Word |
English & Tamil Meaning |
---|---|
அண்டையயல் | aṇṭai-y-ayal n. <>id.+. Neighbourhood; அக்கம்பக்கம். Colloq. |
அண்டைவெட்டு - தல் | aṇṭai-veṭṭu- v.intr. <>id.+. To cut or scrape ridge; வரப்பு வெட்டுதல். Loc. |
அண்ணகன் | aṇṇakaṉ n. cf. ṣaṇdaka. Eunuch; விரையெடுக்கப்பட்டவன். (W.) |
அண்ணணி | aṇṇaṇi adv. redupl.of அண்ணு- In close proximity; மிகவும் சமீபத்தில். (தொல்.எழுத்.246, உரை.) |
அண்ணணித்து | aṇṇaṇittu n. redupl. of அண்ணு-+. That which is close by, very near; மிகவும் சமீபமானது. அண்ணணித் தூராயின் (கலித்.108, 36). |
அண்ணந்தாள் | aṇṇan-tāḷ n. <>அண்+. Kind of torture. See அண்ணாந்தாள். (W.) |
அண்ணம் | aṇṇam n. <>id. [M.aṇṇam.] 1. Palate, roof of mouth; மேல்வாய்ப்புறம். அண்ண நண்ணிய பல் (தொல்.எழுத்.93). 2. Uvula; |
அண்ணமார்கல் | aṇṇam-ār-kal n. <>id.+. Upright bricks of a flat arch; கட்டடத்தில் தட்டை வளைவின் குத்துக்கல். Madr. |
அண்ணல் | aṇṇal n. <>id. 1. Greatness exaltation, loftiness; பெருமை. (பிங்.) 2. Superiority; 3. King; 4. Great man, superior; 5. Ruler in a forest-pasture tract; 6. God, deity; |
அண்ணன் | aṇṇaṉ n. <>id. [T.anna, K.aṇṇa, M.aṇṇan, Tu.aṇṇe.] Elder brother; தமையன். (பிங்.) |
அண்ணா 1 - த்தல் | aṇṇā- 12 v.intr. <>id. [K.aṇṇe, M.Tu.aṇṇā.] 1. To look upward; மேல்நோக்குதல். (நற்.10.) 2. To gape, open the mouth; 3. To hold the head erect; |
அண்ணா 2 | aṇṇā n. <>id. 1. Elder brother; அண்ணன். Colloq. 2. Father; |
அண்ணா 3 | aṇṇā n. <>id.+ நா Uvula; உண்ணாக்கு. அண்ணா வுரிஞ்சி மூக்குயர்த்தார் (சீவக.2703). |
அண்ணா 4 | aṇṇā n. <>அண்ணா-. cf. aruṇa. Tiruvaṇṇāmalai, a Siva shrine; திருவண்ணாமலை. (தேவா.756, 1). |
அண்ணாக்கு | aṇṇākku n. <>அண்+நாக்கு. [M.aṇṇākku.] Uvula; உண்ணாக்கு. |
அண்ணாச்சி | aṇṇācci n. <>அண்ணன். Elder brother; அண்ணன். South. |
அண்ணாத்தை | aṇṇāttai n. <>id. 1. Elder brother, sometimes in contempt; அண்ணன். North. 2. Idler, worthless fellow; |
அண்ணாந்தாள் | aṇṇān-tāḷ n. <>அண்+. Placing an individual in a stooping position, fastening a string to each great toe, passing the bight over the back of the neck, and putting a stone on his back; தண்டனைவகை. (E.T.) |
அண்ணாந்துபார் - த்தல் | aṇṇāntu-pār- <>அண்ணா-+. v.intr.; v.tr. To look upward; To look into, consider deeply; மேல் நோக்கிப்பார்த்தல். கூர்ந்து நோக்குதல். அண்ணாந்துபார்க்க வழியு முடம்பே (திருமந்.2139). |
அண்ணாமலை | aṇṇā-malai n. <>id.+. cf. aruṇa+. Tiruvaṇṇāmalai, a Siva shrine; திருவண்ணாமலை. (பெரியபு.திருஞான. 970.) |
அண்ணார் 1 | aṇṇār n. Honorific pl. of அண்ணன். Loc. |
அண்ணார் 2 | aṇṇār n. <>அண்ணு-+ஆ neg.+ ஆர். Enemies; பகைவர். அண்ணார் புரமவிய (உபதேசகா.திரிபுர.112). |
அண்ணாவி | aṇṇāvi n. <>அண்+ஆள்-. [M.aṇṇāvi.] 1. Teacher; உபாத்தியாயர். அவன் தன்னாலே தான் கெட்டால் அண்ணாவி என்னசெய்வான்? Colloq. 2. Dancing master, director of theatrical performances; 3. Master, superior, one in authority; |
அண்ணாழ்வி | aṇṇāḻvi n. <>id.+. Elder brother or cousin; தமையன். எங்க ளண்ணாழ்வி செய்த பணி (T.A.S.i, 103). |
அண்ணாளன் | aṇṇāṉaṉ n. cf. ṣaṇda. 1. Husband under the authority of his wife, henpecked husband; பெண்வழிச் சேர்வோன். Loc. 2. Hermaphrodite; |
அண்ணி 1 - த்தல் | aṇṇi- 11 v.intr. To taste sweet; தித்தித்தல். அண்ணிக்கு மமுதூறுமென்னா வுக்கே (திவ். கண்ணிநுண்.1). |
அண்ணி 2 | aṇṇi n. <>அண். Elder brother's wife; அண்ணன் மனைவி. அண்ணன்றான் கூடப் பிறந்தான், அண்ணி கூடப் பிறந்தாளா? Loc. |
அண்ணிமை | aṇṇimai n. <>அண்-மை. Nearness; சமீபம். (ஈடு.) |
அண்ணு - தல் | aṇṇu- 5 v.tr. 1. To approach, draw near; கிட்டுதல். அண்ணிய தாயு மகன்றும் (கூர்மபு.பொது.12). 2. To join, unite with; |
அண்ணெரிஞ்சான்பூண்டு | aṇṇericāṉ-pūṇṭu n.prob. அன்று+எரிந்தான்+ Species of Desmodium. See சிறுபுள்ளடி. (மூ.அ.) |