Word |
English & Tamil Meaning |
---|---|
மகாசப்தமி | makā-captami n. <>மகா+. The seventh day in the bright fortnight of the lunar month of mākam; இரதசப்தமி. (பஞ்.) |
மகாசூசிகை | makā-cūcikai n. <>id.+. Small-pox; பெரியம்மை. (தஞ். சர. iii, 68.) |
மகாதேவர் திருமஞ்சனம் | makātēvar-tirumacaṉam n. <>மகாதேவர்+. The submarine fire; வடவாமுகாக்கினி. (தக்கயாகப். 379, உரை.) |
மகாதோரணம் | makā-tōraṇam n. <>மகா+. A kind of temple lamp; கோயில்விளக்கு வகை. (M. E. R. 608 of 1916.) |
மகா நியோகம் | makā-niyōkam n. <>id.+. Royal command; அரசனது ஆணை. மகா நியோகமும் புறப்பட்டு (S. I. I. iv, 152). |
மகாப்பட்ட | makā-p-paṭṭa adv. <>id.+படு-. Very big; மிகப்பெரிய. Pond. |
மகாப்பிரதானன் | makā-p-piratāṉaṉ n. <>id.+. Commander-in-cheif; தலைமைச் சேனாபதி. (M. E. R. 497 of 1926.) |
மகாபலம் | makā-palam n. <>mahā-phala. Bael; வில்வம். |
மகாபூதகடிதானம் | makāpūtakaṭitāṉam n. A kind of gift; தானவகை. (S. I. I. vii, 21.) |
மகாபூரணசந்திரோதயம் | makāpūraṇa-cantirōtayam n. <>மகா+பூரணம்+. A kind of medicine; மருந்துவகை. (தஞ். சர. iii, 68.) |
மகாமிருத்துயஞ்சயம் | makā-miruttuyacayam n. <>id.+. A mantra; ஒரு மந்திரம். |
மகாயானம் | makā-yāṉam n. <>mahāyāna. A school of Buddhism; பௌத்தசமயவகை. (நீலகேசி, 342, உரை.) |
மகாவித்வான் | makā-vitvāṉ n. <>mahāvidvān. A title meaning ‘great scholar'; பெரும்புலவன் என்னும் பட்டம். |
மகாவேணு | makā-vēṇu n. <>மகா+. A great number; ஒரு பேரெண். (கணக்கதி. 80.) |
மகிமைச்சங்கம் | makimai-c-caṅkam n. <>மகிமை+. Legion of honour; பிரான்சு தேசத்துள்ள ஒருசார் பட்டதாரிகளின் சங்கம். Pond. |
மகிமைச்சவை | makimai-c-cavai n. <>id.+. See மகிமைச்சங்கம். Pond. . |
மகிமை நாடா | makimai-nāṭā n. <>id.+. Ribbon indicating a title or dignity; பட்டம் பதவிகளுக்கு அறிகுறியாக அணியும் நாடா. Pond. |
மகிமைப்பட்டாளம் | makimai-p-paṭṭāḷam n. <>id.+. Grand chancellery; அரசாங்க சபைவகை. Pond. |
மகிழம்பூத்தேன்குழல் | makiḻam-pū-t-tēṉkuḻal n. <>மகிழ்+பூ+. A kind of cake; மகிழம்பூப்பணிகாரம். |
மகிழிசை | makiḻ-icai n. <>மகிழ்-+. (Pros.) A kind of Centuṟai-p-pāṭṭu; செந்துறைப்பாட்டுள் ஒரு வகை (யாப். வி. 538.) |
மகுடரேகை | makuṭa-rēkai n. <>மகுடம்+. A line in the palm of hand, indicating prosperity; செல்வவளத்தைக் குறிக்குங் கையிரேகை வகை. (சிவக். பிரபந். பக். 342.) |
மகுமூது | makumūtu n. <>Arab. Muhammad. The Prophet Mahomed; முகம்மது நபிகள். (மஸ்தான். 122.) |
மகுளிபாய் - தல் | makuḷi-pāy- v. intr. <>மகுளி+. To become hard, as an arable land after heavy rains; பெருமழையால் நிலம் இறுகி விடுதல். Loc. |
மகேந்திரக்கணை | makēntira-k-kaṇai n. prob. mahēndra+. A kind of disease; கணை நோய்வகை. (பரராச. ii, 179.) |
மங்கஞ்சம்பா | maṅka-campā n. A kind of campā paddy, maturing in seven months; ஏழுமாதத்திற் பயிராகக்கூடிய சம்பாநெல்வகை. (விவசா. 2.) |
மங்களபௌளம் | maṅkaḷapauḷam n. (Mus.) A specific melody-type; இராகவகை. (பரத. ராக. பக். 103.) |
மங்குநார் | maṅku-nār n. <>மங்கு-+. Fibre of plants, dry and decayed; மக்கி உலர்ந்த நார். (திவ். அமலனாதி. 8, வ்யா. பக். 91.) |
மச்சவிளக்கம் | macca-viḷakkam n. <>மச்சம்+. Treatise on marine zoology; மீன்களைப் பற்றிய நூல். Pond. |
மச்சாவி | maccāvi n. of. மச்சாள்வி. Elder sister's husband; தமக்கையின் புருஷன். சங்கு முத்துசெட்டி யிவளுக்கு மச்சாவி (தெய்வச். விறலி விடு. 434). |
மச்சாழ்வி | maccāḻvi n. See மச்சாவி. (M. E. R. 479 of 1917-B.) . |
மச்சிகம் | maccikam n. <>மஞ்சிகன். Barber's work; நாவிதத் தொழில். (நீலகேசி, 280.) |
மச்சிகன் | maccikaṉ n. of. வைசிகன். Trader; வர்த்தகன். மச்சிகனெழுந்து கம்பவாணரை மகிழ்ந்துபோற்றி (திருவிரிஞ்சைப். வழித்துணை. 42). |