Word |
English & Tamil Meaning |
---|---|
கதி 4 - த்தல் | kati 11v. <>gati.intr. 1. To hasten, move rapidly; விரைதல். அரியேறு கதித்தது பாய்வது போல் (கம்பரா. பஞ்சசே. 56). 2. To go, move, proceed; 3. To rise, to be high, to grow high; to start; 4. To become large, to grow big; 5. To attain final bliss; 6. To abound; 1. To exceed in quality; to outweight; to be superior to; to outdo, outstrip, outmatch; 2. To know, understand; |
கதிக்க | katikka adv. <>கதி1 -. 1. Stralight, directly; நேராக. நீ கதிக்கப் போனால் அந்த இடத்தை அடையலாம். Tinn. 2. Thickly; |
கதிக்கும்பச்சை | katikkum-paccai n. prob. கதில்- +. A kind of emerald. See நாகப்பச்சை. (W.) . |
கதிக்கை | katikkai n. See கருக்குவாய்ச்சி. (W.) . |
கதிடை | katiṭai n. Var. of. கதிரை. (J.) . |
கதித்தவிலை | katitta-vilai n. <>கதி4- +. (W.) 1. High price; உயர்விலை. 2. Exorbitant price; |
கதிதம் | katitam n. <>kathitha. That which has been marrated or described; சொல்லப்ட்டது. கதித மகபாதகந்தன்னில் (சிவதரு. பாவ. 102). |
கதிப்பு | katippu n. <>கதி4 -. Thickness; இறுகல். கதிப்பையுடைத்தான வண்டல்கள் (திவ். திரு வய். 6, 1, 5, , பன்னீ.). |
கதிப்பொருத்தம் | kati-p-poruttam gati +. Rule of propriety which enjoins that as the letters of the alphabet are divided into four gati, viz., ஐ உ எ ச ட த ப தெய்கதி, அ ஈ ஊ ஏ ந ண ந ம மக்கட்கதி, ஒ ஓ யரல ழ ற விலங்குகதி, ஜ ஒஉ வ ள ன நரககதி செய்யுண்ண்முதன்மொழிப் பொருத்தங்களுள் ஒன்று. (வெண்பாய், முதன்18, |
கதிமி | katimi n.<> U. kadīm. Head ryot, hereditary cultivator; தலைமைக்குடியானவன். (W.) |
கதிமை | katimai n. <>கதி 4 -. of garimā Largeness, greatness; பருமை. (W.) |
கதிமோட்சம் | kati-mōṭcam n. <>gati +. Remedy; way out of a difficulty; salvation; பரிகாரம். அவனுக்குக் கதிமோட்சம் ஒன்றும் இல்லையா? Colloq. |
கதியற்றவன் | kati-y-aṟṟavaṉ n. <>id. +. Destitute, impoverished man; மிகவறியவன். |
கதியால் | katiyāl n. Stakes for hedging; வேலியில் நாட்டுங் கிளை. (J.) |
கதிர் 1 | katir n. cf. ghasra. [K. Kadir, M. katir.] 1. Ray of light, beam, gleam; கிரணம். தண்கதிர்மதியம் (புறநா. 6, 27). 2. Light; 3. Sunlight; 4. Sun or moon; sun and moon; 5. Ear of grain, spear of grass; 6. [T. kaduru.] Spinner's spindle; 7. See கதிரிக்கோல். (W.) 8. Spoke of a wheel; radius of a circle; |
கதிர் 2 - த்தல் | katir- 11 v. intr. <>கதிர். 1. To shine; glow; பிரகாசித்தல். கதிர்த்த நகை மன்னும் (திருக்கோ, 396). 2. To become manifest; 3. To abound, increase; 4. To be conceited, puffed up; |
கதிர்க்கட்டு | katir-k-kaṭṭu n. <>id. +. Sheaf; அரிக்கட்டு. |
கதிர்க்கடவுள் | katir-k-kaṭavuḻ n. <>id. +. Sun, as the radiant deity; சூரியன். கனைகதிர்க் கடவுள் (சீவக. 1943). |
கதிர்க்கம்பி | katir-k-kampi n. <>id. +. See கதிர்க்கோல். (W.) . |