Word |
English & Tamil Meaning |
---|---|
ரங்கம் | raṅkam n. <>E. Rangoon; இரங்கோன். Loc. |
ரங்குபர்லா | raṅkuparlā n. A game of chance, played with cards; ஒருவகைச் சூதாட்டம். (கலைமகள், No. 54, 531.) |
ரங்கூன்மல்லிகை | raṅkūṉ-mallikai n. A kind of jasmine; மல்லிகைவகை. Loc. |
ரசசிந்தாமணி | raca-cintāmaṇi n. <>ரசம்+. A medicinal preparation; மருந்துவகை. (தஞ் சர. iii, 31.) |
ரசதைலம் | raca-tailam n. <>id.+. Honey; தேன். (பரி. அக.) |
ரசிகப்ரிய | racikapriya n. (Mus.) A primary rāga; மேளகர்த்தாக்களு ளொன்று. (சங். சந். 47.) |
ரசிதம் | racitam n. <>rajata. Silver; வெள்ளி. ரசிதஞ் சொன்னபாத்திரம் (நீதிசாரா, 6). |
ரசிதவேமம் | racita-v-ēmam n. prob. racita+. A medicinal preparation; மருந்துவகை. (தஞ். சர. iii, 43.) |
ரஞ்சனி | racaṉi n. A specific melody type; இராகவகை. (பரத. ராக. பக். 102.) |
ரஞ்சான் | racāṉ n. <>Arab. ramazān. The ninth Arabic month; அராபியர்களுடைய வருஷத்தின் ஒன்பதாவது மாதம். (பெதியவரு. 28.) |
ரணகாளி | raṇa-kāḷi n. <>ரணம்+. Bugle; ஊது கொம்புவகை. (தாசீல்தார்நா. பக். 49.) |
ரணவீரி | raṇa-vīri n. A village goddess; ஒருகிராமதேவதை. (பஞ்ச. திருமுக. 671.) |
ரத்தபேதி | ratta-pēti n. <>ரத்தம்+. Dysentery; வயிற்றளைச்சல். Loc. |
ரத்னாங்கி | ratṉāṅki n. (Mus.) A primary rāga; மேளகர்த்தாக்களு ளொன்று. (சங். சந். 47.) |
ரதகாரன் | rata-kāraṉ n. <>ratha-kāra. Carpenter, coach-builder; தச்சன். (I. M. P. Tp. 715.) |
ரப்பிசானி | rappicāṉi n. <>Arab. rabiuthzānī. The fourth Arabic month; அராபியர்களுடைய வருஷத்தின் நான்காவது மாதம். (பெரியவரு. 28.) |
ரப்பிலவ்வல் | rappilavval n. <>Arab. rabiulawwal. The third Arabic month; அராபியர்களுடைய வருஷத்தின் மூன்றாவது மாதம். (பெரியவரு. 28.) |
ரவிசு | ravicu n. cf. rava. Noise; இரைச்சல். ரவிசு பண்ணாதே. Loc. |
ரவைசல்லா | ravai-callā n. <>ரவை+. A kind of cloth; துணிவகை. ரவைசல்லா தான்மூடி நலமாகக் கொண்டுவந்தார் (கோவ. க. 37.) |
ரஜப் | rajap n. <>Arab. rajab. The seventh Arabic month; அராபியர்களுடைய வருஷத்தின் ஏழாவது மாதம். (பெரியவரு. 28.) |
ரக்ஷணம் | rakṣaṇam n. <>rakṣaṇa. Protection; பாதுகாப்பு. |
ராக்கடை | rākkaṭai n. <>ராக்கடி. A head-ornament, worn by women; ராக்கடி. (தாசீல்தார்நா. பக். 40.) |
ராக்கினி | rākkiṉi n. <>rajī. Queen; இராணி. விக்டோரிமகா ராக்கினியார் மெச்சுநரபாலன் (பஞ்ச. திருமுக. 56). |
ராகவர்த்தனி | rāka-varttaṉi n. <>rāga+. (Mus.) A primary rāga; மேளகர்த்தாக்களுளொன்று. (சங். சந். 47.) |
ராசமம் | rācamam n. (பரி. அக.) 1. Thorny plant; முள்ளி. 2. cf. இராசயுகம். Silvery leaved apeflower; |
ராசவாணன் | rāca-vāṇaṉ n. <>rajan+. A kind of paddy; நெல்வகை. மாராசவாண னென்றும் வாள்சுருணை வாலன் (நெல்விடு. 189, 190). |
ராசாங்கம் | rācāṅkam n. <>rājāṅga. Kingship; அரசு. ராசாங்கத்திலமலர்ந்தது வைதிகசைவம் (தாயு. ஆகார. 10). |
ராசிபாளையன்பணம் | rācipāḷaiyaṉ-paṇam n. A coin; நாணயவகை. (M. E. R. 225 of 1927-8.) |
ராசிபொன் | rāci-poṉ n. prob. ராசி+. A coin; நாணயவகை. (M. E. R. 303 of 1924.) |
ராசிரோசன்குளிகை | rācirōcaṉkuḷikai n. A coin; நாணயவகை. (M. E. R. 15 of 1924-c.) |
ராப்பு | rāppu n. Safety; பந்தோபஸ்து. வீடு அவந்தரையாயிருக்கிறது. ராப்பில்லை. Madr. |
ராமதுவாதசி | rāma-tuvātaci n. <>rāma+. The dvādašī tithi of the bright fortnight of the lunar month Jyēṣṭā; ஜ்யேஷ்ட மாதத்து சுக்கிலபட்சத்துத் துவாதசி. (பஞ்.) |
ராமபாணம் | rāma-pāṇam n. <>id.+. A kind of paddy; நெல்வகை. சீராம பாணமென்றும் கீர்த்தி படைத்ததல்லால் (நெல்விடு. 190). |