Word |
English & Tamil Meaning |
---|---|
அணையார் | aṇaiyār n. <>அணை1+ ஆ neg. + ஆர். Enemies, foes; பகைவர். அணையார்தம் படைக் கடலின் (பாரத பதினேழா. 260). |
அத்தகடகம் | atta-kaṭakam n. <>hasta+. Bracelet; கைவளை, அத்தகடகம்...தோள் வளை (அரிச். பு. விவாக. 118). |
அத்தகம் 1 | attakam n. <>hastaka. Castor-plant. See ஆமணக்கு. (மலை.) |
அத்தகம் 2 | attakam n. Black cumin, See கருஞ்சீரகம். (மலை.) |
அத்தகிரி. | atta-kiri. n <>asta+. Western Mountain. See அஸ்தகிரி. (சீவக. 18, உரை.) |
அத்தகோரம் | attakōram n. Emblic myrobalan. See நெல்லி. (W.) |
அத்தங்கார் | attaṅkār n. prob அத்தை. Father's sister's daughter; அத்தைமகள். Brāh. |
அத்தசாமம் | atta-cāmam n. <>ardha + Midnight. See அர்த்தசாமம் (W.) |
அத்தநாசம் | atta-nācam n. <>artha +. Loss of money, destruction of property; பொருட்கேடு (W.) |
அத்தநாரீசுரன் | atta-nārīcuraṉ n. <>ardha +. A manifestation of Siva. See அர்த்தநாரீசுரன் (W.) |
அத்தநாள் 1 | atta-nāḷ n. <>id. + Half a day; பாதிநாள். (திவா.) |
அத்தநாள் 2 | atta-nāḷ n. <>hasta+. The 13th nakṣatra. See அத்தம்3. . |
அத்தப்பிரகரன் | atta-p-pirakaraṉ n. <>ardha-prahara. (Astrol.) Planet subordinate to Mercury; ஓர் காணக்கோள். (சங். அக.) |
அத்தப்பிரபஞ்சம் | atta-p-pirapacam n. <>artha +. See அர்த்தப்பிரபஞ்சம். (சி.போ.பா.2,2,பக்.134,புது.) |
அத்தம் 1 | attam n. 1. Atis. See அதிவிடயம். (மூ. அ.) 2.Indian bdellium See குக்கில். 3 Species of Eclipta. See கரிசலாங்கண்ணி. |
அத்தம் 2 | attam n. <>T.addamu. Mirror: கண்ணாடி. அத்தமதின் முன்பின் போல் (வேதா. சூ. 108). |
அத்தம் 3 | attam n. <>adhavan. 1 Way; வழி (பிங்.) 2. Rough path, difficult course; 3.Jungle; |
அத்தம் 4 | attam n. <>abda. Year; ஆண்டு சகாத்தம். (கம்பரா. பாயி.) |
அத்தம் 5 | attam n. <>artha. 1. Wealth; பொருள். உண்டானவத்தமும் (அறப்.சத. 39). 2 Gold; 3.Meaning; |
அத்தம் 6 | attam n. <>ardha. Half; பாதி (பிங்.) |
அத்தம் 7 | attam n. <>asta. Western Mountain.See அஸ்தகிரி. அத்த மென்னும் பொன்னஞ் சிலம்பு (இறை.18,பக்.104). |
அத்தம் 8 | attam n. <>hasta. 1. Hand; கை (பிங்.) 2. The 13th nakṣatra, the constellation Corvus, as part of kaṉṉi-rāci; |
அத்தமம் | attamam n. See அத்தமயம் (W.) |
அத்தமயம் | attamayam n. <>astamaya. 1. Setting, as of the sun; அஸ்தமனம். அத்தமய வெற்படைந்தான் கதிராயிரத்தோன் (கந்தபு.தெய்வ. 146). |
அத்தமனம் | attamaṉam n. <>astamana. 1. Setting, as of the sun; கிரகங்கள் மறைகை அத்தமான முதய மில்லை (ஞானவா. தாசூர. 7). 2. Destruction; |
அத்தமானம் | atta-māṉam n. <>vardhamāna. Castor-plant. See ஆமணக்கு. (மூ.அ.) |
அத்தமி - த்தல் | attami- 11 v.intr. <>asta. To set, as the sun; அஸ்தமித்தல். |
அத்தர் | attar n. <>U. 'atr, 'iṭr. Attar, fragrant essential oil, esp. of rose petals; ரோஜா முதலிய பூச்சாரம். புனுகத்தர் சேர்த்தணியவில்லை (தனிப்பா. i,389,44). |
அத்தரசிதம் | attara-citam n. Native hydrous silicate of zinc, calamin; மடல்துத்தம். (மூ.அ.) |
அத்தவசனம் | atta-vacaṉam n. <>artha +. Word that exactly expresses one's meaning; நினைத்தபொருளை விளக்குஞ்சொல், வைகரி செவியிற் கேட்ப தாயத்த வசன மாகி (சி.சி.1, 20). |
அத்தவாளம் | atta-vāḷam n. 1. prob. hasta+ Mhr. -vālā. Upper-garment; மேலாடை (பிங்.). 2. Outer end of a cloth 3. Jungle; |
அத்தன் 1 | attaṉ n. cf. Pkt. attā. 1. Father; தகப்பன். என்னத்தனை வென்றிசை கொண்டிலனோ (கந்தபு. காமதக. 10). 2 Elder; 3. Priest; 4.Person of rank or eminence; 5. Siva, Viṣṇu, Arhat; |
அத்தன் 2 | attaṉ n. prob. அத்து-. 1. Chebulic myrobalan. See கடுக்காய். (மூ.அ) 2. White lead; |
அத்தனை | a-t-taṉai adj. <>அ + தனை 1. So many. அத்தனை மரங்கள். 2. Of such size or measure; |