Word |
English & Tamil Meaning |
---|---|
அத்தியானம் | attiyāṉam n. <>adhyayana. Learning, studying, esp. the vēda; வேதமோதுகை. அத்தியான மாமினையர் கத்துவதும் (பிரபோத. 11,4). |
அத்தியூர் | atti-y-ūr n. <>hastin+. Little Conjeevaram which has a Viṣṇu shrine; காஞ்சியிலுள்ள ஒரு விஷ்ணு ஸ்தலம். (யாப். வி.93, பக். 351.) |
அத்திரசத்திரம் | attira-cattiram n. <>astra+šastra. Missiles and weapons.See அஸ்திர சஸ்திரம். (பிங்.) |
அத்திரதேவர் | attira-tēvar n. <>id. + Weapon-god taken round the streets during festivals. See அஸ்திர தேவர். (திருவானைக்.திருவிழா. 11.) |
அத்திரபரீட்சை | attira-parīṭcai n. <>id. + Archery, one of aṟupattunālu-kalai, q.v.; அறுபத்து நாலு களையுல் ஒன்றாகிய வில்வித்தை. |
அத்திரம் 1 | attiram n. cf. atya. 1. Horse குதிரை. (வரத. பாகவத. பரீட்சித். சன. 10.) 2. Ass; |
அத்திரம் 2 | attiram n. <>astra. Missile; கைவிடுபடை. அத்திரமே கொண்டெறிய (திவ். பெரியாழ். 3,10,6.) |
அத்திரம் 3 | attiram n. <>a-sthira. That which is unstable; நிலையற்றது. அகிலவான் பொருள்க ளியாவு மத்திர மென்றும் (நல். பாரத. கிருட்டிணா. 49) |
அத்திரம் 4 | attiram n <>adri. Mountain; மலை. (அக. நி.) |
அத்திரம் 5 | attiram n. cf. badara. Jujube tree. See இலந்தை. (மூ.அ.) |
அத்திரயூகம் | attira-yūkam n. <>astra+vyūha. Arrow-shaped battle array; படைவகுப்பு வகை. (பாரத. பதினெட். 15.) |
அத்திரி 1 | attiri n. cf. atya. 1. Camel; ஒட்டகம். (பிங்.) 2. Hourse; 3.Ass; 4. Mule; 5. Forge, bellows; |
அத்திரி 2 | attiri n. <>Atri. 1. Name of a sage; ஒரு முனிவர். (பாரத. குருகுல. 5) 2. A Sanskrit text-book of Hindu law, ascribed to Atri, one of 18 taruma-nūl, q.v.; |
அத்திரி 3 | attiri n. <>adri. Mountain; மலை. அத்திரிதனிற் புகாது (இரகு. திக்குவி. 263). |
அத்திரி 4 | attiri n. <>astra. Arrow; அம்பு. (சூடா.) |
அத்திரு | attiru n. Pipal. See அரசு. (மலை.) |
அத்திலை | attilai n. Species of Coldenia. See செருப்படை. (மூ.அ.) |
அத்திவாரம் | attivāram n. <>U. ustuwār. Foundation; அஸ்திபாரம் அத்திவார மிருத்தி (அரிச். பு. இந்தி. 19). |
அத்தினபுரம் | attiṉapuram n. <>Hastinapura. Hastinapura. See அஸ்தினாபுரம் (சீவக 2182, உரை.) |
அத்தினாபுரி | attiṉāpuri n, <>HastinApurī. Hastinapura. See அஸ்தினாபுரம் (பாரத. குருகுல. 29) |
அத்தினி | attiṉi n. <>hastinī. 1. Female elephant; பெண்யானை (பிங்.) அஸ்தினாபுரம் (பாரத. குருகுல. 29) 2. (Erot.) Woman of elephant-like nature, one of three makaḷircāti, q.v., or one of four peṇ, q.v.; |
அத்து 1 - தல் | attu- 5 v.tr. [T. attu, K. hattisu.] 1. To unite, as two or more parts, make to fit in with one another; இரண்டுதுண்டை ஒன்றாய்ப் பொருத்தியிசைத்தல். அத்தித்தைத்தான் (w.) 2.To apply, as medicine to a wound; 3. To lean on; 4. To reach; |
அத்து 2 | attu n. <>அத்து-. 1. Sewing; தயல். (பிங்.) 2. Girdle, waist ornament; 3. Redness; 4. Astringents; 5. Bark of common cadamba; 6. Bark of sage-leaved alangium; |
அத்து 3 | attu part. A euphonic increment usu. inserted between a noun which ends in அம் and its case-ending (அம் being dropped), as in மரத்தை from மரம்; ஒரு சாரியை. |
அத்து | attu n. <>U. hadd. Boundary, limit; எல்லை. அத்துமீறி நடவாதே. |
அத்துகம் | attukam n. cf. hasti-karṇā. Castor-plant. See ஆமணக்கு. (மலை) |
அத்துகமானி | attukamāṉi n. Pipal. See அரசு. (மலை.) |
அத்துச்சம் | attuccam n. <>atyucca. (Astrol.) Highest position of a planet; கிரகத்தின் நல்லுச்சநிலை. (சங். அக.) |
அத்துமம் | attumam n. Galangal. See அரத்தை. (மூ. அ.) |
அத்துமானி | attumāṉi n. Pipal See. அரசு. (மலை.) |