Word |
English & Tamil Meaning |
---|---|
கத்திக்காணம் | katti-k-kāṇam n. <>கத்தி +. Tax on weapons like swords, knives, etc.; tax on arms; ஆயுதவரி. கூலமுந் தரகுங் கத்திக்காணமும் (S.I.I. i, 151). |
கத்திக்குழாய் | katti-k-kuḻāy n. <>id. +. Bamboo or other tube for administering medicine to animals; பிராணிகளுக்கு மருந்துவார்க்குங் குழாய். Colloq. |
கத்திக்கோரை | katti-k-kōrai n. <>id. +. A kind of sedge. See பெருங்கோலை. Loc. . |
கத்திகட்டி | katti-kaṭṭi n. <>id. + கட்டு-. 1. Warrior, carrying a sword; போர்வீரன். 2. Sword-dancer, man or woman; |
கத்திகட்டிச்சேவல் | katti-kaṭṭi-c-cēval n. <>id. +. Fighting cock, having knives with sharp blades fastened to its spurs; கால்களிற் கத்திகட்டிச் சண்டைக்கு விடப்படுஞ் சேவல். |
கத்திகை 1 | kattikai n. 1. Perh. kartarikā. A kind of garland; மாலைவகை. செங்கழநீ ராயிதழ்க் கத்திகை (சிலப். 8, 47) 2. Common Delight of the Woods. See குருக்கத்தி. (சீவக. 971.) 3. Jagged Jujube. See கருக்குவாய்சி. (மலை.) |
கத்திகை 2 | kattikai n. Corr. of கதலிகை. Banner, streamer, small flag; சிறுதுகிற்கொடி. (திவா.) |
கத்திதீட்டு - தல் | katti-tīṭṭu- v. intr. <>கத்தி +. 1. To grind or sharpen cutting instruments; வெட்டுங்கருவிகளைக் கூர்மைப்படுத்துதல். 2. To be at daggers drawn; to be on hostile terms; 3. To bide one's time seeking opportunities to injure; |
கத்திதீட்டுவான் | katti-tīṭṭuvāṉ n. <>id. +. Knife-grinder, an itinerant grinder or sharpener of knives, scissors and cutting instruments; வெட்டுங்கருவிகளைக் கூர்மைப்படுத்தும் தொழிலாளி. |
கத்திநுணா | katti-nuṇā n. <>id. +. Creat. See நிலவேம்பு. (மலை.) . |
கத்திமந்து | katti-mantu n. prop. id. + T. mandu. Cement plant. See மண்டங்கள்ளி. (M.M.) . |
கத்திமுனையா - தல் | katti-muṉai-y-ā- v. intr. <>கத்தி +. To be very strict and severe, as the cutting edge of a knife; மிகக் கண்டிப்பாயிருத்தல். |
கத்தியம் 1 | kattiyam n. cf. சுத்தியம். [Pkt. katīa. U. kātnā.] A kind of cloth of superic quality; நல்லாடை வகை. (திவா.) |
கத்தியம் 2 | kattiyam n. <>gadya. Prose in literary style, opp. to பத்தியம் வசனநடை. கத்தியங்கட்டுரை (வீரசோ. யாப். 6). |
கத்திரி 1 | kattiri n. <>கத்தரி1. Brinjal. See கத்தரி1. Vul. . |
கத்திரி 2 | kattiri n. cf. kartarī. 1. An inauspicious day; ஓர் அசுபநாள். (விதான. குணா குண. 48.) 2. See கத்தரிவிரியன். 3. A kind of drum; |
கத்திரி 3 | kattiri n. <>kṟttikā. See கத்திரி. கத்திரிவெய்யில் . |
கத்திரி 4 | kattiri n. <>Guj. khatri. Dialect of Gujarāti and the spoken language of the Saurāṣtras in the Tamil country; தமிழ்நாட்டிலுள்ள சௌராஷ்டிரர் பேசும் பாஷை. (G. Madu. D. 74.) |
கத்திரிக்கள்ளன் | kattiri-k-kaḷḷaṉ n. <>கத்தரி2 + கள்ளன். A pick-pocket; முடிச்சுமாறி. Loc. |
கத்திரிகை | kattirikai n. See கத்தரி 2, 3. கத்திரிகை துத்திரி . . . கருவித்திர ளலம்ப (தேவா. 837, 5). . |
கத்திரிசோத்திகம் | kattiri-cōttikam n. <>kartarī + svastika. (Nāṭyā.) Gesture with both hands in which the fore-fingers of either hand are stretched out together whilst the rest are kept bent to represet a pair of scissors, ear of corn, etc.; இணைக்கை அபிநயவகை. (பரத. பாவ. 64.) |
கத்திரிணி | kattiriṇi n. Teak. See தேக்கு. (மலை.) . |
கத்திரிநாயகம் | kattiri-nāyakam n. See கத்தரிநாயகம். . |
கத்திரிபாவல் | kattiri-pāval n. See கத்திரி பாவிலி. கத்திரி பாவல் செவிபுணையா (தனிப்பா. ii, 250, 590). . |
கத்திரிபாவிலி | kattiri-pāvili n. <>kartarī +. [T.katterabāvillu, k. kattaribāvuli.] An ornament for the ear, made of gold and gems worn by women near the top of each ear; மகளிர் காதணிவகை. |
கத்திரிமணியன் | kattiri-maṇiyaṉ n. See கத்தரிமணியன். (W.) . |
கத்திரியம் | kattiriyam n. Worm-killer, woody climber. See ஆடுதின்னாப்பாளை. (மலை.) . |
கத்திரியன் | kattiriyaṉ n. <>kṣatriya. Kṣatriya, man of the warrior caste, the second of the four castes; இரண்டம் வருணத்தான் கத்திரியர்காண (திவ், பெரியாழ். 1, 9, 6). |