Word |
English & Tamil Meaning |
---|---|
பொய்வெட்டு | poy-veṭṭu, n. <>id.+. A defect in coins; நாணயக்குற்றவகை. (சரவண. பணவிடு. 67.) |
பொர்மா | pormā, n. <>Fr. Forme. Forme; எழுத்துக்கோத்த அச்சுச்சட்டம். Pond. |
பொரிவாயன் | pori-vāyaṉ, n. perh. பொரி +. A sea-fish, white, attaining seven inches in length; கடல்மீன்வகை. (J. N.) |
பொருட்பெற்றி | poruṭ-peṟṟi, n. <>பொருள் +. Essential or underlying truth, reality; தத்துவம். (குறள். 34, அதி. அவதா.) |
பொருத்தச்சுவடி | porutta-c-cuvaṭi, n. <>பொருத்தம் +. Treatise on carpentry; தச்சு நூல். Nā. |
பொருமல் | porumal, n. <>பொருமு-. Impatience; மிக்க ஆதுரம். பொருமலை நானெங்கே யடக்குவேன் (தெய்வச். விறலிவிடு. 239). |
பொருள்புரிநூல் | poruḷ-puri-nūl, n. <>பொருள் + புரி-+. Treatise on polity; அர்த்த சாத்திரம். (பெருங். உஞ்சைக். 32, 1.) |
பொருள்வழு | poruḷ-vaḻu, n. <>id.+. (Pros.) A defect in versification; செய்யுட்குற்றங்களு ளொன்று. (யாப். வி. 525.) |
பொருளியல்புரைத்தல் | poruḷ-iyalp-uraittal, n. <>id.+ இயல்பு +. Indication of the subject-matter of a treatise; வத்துநிர்த்தேசம். (சி. போ. பா. மங். பக். 1.) |
பொல்லாங்கன் | pollāṅkaṉ, n. <>பொல்லாங்கு. Mischievous person; குறும்புக்காரன். (யாழ். அக.) |
பொல்லாது | pollātu, n. <>பொல்லா-மை. Emaciation; thinness, as of body; spoilt condition; உடல் முதலியன கேடுற்ற நிலை. நீ இப்படிப் பொல்லாதாயிருப்பானே னென்ன, நாம் நோயாய்க் கிடந்தோம் கண்டீரேயென்று (சங்கற்பநி. 205, உரை.) |
பொல்லாநிலம் | pollā-nilam, n. <>id.+. Cremation ground; மயானம். உங்களைப் பொல்லா நிலத்திலே யிடுவதற்கு முன்னம் (திவ். திருப்பல். 4, வ்யா. பக். 50). |
பொல்லாப்பு | pollāppu, n. <>id. Objection; ஆட்சேபனை. இக்காணிக்குப் பொல்லாப்புச் சொல்லில் (Pudu. Insc. 327). |
பொலபொலவெனல் | pola-pola-v-eṉal, n. Onom. expr. signifying (a). crumbling, as of earth; பொலுபொலெனல். (சுகசந். 2.): (b). looseness; |
பொலிமுறைநாகு | poli-muṟai-nāku, n. <>பொலி + முறை+. Heifer fit for covering; பொலியக்கூடிய பக்குவமுள்ள கிடாரி. (S. I. I. iv, 102.) |
பொற்கெனல் | poṟkeṉal, n. cf. பொருக்கெனல். Onom. expr. of suddenness; விரைவுக் குறிப்பு. பொற்கென் றெழுந்து முத்தந்தந்து (கனம் கிருஷ்ணையர், கீர்த். 17). |
பொற்பலகை | poṟ-palakai, n. <>பொன் +. Ornamental plank for carrying idols; விக்கிரகங்களையெடுத்துச் செல்லுதற்குரிய அலங்காரப் பலகை. பொற்பலகை யேறிவந்து பூங்கோயி லெய்தினான் (சிவக். பிரபந். தஞ்சைப்பெருவுடையாருலா, 312). |
பொற்பாளை | poṟ-pāḷai, n. <>id.+. A kind of paddy; நெல்வகை. (குருகூர்ப். 58.) |
பொற்பின்னல் | poṟ-piṉṉal, n. <>id.+. Waist-band woven of gold threads; பொற்கம்பியாற் பின்னிய அரைஞாண். திருவரையில் சாத்தின பொற்பின்னலும் (திவ். பெரியாழ். 1, 7, 3, வ்யா. பக். 142). |
பொற்பூ | poṟ-pū, n. prob. id.+. An ancient tax; பழைய வரிவகை. (M. E. R. 217 of 1927-8.) |
பொன்காண்(ணு) - தல் | poṉ-kāṇ-, v. intr. <>பொன் +. To test the quality of gold; மாற்றுக்காணுதல். பொன்காண்பார்க ளாகவும் (S. I. I. vi, 149). |
பொன்தாழை | poṉ-tāḻai, n. <>id.+. Yellow aloe; மஞ்சட்டாழை. (சித். அக.) |
பொன்பண்டாரவாசல் | poṉ-paṇṭāra-vācal, n. <>id.+ பண்டாரம் +. Treasury; பொக்கிஷம். (M. E. R. 681 of 1919.) |
பொன்வர்க்கம் | poṉ-varkkam, n. <>id.+. Money taxes; பணமாக வாங்கும் வரிகள். பல பொன்வர்க்கமும் (S. I. I. iv, 79). |
பொன்வன்னமீன் | poṉ-vaṉṉa-mīṉ, n. <>id.+ வண்ணம்+. A kind of fish; மீன்வகை. Pond. |
பொன்னரளி | poṉ-ṉ-araḷi, n. <>id.+. Common yellow trumpet-flowered tree; நாக செண்பகம். (B.) |
பொன்னாகம் | poṉ-ṉ-ākam, n. <>id.+. cf. பொன்னுடம்பு. Pudendum muliebre; பெண்குறி. (சங். அக.) |
பொன்னிப்பிளவை | poṉṉi-p-piḷavai, n. perh. id +. A kind of carbuncle; பிளவைவகை. (பரராச. i, 49.) |
பொன்னுருவிமாலை | poṉ-ṉ-uruvi-mālai n. <>id.+ உருவு-+. A kind pf necklace; கழுத்தணிவகை. பொன்னுருவிமாலைதரனக் கழுற்றியெறிவேன் (கோவ. க. 18). |