Word |
English & Tamil Meaning |
---|---|
கம்பாகம் | kampākam n. Ship's cable; கப்பற்கயிறு. (W.) |
கம்பாயம் | kampāyam n. <>U. cambāy. Tartan waist cloth, in chequered designs worn by Muhammadans in the Straits and in Ceylon; ழகம்மதியர் உடுக்கும் கைலித்துணி. |
கம்பான் | kampāṉ n. See கம்பாகம். (W.) . |
கம்பி 1 | kampi n. 1. [T. K. M. Tu. kampi.] Wire of gold, silver, iron or other metal; பொன், இரும்பு ழதலியவற்றின் கம்பி. கம்பியர். . . கம்பிவாங்கு மச்சென (இரகு. திக்கு. 189). 2. A kind of ear-ring; 3. Bit of a horse's bridle; 4. Narrow stripe along the border of a cloth; 5. Narrow moulding in carpenter's or mason's work; 6. Saltpetre; 7. A mineral poison; 8. Money; 9. cf. kambi. Joist, beam, slender post; |
கம்பி 2 - த்தல் | kampi- 11 v. <>kampa. intr. 1. To toss, shake; அசைதல். கம்பித் தலையெறிநீர் (கம்பரா. பரசுராமப். 8). 2. To tremble, quake; 3. To roar, sound; 1. To shake, vibrate; 2. To cause to tremble; to frighten; |
கம்பி 3 | kampi n. 1. Carey's Myrtle Bloom, 1. tr., Careya arbore ; ஒறுவகைமரம். 2. See கம்ளிப்பிசின். (M. N. A. D. i, 29.) |
கம்பிக்கடுக்கன் | kampi-k-kaṭukkaṉ n. <>கம்பி1 +. Ear-ring formed of a wire of metal; கம்பியாற்செய்த கடுக்கன். (W.) |
கம்பிக்கரை | kampi-k-karai n. <>id. +. Narrow stripe along the border of a cloth; ஆடையின் ஓரச்சிறுகரை. Colloq. |
கம்பிக்காரன் | kampi-k-kāraṉ n. <>id. +. Moneyed man; காசுக்காரன். (W.) |
கம்பிக்குறி | kampi-k-kuṟi n. <>id. +. See கம்பிக்கரை. (W.) . |
கம்பிகட்டு - தல் | kampi-kaṭṭu- v. tr. <>id. +. 1. To form or make the border of a cloth, as a dyer; ஆடைக்குச் சாயக்கரையிடுதல். 2. To make a narrow moulding; 3. To fasten with wire, as a jewel, an umbrella; |
கம்பிகாட்டு - தல் | kampi-kāṭṭu- v. intr. <>id. +. See கம்பிநீட்டு-. Loc. . |
கம்பிகை | kampikai n. A kind of drum; ஒருவகை வாத்தியம். (சங். அக.) |
கம்பிச்சு | kampiccu n. See கம்பியச்சு. Loc. கம்பியச்சு |
கம்பிச்சேலை | kampi-c-cēlai n. <>கம்பி+. Woman's cloth with striped border; கம்பிக்கரையிடப்பெற்ற சேலை. (W.) |
கம்பிச்சோமன் | kampi-c-cōmaṉ n. <>id. +. Man's cloth with a thin striped border; கம்பிக்கரையுள்ள வேஷ்டி. |
கம்பிதம் | kampitam n. <>kampita. 1. Quivering, quaking, trembling, shaking; நடுக்கம். கம்பிதமுங் கண்ணீறும் வரக்கவற்சி யுறும்போதில் (திருவாத. பு. மண்சுமந்த. 56). 2. (Mus.) Tremola, a trill, one of ten kamakam, q.v.; |
கம்பிநீட்டு - தல் | kampi-nīṭṭu- v. intr. <>கம்பி1+. To run away, go off slily, steal away, take to one's heels; ஓடிவிடுதல். Colloq. |
கம்பிப்பிசின் | kampi-p-piciṉ n. <>id. +. Dikmali gum; ஒருவகை மரப்பிசின். (W.) |
கம்பிமணி | kampi-mani n. <>id. +. A kind of wire necklace; ஒருவகைக் கழத்தணி. (W.) |
கம்பியச்சு | kampi-y-accu n. <>id. +. [M. kambiyacca.] Perforated iron plate used by goldsmiths and silversmiths for drawing out wire; கம்பியிழக்கும் தட்டார்கருவி. |
கம்பியிழு - த்தல் | kampi-y-iḻu- v. intr. <>id. +. To draw out wire; பொற்கம்பிழதலியன நீளச் செய்தல். Colloq. |
கம்பியுப்பு | kampi-y-uppu n. <>id. +. A superior kind of saltpetre in bars or pieces. See வெடியுப்பு. (W.) . |
கம்பில் | kampil n. 1. See கம்பி3. . 2. Broadleaved Gardenia, M. tr., Gardenia latifolia; |
கம்பிலி 1 | kampili n. See கம்பி3. (B.) . |
கம்பிலி 2 | kampili n. <>Kāmpila. A city in N. India; வடநாட்டு ஓரூர். கம்பிலிச்சயத் தம்பநட்டதும் (கலிங். 190, புதுப்.) |
கம்பிலிப்பிசின் | kampili-p-piciṉ n. cf. கம்பளிப்பிசின். Dikmali gum-plant. See திக்காமல்லி. . |