |
புறுக்கடமை | puṟa-k-kaṭamai, n. <>புறம்+. An ancient tax; பழைய வரிவகை. புறக்கடமை மாத்தால் தரகுக்கும் ஒருபூ குடிப்பற்றுக்கும் ஒருபணம் (S. I. I. viii, 139). |
புறக்கடி - த்தல் | puṟakkaṭi-, v. tr. <>புறகு+. To expel; வெளியேற்றுதல். பெண்டிழந்தான் கூட்டத்தில் ஒன்றாகப் புறக்கடித்தோம் (S. I. I. vii, 49). |
புறக்கலனை | puṟa-k-kalaṉai, n. <>புறம்+. An Encient tax; பழைய வரிவகை. (S. I. I. iv, 79.) |
புறக்கழனியார் | puṟa-k-kaḻaṉiyār, n. <>id.+. People who live outside the village; கிராமத்திற்கு வெளியே வசிக்குங் குடிகள். (I. M. P. Cg. 689.) |
புறக்கோயில் | puṟa-k-kōyil, n. <>id.+. The outer shrine; வெளியிலுள்ள கோயில். (S. I. I. v, 328.) |
புறங்காவல் | puṟaṅ-kāval, n. <>id.+. Bodyguard; மெய்காப்பாளர். சுற்றிநின்றார் புறங்காவலமரர் (தேவா. 271, 2). |
புறச்சேரி | puṟa-c-cēri, n. <>id.+. Pariah quarters; பறைச்சேரி. (எங்களுர். 132.) |
புறஞ்செய் - தல் | puṟa-cey-,- v. tr. <>id.+. To extern; to expel; வெளியேற்றுதல். இந்நாட்டு மண்ணகத்தே வாழாது புறஞ்செய்தும் (பாரதி. தேசீய. 47) |
புறத்தடியார் | puṟattaṭiyār, n. <>id.+. (šaiva.) Devotees of religions other than šaivism; சைவமல்லாத மற்றைச் சமயத்தடியார். (S. I. I. viii, 38.) |
புறத்தி | puṟatti, n. prob. id. Looks, external appearance of a person; சாயல். Pond. |
புறத்துடர் | puṟattuṭar, n. perh. id.+. A kind of jewel; அணிவகை. (S. I. I. ii, 16.) |
புறநிறச்சார்பு | puṟa-niṟa-c-carpu, n. <>id.+¢நிறம்+. A defect in precious stones; மணிக்குற்றங்களு ளொன்று. போழ்ந்திடு தராசம் புறநிறச்சார்பு (பஞ்ச. திருமுக. 476). |