Word |
English & Tamil Meaning |
---|---|
கம்பக்கூத்து | kampa - k -kūttu n. <>id. +. Pole dancing; acrobatic performance கழைக்குத்து |
கம்பங்களி | kampaṅ - kaḷi n. <> கம்பு + . Porridge made of the flour of Bulrush Millet கம்புமாவாற் சமைத்த களி |
கம்பங்கொளுத்து - தல் | kampaṅ - koḷuttu- v. intr. <> கம்பம்1 +. To ignite fire-works fastened to a post கம்பவாணத்துக்கு நெருப்புவைத்தல். Loc. |
கம்பங்கோரை | kampaṅ - kōrai n. <>கம்பு +. Bulrush, 1. sh., Typha elephantina கோரை வகை |
கம்பசூத்திரம் | kampa - cūttiram n. <>கம்பன் + . Stanzas composed by Kambar in his Rāmāyana, in such a way that the real purport thereof is but suggestive and is not easily apparent on the surface உய்த்துணர்பொருளவாய்க் கம்பர் தம் இராமாயணத்தில் அமைத்த அருங்கவி |
கம்பஞ்சம்பா | kampa - campā n. <> கம்பு +. A kind of paddy resembling Bulrush Millet; சமபாநெல்வகை |
கம்பட்டக்காரன் | kampaṭṭa-k-kāraṉ n. <>கம்பட்டம்+. Coiner; நாணயம்செய்வோன். (W.) |
கம்பட்டக்கூடம் | kampaṭṭa-k-kūṭam n. <>id.+. Mint; நாணயசாலை. (W.) |
கம்பட்டம் | kampaṭṭam n. [K. kammaṭa, M. kammṭṭam.] coinage, coin; நாணயம். (W.) |
கம்பட்டமுளை | kampaṭṭa-muḷai n. <>id.+. Die, coining stamp; நாணயமுத்திரை. (w.) |
கம்படி | kampaṭi n. <>கம்பு + அடி. Plot of land on the outskirts of a village set apart for growing Bulrush Millet; ஊர்ப்புறத்துக் கம்பு விளைவிக்கும் நிலம். (G. Tn. D. i, 159.) |
கம்பத்தக்காரன் | kampatta-k-kāraṉ n. <>T. kammatamu+. One who owns landed property; பூஸ்திதியுடையவன். ஏமூர்க்கம்பத்தக்காரன். Loc. |
கம்பத்தம் | kampattam n. <>T.kammatamu. 1. Agriculture, cultivation by the owner with his own stock; சொந்த விவசாயம் 2. Agricultural land; |
கம்பத்து 1 | kampattu n. <>U. gammat. Pomp, splendour; இடம்பம். (W.) |
கம்பத்து 2 | kampattu n. <>Port. gamote. Leakage in a ship; கப்பலில்விழம் ஓட்டை. Naut. |
கம்பத்துப்பார் - த்தல் | kampattu-p-pār- v. intr. <>id.+. To stop a ship's leak; கப்பலின் ஒட்டையையடைத்தல். (W.) |
கம்பதாளி | kampatāḷi n. A kind of hysteria; ஒருவகைநோய். சூலைநோய் கம்பதாளி குன்மமும் (தேவா. 995, 4, ). |
கம்பந்தட்டு | kampan-taṭṭu n. <>கம்பு +. See கம்பந்தட்டை. . |
கம்பந்தட்டை | kampan-taṭṭai n. <>id. +. Straw of the Bulrush Millet; கம்பங்கதிரின்தாள். |
கம்பந்தாளி | kampan-tāḷi n. <>id. +. Convolvulus; தாளிக்கொடிவகை (யாழ்.அக.) |
கம்பந்திராய் | kampan-tirāy n. <>id. +. A kind of wild Chickweed, Pharnaceum; திராய்ப் பூண்டின்வகை. |
கம்பநாட்டாழ்வான் | kampa-nāṭṭāḻvāṉ n. <>கம்பநாடு+. Poet Kamban, spoken of as a devotee of Visnu. See கம்பன். ஆதித்தன் கம்பநாட்டழ்வான் கவி (கம்பரா. தனி1). |
கம்பநாடன் | kampa-nāṭaṉ n. <>id. Poet kamban, so called because he lived probably in Kamba-nāṭu. See கம்பன். கம்பநாடன் சொன்ன மும்மணிக்கோவை (தமிழ்நா.102). |
கம்பநாடு | kampa-nāṭu n. A district in Cōḻa-nāṭu so called because kamban, the celebrated poet probably lived there; சோணாட்டைச்சார்ந்த்தோர் நாடு. கம்பநாடுடைய வள்ளல் கவிச் சக்கரவர்த்தி (கம்பரா. தனி. 6). |
கம்பபாணம் | kampa-pāṇam n. <>கம்பம்1+. See கம்பவாணம். . |
கம்பம் 1 | kampam n. <> Pkt. khambha. <> stambha. 1. Post, pillar; தூண். (திவா.) 2. Lamp-stand, candlestick; |
கம்பம் 2 | kampam n. <>kampa. 1. Vibration, shaking, motion; அசைவு. கம்ப மில்லாக்கழிபெருஞ் செல்வர் (மணி. 17, 63). 2. Tremor, tremulousness, quaking; |
கம்பம் 3 | kampam n. <>ēkāmra. The Siva shrine at conjeevaram; கச்சியேகாம்பரர் கோயில் கண்ணுதற் பரமற்கிடங் கம்பமே (தேவா. 1035, 1). |
கம்பம் 4 | kampam n. Mineral poisons in the forms, தாலம்பம், வெள்ளை, சாலாங்கம், கற்பரி; தாலம்பம் முதலிய பாஷாணங்கள். (மூ. அ.) |
கம்பம்புல் | kampam-pul n. <>கம்பு+. Stalk Grass, Bulrush Millet, Panicum grossarium; புல்வகை (W.). |
கம்பராமாயணம் | kampa-rāmāyaṇam n. <>கம்பன்+. The story of the Rāmāyana written in Tamil by the poet Kamban; கம்பரியற்றிய இராமாயண காவியம். |
கம்பரிசி | kamparici n. <>கம்பு+. Husked grain of Bulrush Millet; கம்புத்தானியம். |