Word |
English & Tamil Meaning |
---|---|
பெருங்குடி | peruṅ-kuṭi, n. <>id.+. Landlord; நிலச்சுவான். (Colas, ii, 389.) |
பெருங்குரும்பை | peruṅ-kurumpai, n. <>id.+. (சங். அக.) 1. Costum; கோட்டம். 2. Long zedoary; |
பெருந்தொடர் | perun-toṭar, n. <>id.+. (Gram.) Compound or complex sentence; எழுவாய் பயனிலை முடிந்த வாக்கியஞ் சிலவற்றைப் பிணைத்துநடக்குந் தொடர்ந்தவாக்கியம். (தொல். சொல். 42, சேனா.) |
பெரும்பாடிகாவல் | perum-pāṭi-kāval, n. <>id.+. Chief watchamn; தலைமைக்காவலாள். (M. E. R. 407 of 1921.) |
பெரும்பேரன் | perum-pēraṉ, n. <>id.+. Great-grandson; கொட்பேரன். Loc. |
பெருமத்தளி | peru-mattaḷi, n. <>id.+. A kind of drum; முழவம். (திவ். திருப்பள்ளி. 9, வ்யா.) |
பெருமாப்பு | perum-āppu, n. <>id.+. Shooting stick; See ஆப்புத்தள்ளி. Pond. |
பெருமுதியன் | peru-mutiyaṉ, n. <>id.+. A temple official; கோயில் அதிகாரிகளு ளொருவன். (T.A.S.iii. 166) |
பெருவரகு | peru-varaku, n. <>id.+. A kind of common millet; வரகுவகை. (விவசா. 4.) |
பெருவரி | peru-vari, n. <>id.+. A tax in cash; காசாயவகை. (S. I. I. i, 87.) |
பெருவரைமீன் | peruvarai-mīṉ, n. perh. பெருவலை+. A fish; See அறிசா. (சங். அக.) |
பெருவளவாய் | peru-vaḷa-vāy, n. <>பெரு-மை+வளம்+. Big channel; பேராற்றுக்கால். நாட்டுக்குப் பாயும் பெருவளவாயும் (S. I. I.ii, 54). |
பெருவாயன் | peru-vāyaṉ, n. <>id.+. 1. Basket; கடகப்பெட்டி. Loc. 2. See பெருமத்தளி. (திவ். திருப்பள்ளி. 9, வ்யா.) |
பெருவீடு | peru-vīṭu, n. perh. id.+விடு-. Letting out cattle in the afternoon, for grazing; பிற்பகலில் மாடுகளை மேய்க்கவிடுகை. சிறுவீடன்றியே பெருவீடும் விடும்படியாய் (திவ். திருப்பள்ளி, 4, வ்யா.). |
பெருவெள்ளம் | peru-veḷḷam, n. <>id.+. The Deluge; பிரளய வெள்ளம். உண்ணாத பெரு வெள்ளம் உண்ணாமல் தான்விழுங்கி உய்யக்கொண்டகண்ணாளன் (திவ். பெரியதி. 2, 6, 7). |
பெலி | peli, n. perh. bahis. Banishment, excommunication; ஊருக்கு அல்லது சாதிக்குப் புறம்பாக்குகை.(W.) |
பௌ¢ - தல் [பெட்டல்] | peḷ-, 9 v tr. To protect; பாதுகாத்தல். பெட்டல் என்பது புறந்தருதல் (தொல். சொல். 332, இளம்பூ.). |
பெற்பறோடி | peṟpaṟōṭi, n. Back-stays; See பிராந்தல். (M. Navi.) |
பெறுமாதம் | peṟu-mātam, n. <>பெறு-.+. The month of parturition; பேறுகாலம். Rd. |
பெறுமுரி | peṟu-muri n. prob. id.+. Wages சம்பளம். பரிகரத்தார் பெறுமுரியாகப் பெற்று (S.I.I.vii, 30) |
பேசாதிரு - த்தல் | pēcātiru- v. intr. <>பேசு+ஆ neg.+. To keep quiet; செயலற்றிருத்தல். வாத்யங்கள் வாய்த்தால் கூத்தாடுவாருடம்பு பேசாதிராதிறே (திவ். பெரியதி. 1,2,1, வ்யா. பக். 59) |
பேசுலம் | pēculam n. A plant, Arum colocasia செடிவகை. Loc. |
பேசுலி | pēculi n. . See பேசுலம். Loc. |
பேதவாதி | pēta-vāti n. <>பேதம்+. Pluralist கடவுள் சீவன் உலகு இவை வேறுபட்டன என்னுங் கொள்கையுடையோன். சார்வாகாதிகள் அனைவரும் பேதவாதிகள்; வேதாந்தி ஒருவரே அபேதவாதி (விவேகசிந். பக். 20) |
பேதனம் | pētaṉam n. <>bhēdana. Dividing; பகுப்பு. Pond. |
பேதாபேதி | pētāpēti n. <>bhēdābhēdin. Follower of the Bhāskara school of philosophy; பேதாபேத சித்தாந்த முடையோன். (திவ். திருச்சந். 1, வ்யா. பக். 9) |
பேதுரு | pēturu n. St. Peter; இராயப்பர் என்ற கிறிஸ்தவப் பெரியார். |
பேதைபாதம் | pētai-pātam n. perh. பேதம்+. Am ornament for the leg of an idol; தெய்வத்தின் காலில் அணியும் அணிவகை. திருக்கழற்கீழிடும் பேதைபாதமும் (S.I.I.viii, 39) |
பேதைமை | pētaimai n. Lack of discernment; உய்த்துணராமை. (தொல். பொ. 248, இளம்பூ) |
பேய்க்கதி | pēy-k-kati n. <>பேய்+. (Buddh.) One of ṣaṭ-kati, q.v.; ஷட்கதியுளொன்று. |
பேய்த்தி | pēytti n. Fem. of பேய். Demoness; பேய்ச்சி. சிறுபேய் பெரும்பேய்த்தியைச் சென்றுபற்றும் (நீலகேசி, 8) |
பேய்நரி | pēy-nari n. <>பேய்+. Rabid fox; வெறிபிடித்த நரி. பேய்நாய் பேய்நரி முதலியவற்றின் கடிகளுக்கு (தஞ். சர. iii, 102) |